மருத்துவ சோதனையில் ‘ஆண்’ என அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு வேலை: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் ஊரக காவல் துறைக்கான பெண் காவலர் தேர்வு கடந்த 2018-ல் நடந்தது. இதில் எஸ்சி பிரிவில் பெண் ஒருவர் எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால் மருத்துவ பரிசோதனையில் அந்தப் பெண் ணுக்கு கருப்பை இல்லை என்பதும் அவரது உடலில் ஆண், பெண் குரோமோசோம்கள் உள்ளதும் தெரிந்தது. இதையடுத்து அந்த பெண் ணுக்கு, ‘ஆண்’ என மருத்துவ சான்றிதழ் அளிக்கப்பட்டது. இதனால் இவரது தேர்வு ரத்தானது. இதை … Read more

ஐக்கிய அரபு அமீரக அதிபராக ஷேக் முகமது தேர்வு: இந்தியாவின் உண்மையான நண்பர் என இந்தியர்கள் வரவேற்பு

துபாய்: ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீத்மறைவைத் தொடர்ந்து புதிய அதிபராக ஷேக் முகமது தேர்வு செய்யப்பட்டார். இவர் ஐக்கிய அரபு அமீரக ஆயுதப் படைகளின் தளபதியாக இருந்தவர். ராணுவத்தில் பல முக்கிய பதவிகளை இவர்வகித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமீரகத்தின் அதிபராக ஷேக் முகமது பதவி வகிப்பார். இந்நிலையில் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷேக் முகமது பின் சையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், ஷேக் முகமது … Read more

தமிழகத்தில் ஜூன் 12-ம் தேதி ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்: சுகாதாரத் துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஜூன் 12-ம் தேதி 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னையில் அவர் நேற்று கூறியதாவது. தமிழகத்தில் 93.55 சதவீதம் பேர் முதல் தவணையும், 81.55 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். வாரம்தோறும் சனிக்கிழமையில் நடத்தப்பட்ட மெகாதடுப்பூசி முகாம்கள் மூலம் இது சாத்தியம் ஆகியுள்ளது. தற்போது, தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருபவர்களின் எண்ணிக்கை குறைவாக … Read more

'இன்று' இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்: இந்தியாவில் தென்படாது என தகவல்

சென்னை: சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். சந்திரனை பூமி முழுமையாக மறைத்தால் அது முழு சந்திர கிரகணம் என்றும், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்தால் அது பகுதி கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று(மே 16) நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி காலை 7.01 முதல் மதியம் 12.20 மணி வரை கிரகணம் … Read more

மாநிலங்களவை தேர்தல் | காங்கிரஸுக்கு ஒரு இடம்; திமுக சார்பில் 3 வேட்பாளர்கள் போட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளர்களாக தஞ்சை கல்யாணசுந்தரம், கே.ஆர்.என். ராஜேஷ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை காலியாகவிருக்கும் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்கு வரும் ஜூன் 10-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 24-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடையும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுகவைச் … Read more

மக்களுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த திட்டம்; அக்டோபர் முதல் நாடு முழுவதும் காங்கிரஸ் பாதயாத்திரை: ராகுல் காந்தி அறிவிப்பு

புதுடெல்லி: மக்களுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் அக்டோபர் முதல் காங்கிரஸ் கட்சி பாதயாத்திரைகள் மேற்கொள்ளும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது, இதையடுத்து, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சில மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை காங்கிரஸ் மேலிடம் மேற்கொண்டுள்ளது. அதன் ஒருகட்டமாக ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் 3 நாள் … Read more

மதுராந்தகம் அருகே அரசுப் பேருந்து நடத்துநர் கொலை: போதையில் இருந்த இளைஞர் கைது; ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் உத்தரவு

சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று விழுப்புரம் நோக்கி வந்தது.அந்தப் பேருந்தில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெருமாள்(54) நடத்துநராக பணிபுரிந்து வந்தார்.இந்த பேருந்து மதுராந்தகம் புறவழிச் சாலையில் பயணிகளை இறக்கிவிட நின்றது. பயணிகள் இறங்கும்போது அங்கு போதையில் நின்றிருந்த சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்த முருகன் (34) என்பவர் இந்தப் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தில் ஏறிய முருகன் ஆரம்பம் முதலே பயணச் சீட்டு வாங்காமல் இருந்துள்ளார். நடத்துநர் பெருமாள் திரும்ப திரும்ப பயணச் சீட்டு குறித்து கேட்டபோது … Read more

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக திருவாரூரில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு

திருவாரூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட 5 பேர் மீது திருவாரூர்நகர காவல் நிலையத்தில் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் தெற்கு வீதிக்கு, கலைஞர் சாலை என பெயர் மாற்றம் செய்து திமுக வசமுள்ள திருவாரூர் நகர்மன்றத்தில் ஏப்.11-ம் தேதி நடைபெற்றகூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை எதிர்த்து, திருவாரூர் தெற்கு வீதியில் பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் மே 12-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. … Read more

கரோனா மூன்றாவது அலை தடுப்பூசியால்தான் கட்டுப்படுத்தப்பட்டது: தமிழக சுகாதாரத் துறை செயலர் தகவல்

கரோனா தடுப்பூசி போடப்பட்டதால்தான் கரோனா 3-வது அலை கட்டுப்படுத்தப்பட்டது என சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலர்டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித் தார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனையில், தனியார் அறக்கட்டளையின் சார்பில் ரூ.80 லட்சம் மதிப்பில் புற நோயாளிகள் பிரிவு புனரமைக்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்த தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன், புற நோயாளிகள் பிரிவை தொடங்கி வைத்தார். முன்னதாக அரசு மருத்துவமனையில் அனைத்து … Read more

தாஜ்மகாலின் பாதாள அறைகளில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு படங்களை பகிர்ந்துள்ளது இந்திய தொல்லியல் ஆய்வு அமைப்பு

புதுடெல்லி: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலின் பாதாள அறைகளில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு படங்களை பகிர்ந்துள்ளது இந்திய தொல்லியல் ஆய்வு அமைப்பு. அண்மையில் இந்த அறைகள் குறித்து விவாதம் எழுந்திருந்தது. இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா நகரின் யமுனை ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ளது தாஜ்மகால். வெளிநாட்டினர், உள்நாட்டு மக்கள் என தினமும் பல ஆயிரம் பேர் வந்து பார்வையிட்டு செல்லும் இடம். உலகின் முக்கியமான இடங்களில் ஒன்று. முகலாய மன்னர் ஷாஜகான், அவரது மனைவி மும்தாஜின் நினைவாக … Read more