2 நாட்களில் மாநகராட்சி கூட்டம் – காத்திருக்கும் கவுன்சிலர்கள்: எப்படி செயல்படப் போகிறார் மதுரை மேயர்?

மதுரை: நாளை மறுநாள் மீண்டும் நடக்க உள்ள மதுரை மாநகராட்சி கூட்டத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பாராபட்சமில்லாமல் கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பிரச்சனைகளை பற்றி பேச இருப்பதால் விவாததிற்கும், பரபரப்பிற்கும் பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் நடந்த மாநகராட்சி பட்ஜெட் கூட்டம், விவாதமே இல்லாமல் அவசரம் அவசரமாக முடிந்த நிலையில் வார்டுகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கவுன்சிலர்கள் விவாதிக்க மீண்டும் நாளை மறுநாள் (18ம் தேதி) கூட்டம் நடக்கிறது. அதனால், அன்று அவை காரசாரமாக … Read more

அராஜகமான முறையில் நடந்தால் கடும் நடவடிக்கை – அதிமுக கவுன்சிலர்களுக்கு மதுரை மேயர் எச்சரிக்கை

மதுரை: ‘‘மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் அராஜகமான முறையில் நடந்து கொண்டனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று மேயர் இந்திராணி எச்சரித்துள்ளார். முதல் மாமன்ற கூட்டத்தில், அதிமுக கவுன்சிலர்கள், திமுக கவுன்சிலர்கள் இருக்கையை கைப்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்: மதுரை மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கைகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பான விரிவான விதிகள் எதுவும் இல்லை. ஒரு சில வரம்புகளை பின்பற்றி அவரவர் கட்சிக்கு ஏற்றவாறு ஒதுக்கப்பட்டுள்ளது. … Read more

விதிமுறைகளை மீறிய கட்டிட வரைபட அனுமதிக்கு கடும் நடவடிக்கை – அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை

மதுரை: ‘‘ஆவணங்களை முழுமையாக ஆராயாமல் விதிமுறைகளை மீறி கட்டிட வரைபட அனுமதி வழங்கும் பஞ்சாயத்து தலைவர்கள், அவர்களுக்கு துணைபோகும் அலுவலர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்று பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி எச்சரித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மனைப்பிரிவு அங்கீகாரம், அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவது தொடர்பான ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அமைச்சர் … Read more

'அதுவரை ஸ்டாலின் பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும்?' – ட்விட்டரில் அண்ணாமலை Vs அமைச்சர்

சென்னை: தமிழ்த்தாய் புகைப்படம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடையேயான மோதல் மேலும் வலுத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி வாடிகனில் நடைபெற்றது. வாடிகன் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இது தொடர்பாக வீடியோவை தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் இத்தாலியில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து என்று பதிவிட்டு இருந்தார். அமைச்சரின் ட்விட்டரை … Read more

அழைப்பிதழ் இல்லை, பேனர் இல்லை, மரியாதையும் இல்லை – புதுச்சேரி பாஜக அமைச்சர் புலம்பல்

புதுச்சேரி: எதிர்க்கட்சித் தலைவரான திமுக மாநில அமைப்பாளர் தொகுதியில் சாலைப் பணிக்கான பூமிபூஜைக்கு வந்த பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் சாய் சரவணக்குமார், “அழைப்பிதழும் இல்லை- பேனரில் படமும் இல்லை- மரியாதையும் இல்லை” என்று அதிகாரிகளை குற்றஞ்சாட்டினார். புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவாவின் தொகுதியான வில்லியனூரில் பல சாலைகள் மோசமாக உள்ளது. தற்போது அங்கு புதிய சாலைகள் போடப்பட்டு வருகின்றன. வி. மணவெளி தண்டுக்கரை வீதியில் இருந்து ஒதியம்பட்டு வரையிலான சாலை ரூ.1 … Read more

'தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்' – அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

சென்னை: தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது என்று அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி வாடிகனில் நடைபெற்றது. வாடிகன் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இது தொடர்பாக வீடியோவை தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்த அமைச்சர் … Read more

‘பேருந்து கட்டண உயர்வு அட்டவணை’ குழப்பம் ஏன்? – தமிழக அரசு விளக்கம்

சென்னை: தமிழகத்தில் இயங்கும் அனைத்துப் பேருந்துகளுக்கும் கட்டணம் உயர்த்த அட்டவணை தயாராகிவிட்டது என்ற தவறான செய்தி பரப்பப்படுவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “அரசு பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன. கட்டண உயர்வு குறித்து அட்டவணை தயாராகி விட்டதாக இன்று செய்திகள் பரப்பப்படுகின்றன. அது குறித்து இன்று என்னிடம் கேள்வி கேட்டபோது, அவ்வாறு அட்டவணை தயாராகவில்லை என்று தெரிவித்து விட்டேன். இரு மாநிலங்களுக்கிடையே … Read more

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சூரத், உதயகிரி போர்க்கப்பல்கள்: மும்பையில் நாளை அறிமுகம்

புதுடெல்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 15பி வகையைச் சேர்ந்த ‘சூரத்’ என்ற போர்க்கப்பலும், 17ஏ வகையைச் சேர்ந்த ‘உதயகிரி’ என்ற போர்க்கப்பலும் செவ்வாய்கிழமை (நாளை) அறிமுகம் செய்யப்படுகிறது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட தகவல்: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சூரத், உதயகிரி போர்க் கப்பல்கள் மே 17-ம் தேதி மும்பையின் மாஸ்காவோன் கப்பல்துறை நிறுவனத்தில் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். சூரத் … Read more

காலநிலை மாற்றம் | 2030-க்குள் 9 கோடி இந்தியர்கள் பட்டினியால் வாடும் அபாயம்: ஓர் ஆய்வும் எச்சரிக்கையும்

காலநிலை மாற்றம் காரணமாக 2030-ஆம் ஆண்டுக்குள் சுமார் 9 கோடி இந்தியர்கள் பட்டினியால் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. இது தொடர்பான ஆய்வை உலகளாவிய உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், “பருவநிலை மாற்றத்தால் 2030-ஆம் ஆண்டுக்குள் ஒன்பது கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் பட்டினியால் வாடுவார்கள். இந்தியாவில் தானியங்கள், இறைச்சிகள், பழங்கள், காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், வேர்கள் மற்றும் கிழங்குகளின் உணவு உற்பத்தி குறியீடு காலநிலை மாற்றம் காரணமாக 1.627-ல் இருந்து … Read more

பற்களில் பாக்டீரியாவை அழிக்க நானோ பாட்கள்: இந்திய ஆராய்ச்சியாளர்களின் முன்முயற்சி

பெங்களூரு: பற்களில் உள்ள பாக்டீரியாவைக் கொல்ல நானோ பாட்களை (Nano Bot) பல் சிகிச்சைக்கு பயன்படுத்தும் முயற்சியை ஆய்வின் மூலம் இந்திய அறிவியல் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 2.0 படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சிட்டி 2.0 ரோபோ, அதன் மைக்ரோ பாட்டான சிட்டி 3.0 ரோபோவை வடிவமைத்து, பயன்படுத்தும். அது போல மருத்துவ அறிவியலில் புதிய முயற்சி ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். அங்கொன்றும், இங்கொன்றுமாக சிகிச்சைக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து … Read more