“கொள்கை வேறு… கூட்டணி வேறு” – காங்கிரஸின் ‘வெள்ளைத் துணி’ போராட்டத்துக்குப் பின் கே.எஸ்.அழகிரி கருத்து

கடலூர்: “பேரறிவாளன் குற்றவாளி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவில்லை; ஆளுநர் காலம் தாழ்த்தியதால் அவர் விடுவிக்கப்பட்டார்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்நிலையில், பேரறிவாளன் விடுதலை தொடர்பான உணர்வை வெளிப்படுத்தும் வகையில் வெள்ளைத் துணியால் வாயைக் கட்டி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் … Read more

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது: உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளை வழங்கலாம், ஆனால் மத்திய, மாநில அரசுகளை அவர்கள் நிர்ப்பந்திக்க முடியாது, மத்திய, மாநில அரசுகளுக்கு சமமான அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக சரக்கு மற்றும் சேவை வரிஜிஎஸ்டி வரி தற்போது அமலில் உள்ளது. ஜிஎஸ்டி என அழைக்கப்படும் இந்த வரி வருவாயை மாநில அரசுகளும், மத்திய அரசும் பகிர்ந்து கொள்கின்றன. ஜிஎஸ்டி … Read more

ரணில் பிரதமரானதை இலங்கை மக்கள் கடுமையாக எதிர்க்காததது ஏன்? – ஒரு விரைவுப் பார்வை

இலங்கையில் மிக நீண்ட அரசியல் அனுபவத்தைக் கொண்டிருக்கும் ரணில் விக்ரமசிங்க கடந்த 12-ம் திகதி இலங்கையின் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கிறார். ஜனாதிபதி, ரணிலைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இருக்கிறது. கடந்த ஆட்சியிலும் பிரதமராகப் பதவி வகித்துத் தோல்வியுற்றிருந்த ரணில், ராஜபக்‌ச குடும்பத்தின் நெருங்கிய நண்பர் என்பதால், என்னதான் வெளிப்பார்வைக்கு ராஜபக்‌ச குடும்பத்தின் குற்றங்கள்மீது, தான் உக்கிரமாக இருப்பதுபோல அவர் காட்டிக்கொண்டாலும், அவர்களுக்கிடையில் நட்புரீதியான மென்மையான அணுகுமுறையே இருந்துவருகிறது. இது ராஜபக்‌ச குடும்பத்துக்கே சாதகமாக அமையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் … Read more

எடப்பாடி பழனிசாமியுடன் பேரறிவாளன் சந்திப்பு

சென்னை: முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை பேரறிவாளன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பேரறிவாளனுக்கு வாழ்த்துகளை கூறினர். முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் வாழ்த்து பெற்றனர். இதைத் தொடர்ந்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற … Read more

பேரறிவாளன் விடுதலை: வெள்ளைத் துணியால் வாயைக் கட்டிக் கொண்டு தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

சென்னை: பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வெள்ளைத் துணியால் வாயைக் கட்டிக் கொண்டு காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக் கோரிய வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, … Read more

கருக்கலைப்புக்கு பெற்றோர் அனுமதி தேவையில்லை; மாதவிடாய் விடுமுறை: சட்ட மசோதாவுக்கு ஸ்பெயின் ஒப்புதல்

16 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் கருக்கலைப்பு செய்துகொள்ள பெற்றோரின் அனுமதியைப் பெறத் தேவையில்லை என்ற சட்ட மசோதாவுக்கு ஸ்பெயின் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதுபோலவே, மகளிர்க்கு மாதந்தோறும் மாதவிடாய் விடுமுறை வழங்க வழிவகை செய்துள்ளது. தங்களின் உடல் சார்ந்த முடிவுகளை பெண்கள் சுயமாக எடுப்பதை உறுதி செய்ய இந்த திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவின்படி 16 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் தாங்கள் கருவை சுமக்க விரும்பவில்லை … Read more

கோவை மாவட்டத்திற்கு தனியாக மாஸ்டர் பிளான் தயார் செய்யப்படும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டு துலங்காத துறையும் இல்லை. கோவை மாவட்டத்திற்கு தனியாக மாஸ்டர் பிளான் தயார் செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக கோவை மற்றும் நீலகரி மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். இதன்படி இன்று காலை கோவை வஉசி மைதானத்தில் ‘பொருநை’ அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் ஓராண்டு சாதனை விளக்க ஓவியக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தனியார் விடுதியில் தொழில்துறையினருடன் … Read more

கியான்வாபி சர்ச்சை | அணுஉலையுடன் சிவலிங்கத்தை ஒப்பிட்ட மஹூவா மொய்த்ரா: குவியும் கண்டனங்கள்

கியான்வாபி மசூதி சர்ச்சையில் கருத்து தெரிவித்துள்ள திரிணமூல் எம்.பி. வாட்ஸ் அப்பில் வலம் வந்த மீமை எடுத்து பாபா அணு உலையையும், சிவலிங்கத்தையும் ஒப்பிட்டு ட்வீட் செய்தது கடும் கண்டனங்களை பெற்றுள்ளது. வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் சிங்காரக் கவுரி அம்மன் சிலை உள்ளது. அம்மனை தரிசிக்கும் வழக்கில், நீதிமன்றக் களஆய்வு நடைபெற்றது. இதில், தொழுகைக்கு முன் கை, கால்களை கழுவும் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாக புகார் செய்யப்பட்டது. … Read more

பருத்தி, நூல் விலையைக் கட்டுப்படுத்துக: மத்திய அமைச்சரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சரை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியிறுத்தினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (19.5.2022) மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பருத்தி மற்றும் … Read more

கியான்வாபி மசூதி சர்ச்சை | வீடியோ ஆய்வறிக்கை உ.பி. நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

கியான்வாபி மசூதியில் மேற்கொள்ளப்பட்ட வீடியோ பதிவு தொடர்பான அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் வைத்து உத்தரப் பிரதேச நீதிமன்றத்தில் ஆய்வுக் குழு சமர்ப்பித்தது. இந்த அறிக்கை 10 முதல் 12 பக்கங்கள் கொண்டது எனத் தெரியவந்துள்ளது. வழக்கு பின்னணி: உத்தரப் பிரதேசம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி உள்ளது. இந்த மசூதி, கோயிலை இடித்து முகலாய பேரரசர் அவுரங்கசீப்பால் கட்டப்பட்டதாக புகார் உள்ளது. மேலும், மசூதி சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை … Read more