காஞ்சி | வடகலை பிரிவினரும் வேத பாராயணம் பாட அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில் வடகலை பிரிவினரும் வேத பாராயணம் பாட அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில், தென்கலை பிரிவினர் மட்டும் பிரபந்தம் பாட அனுமதித்து கோயில் உதவி ஆணையர், கடந்த 14-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து வடகலை பிரிவைச் சேர்ந்த நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ‘உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வடகலை … Read more

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சூரத், உதய்கிரி போர்க்கப்பல்கள்: பாதுகாப்புத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

மும்பை: இந்திய கடற்படையின் இரண்டு முன்னணி போர்க் கப்பல்களான சூரத், உதய்கிரி ஆகியவற்றை மும்பையில் இன்று (செவ்வாய்கிழமை) பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சூரத், உதய்கிரி போர்க் கப்பல்களை இன்று (மே17) மும்பையின் மாஸ்காவோன் கப்பல்துறை நிறுவனத்தில் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் சூரத் போர்க்கப்பல் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்க வல்லது. உதய்கிரி ரேடாருக்கு தென்படாமல் இயங்கும் தன்மை கொண்டதாகும். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர், “நாட்டின் … Read more

புதுச்சேரியில் கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை: ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மூவர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்ற ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட மூவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரி முத்தியால்பேட்டை போலீஸார் குருசுக்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள மரவாடி பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு பெண் உள்பட மூவரைப் பிடித்து சோதனையிட்டனர். சோதனையில் அவர்களிடம் கொக்கைன், எம்டிஎம்ஏ உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து … Read more

கியான்வாபி மசூதியில் முஸ்லிம்களுக்கான நீதிமன்ற கட்டுப்பாடு ஒருதலைபட்சமானது: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

புதுடெல்லி: கியான்வாபி பள்ளிவாசலுக்குள் முஸ்லிம் வழிபாட்டாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள வாரணாசி நீதிமன்ற உத்தரவு ஒருதலைபட்சமானது என்றும் இந்த உத்தரவு நீதியின் நலனுக்கு எதிரானது என்று பாப்புலப் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் தேசியத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாது: பள்ளிவாசல் குளத்திலிருந்து சிவலிங்கத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படும் கூற்றின் உண்மைத் தன்மையை சரியான முறையில் ஆராய்வதற்கு முன்பே அதனை நீதிமன்றம் எவ்வித ஆதாரமும் இல்லாமல் எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது. முஸ்லிம் வழிபாட்டாளர்கள் நுழைவதற்கும், அங்கு … Read more

வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வழக்கு: வேலூர் நீதிமன்றத்தில் முருகனிடம் புதன்கிழமை இறுதி விசாரணை

வேலூர்: வேலூர் சிறையில் வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் பேசிய வழக்கில் சாட்சியங்களிடம் விசாரணை முடிந்த நிலையில் முருகனிடம் புதன்கிழமை (மே 18) இறுதிகட்ட விசாரணை நடைபெற உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன் என்ற ஸ்ரீகரன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு தொகுதியில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் குடும்பத்தினரை சந்தித்துப் பேச 6 நாள் பரோல் வழங்கக் கோரிய மனு சிறை நிர்வாகத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அவர் … Read more

ஜார்க்கண்ட் | 'தேர்தலில் வாக்களிக்க வேண்டும்' – தனது கடைசி ஆசை நிறைவேறிய பிறகு இறந்த 105 வயது முதியவர்

ஹசாரிபாக்: தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென்ற தனது கடைசி ஆசை நிறைவேறிய பிறகு உயிரிழந்துள்ளார் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 105 வயது முதியவர். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியின் சொந்த மாநிலம் தான் ஜார்க்கண்ட். இப்போது அந்த மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. சுமார் 4,300-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் முடிந்த சில நாட்களில் முடிவு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றுள்ளது. … Read more

ஜலகம்பாறை நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கவனமுடன் இருக்க வேண்டும்: வனத்துறையினர் எச்சரிக்கை

திருப்பத்தூர்: தொடர் மழை காரணமாக ஜலகம்பாறை நீர் வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கவனமுடன் இருக்க வேண்டும், யாரும் வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்துார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. தமிழக – ஆந்திர எல்லைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் புல்லூர் தடுப்பணை திங்கள்கிழமை நிரம்பியது. அதேபோல வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆம்பூர், துத்திப்பட்டு, வடபுதுப்பட்டு, நாட்றாம்பள்ளி, … Read more

கல்குவாரியில் மீட்பு பணிக்கான அனைத்து உபகரணங்களும் உள்ளன: நெல்லை மாவட்ட ஆட்சியர் தகவல்

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் சிக்கியவர்களை மீட்கும் பணிக்கான அனைத்து உபகரணங்களும், இயந்திரங்களும் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு தெரிவித்தார். கல்குவாரியில் நடைபெறும் மீட்பு பணிகளை செவ்வாய்கிழமை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “கல்குவாரியில் சிக்கியவர்களை மீட்கும் பணி 3-வது நாளாக நடைபெறுகிறது. தேசிய பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு படையினர், காவல்துறையினர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் என அனைவரும் மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். போதுமான உபகரணங்களும், இயந்திரங்களும் நம்மிடம் உள்ளன. தூத்துக்குடி வ.உ.சி. … Read more

சிட்லப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதில் வசிப்பிடம் இழந்த 480 பேருக்கு விரைவில் வீடுகள்: அமைச்சர் தகவல்

தாம்பரம்: சிட்லப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதில் உள்ள 480 பேருக்கு மறைமலை நகராட்சிக்கு உட்பட்ட தைலாபுரம் குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தாம்பரம் மாநராட்சி அலுவலகத்தில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் திட்டபணிகள் குறித்த ஆய்வு அமைச்சர் தா.மோ.அன்பரன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹிதேஷ்குமார் ஐ.ஏ.எஸ்., நகர்புற வாழ்விட … Read more

தமிழகத்தில் புதிதாக 34 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 14, பெண்கள் 20 என மொத்தம் 34 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 17 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 54,686 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 லட்சத்து 16,337 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 42 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 324 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா … Read more