கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவு: வனத்தை ஒட்டிய கிராமங்களில் விழிப்புணர்வு
தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு காப்புக்காடு பகுதியில் கண்காணிப்புக் கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானதைத் தொடர்ந்து வனத்தை ஒட்டிய கிராமங்களில் வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச் சரகத்தில் காப்புக் காடு பகுதியில் சில இடங்களில் வனத்துறை மூலம் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிப்பது, வனத்துக்கு எதிரான குற்றங்களை தடுப்பது உள்ளிட்ட தேவைகளுக்காக வனத்துறையினர் இவ்வாறு கேமராக்களை நிறுவி கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறனர். இந்நிலையில், பாலக்கோடு காப்புக்காட்டில் ஓரிடத்தில் உள்ள … Read more