’எதற்கெடுத்தாலும் பிரதமரை குறை கூறும் காங்கிரஸ்’ – ஹர்திக் படேலின் குற்றச்சாட்டு

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் சூழலில் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஹர்திக் படேல் விலகியிருப்பது அவர் பாஜகவில் இணைவாரோ என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஹர்திக் படேலின் கடிதத்தில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள்: எப்போதெல்லாம் தேசம் சிக்கல்களை எதிர்கொண்டதோ எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் அதன் தலைவர்கள் வெளிநாட்டில் இருந்தனர். ராமர் கோயில் கட்டப்பட்டதாக இருக்கட்டும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெற்றதாக இருக்கட்டும், அல்லது ஜிஎஸ்டி அமல்படுத்தியாக இருக்கட்டும் எல்லாவற்றிற்கும் காங்கிரஸ் முட்டுக்கட்டையாக இருந்துள்ளது. தேசத்தின் பிரச்சினை, … Read more

பேரறிவாளன் விடுதலை | “மற்ற 6 பேர் விடுதலைக்காக சட்டப் போராட்டத்தை தமிழக அரசு தொடங்க வேண்டும்” – சீமான்

சென்னை: “பேரறிவாளனுக்குக் கிடைத்துள்ள விடுதலையை முன்மாதிரியாகக் கொண்டு, ராஜீவ் காந்தி வழக்கில் சிறையில் வாடும் மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் உடனடியாகச் சட்டப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “31 ஆண்டுகால நீண்ட நெடிய சட்டப்போராட்டத்திற்குப் பிறகு என்னுயிர் தம்பி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மன நிறைவை தருகிறது. … Read more

பேரறிவாளன் விடுதலை | “வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்” – கமல்ஹாசன்

சென்னை: ”வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்” என்று பேரறிவாளனை விடுதலை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”ஆயுள் தண்டனையைக் காட்டிலும் நீண்ட 31 ஆண்டுகள். இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். Source … Read more

பேரறிவாளன் விடுதலை | “பாதுகாப்பை சமரசம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என நம்புகின்றோம்” – அண்ணாமலை

சென்னை: “ஒற்றுமையையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என நம்புகின்றோம்“ என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாலை தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “ஒற்றுமையையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் … Read more

31 ஆண்டு கால வலி, வேதனையை எனது மகன் கடந்து வந்துவிட்டார்: அற்புதம் அம்மாள் நெகிழ்ச்சி

சென்னை: “31 ஆண்டு கால வலியையும் வேதனையையும் என் மகன் கடந்து வந்துவிட்டார்” என்று பேரறிவாளனின் தயார் அற்புதம் அம்மாள் தெரிவித்தார். பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து ஜோலார்பேட்டையில் உள்ள இல்லத்தில் அவரின் தயார் அற்புதம் அம்மாள் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “இன்றைய தினம் உச்ச நீதிமன்றம் முழுமையாக பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. எங்களது போராட்டம் 31 ஆண்டு கால போராட்டம். வெளிப்படையாகத்தான் இந்த போராட்டம் நடைபெற்றது. இது அனைவருக்கும் தெரியும். இந்த 31 ஆண்டு காலம் … Read more

கியான்வாபி மசூதி கள ஆய்வின் நீதிமன்ற ஆணையர் அகற்றம் – சிவலிங்கத்தை சுற்றியுள்ள ஒசுகானா சுவரை இடிக்கும் மனு மீது நாளை முடிவு

புதுடெல்லி: சிங்காரக் கவுரி அம்மன் தரிசன வழக்கில், தாம் அமர்த்திய களஆய்வின் ஆணையர் அஜய் குமார் மிஸ்ராவை வாரணாசி சிவில் நீதிமன்றம் அகற்றி உத்தரவிட்டது. கியான்வாபியில் சிவலிங்கத்தை சுற்றியுள்ள ஒசுகானா சுவரை இடிக்கும் மனு மீது மே 19-ல் முடிவு எடுக்கப்பட உள்ளது. வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் சிங்காரக் கவுரி அம்மன் சிலை உள்ளது. அம்மனை தரிசிக்கும் வழக்கில், ஆணையராக மூத்த வழக்கறிஞரான அஜய் குமார் மிஸ்ராவை அமர்த்தி, … Read more

“உலக அளவில் மாசுக்களால் உயிரிழந்த 90 லட்சம் பேரில் 27% இந்தியர்கள்” – ஆய்வை சுட்டிக்காட்டும் அன்புமணி

சென்னை: “மக்களைக் காப்பாற்றுவதற்காக காற்று மாசு உள்ளிட்ட அனைத்து மாசுக்களையும் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்“ என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2019-ம் ஆண்டில் அனைத்து வகை மாசுக்களால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 லட்சம்; இவர்களில் காற்று மாசுக்கு பலியானவர்கள் மட்டும் 17 லட்சம் பேர் என்று லான்செட் ஆணையம் நடத்திய ஆய்வில் … Read more

காங்கிரஸிலிருந்து ஹர்திக் படேல் விலகல்: குஜராத் தேர்தல் நெருங்கும் வேளையில் திருப்பம்

குஜராத் மாநிலம் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்நிலையில் குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார் ஹர்திக் படேல். குஜராத் ஓபிசி பிரிவினரின் அடையாளமாக அறியப்படும் ஹர்திக்கின் விலகல் தேர்தலில் எதிரொலிக்கும் என்று கருதப்படுகிறது. தனது ராஜினாமா குறித்து ஹர்திக் படேல் தனது ட்விட்டர் பக்கத்தில், “இறுதியாக, காங்கிரஸ் கட்சியிலிருந்தும் பதவியிலிருந்தும் விலகும் முடிவை எடுக்கும் துணிவை வரவழைத்துக் கொண்டுள்ளேன். எனது முடிவை குஜராத் மக்களும், என் அரசியல் சகாக்களும் வரவேற்பார்கள் என்றே நினைக்கிறேன். இந்த முடிவால் … Read more