சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி: அமைச்சர் மெய்யநாதன் 

சென்னை: சென்னையில் வரும் செப்டம்பர் 26-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடைபெறவுள்ளது என்று காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழக முதல்வர் செப்டம்பர் 26-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை, தமிழகத்தில் சென்னை … Read more

அரசு மருத்துவமனைகளில் ரூ.5-க்கு உணவு வழங்கும் திட்டம் – தெலங்கானாவில் அமைச்சர் தொடக்கம்

ஹைதராபாத்: தெலங்கானாவில் உள்ள இதர மாவட்ட மக்களும் ஹைதராபாத் நகருக்கு வந்து மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். இதனால், சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கும் அவர்களுடன் தங்கி இருக்கும் உறவினர்களுக்கும் ரூ.5-க்கு உணவு வழங்கும் திட்டத்தை தெலங்கானா அரசு தொடங்கி உள்ளது. கடந்த வியாழக்கிழமை அமைச்சர் ஹரீஷ் ராவ் முதல் கட்டமாக ஹைதராபாத்தில் உள்ள 18 அரசு மருத்துவமனைகளில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இவருடன் பல அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களும் ரூ. 5-க்கு வழங்கப்படும் உணவை … Read more

மதுபோதையிலிருந்த பயணி தாக்கி உயிரிழந்த நடத்துநர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: பணியிலிருக்கும்போது பயணியால் தாக்கப்பட்டு உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநர் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த நடத்துநரின் குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இன்று (மே 14) அதிகாலை 3.15 மணியளவில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கிளையைச் சார்ந்த அரசுப் பேருந்து சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி வரும்போது, மதுராந்தகத்தில் குடிபோதையில் பேருந்தில் ஏறிய முருகன் என்ற பயணியிடம் நடத்துநர் … Read more

நாட்டின் அமைதியை பாஜக சீர்குலைக்கிறது: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு

உதய்பூர்: ‘‘நாட்டின் அமைதியை பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் சீர்குலைக்கின்றன என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸின் 3 நாள் ‘‘சிந்தனை கூட்டம்’’ நேற்று தொடங்கியது. கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா காந்தி உட்பட சுமார் 400 மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டின் தொடக்க விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது: காங்கிரஸ் கட்சியால் நாம் பலன் அடைந்துள்ளோம். அந்த வகையில் கட்சிக்கு அனைவரும் கடன்பட்டுள்ளோம். … Read more

கரோனாவா? – வடகொரியாவில் இதுவரை காய்ச்சலுக்கு 27 பேர் பலி

வடகொரியாவில் காய்ச்சல் காரணமாக 27 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த உயிரிழப்புகள் கரோனா காரணமாகத்தான் எற்பட்டுள்ளதா? என்ற தகவலை வடகொரியா தெரிவிக்கவில்லை. உலகம் முழுவதையும் கரோனா உலுக்கி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் ஒருவருக்குக்கூட கரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனப் பெருமையாக கூறி வந்த வடகொரியாவில் இந்த வாரம் முதல் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. வடகொரியாவில் கண்டறியப்பட்டுள்ளது … Read more

தசைத்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளி: மேம்பாட்டு பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னையில் உள்ள தசைத்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை, ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாடல் பள்ளி சாலையில் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி தசைத்திறன் குறைபாடுள்ளோர்க்கான சென்னை சிறப்பு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுப்பிக்கப்பட்ட பள்ளிக் கட்டடம் மற்றும் கூடைப்பந்தாட்ட அரங்கம், பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கிய வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி. … Read more

தெலங்கானா வரும் அமித் ஷா: அடுக்கடுக்காக 27 கேள்விகளை அடுக்கிய கே.டி.ராமாராவ்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தெலங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் தெலங்கானா முதல்வர் கே.சி.சந்திரசேகர ராவின் மகனும், மாநில அமைச்சருமான கே.டி.ராமராவ் அமித் ஷாவுக்கு ஒரு திறந்தமடலை எழுதியுள்ளார். அதில் தெலங்கானாவுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டதாக 27 கேள்விகளை முன்வைத்துள்ளார். தெலங்கானாவை மத்திய அரசு மாற்றாந்தாய் சிந்தையுடன் அணுகுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆந்திரப்பிரதேசம் மறு சீரமைப்பு சட்டம், தெலங்கானாவில் மருத்துவக் கல்லூரி, மத்திய பல்கலைக்கழகம் ஆகியன சுஷ்மா ஸ்வராஜ் காலத்திலிருந்தே நிறைவேற்றப்படாத கோரிக்கைகளாக … Read more

டெல்லி தீ விபத்து: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: டெல்லி தீ விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தி: ” டெல்லி தீ விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.40 மணி அளவில் மேற்கு டெல்லியான முண்டக் பகுதியின் மெட்ரோ ரயில் … Read more

வாரணாசி கியான்வாபி மசூதியில் ஆய்வு தொடங்கியது: ஒரு கிலோ மீட்டருக்கு போலீஸ் குவிப்பு

வாரணாசி கியான்வாபி மசூதியில் ஆய்வு தொடங்கியுள்ளது. பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணி முதல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே கியான்வாபி மசூதி உள்ளது. மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த அம்மனுக்கு பூஜைகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் சிங்கார கவுரி அம்மனுக்கு, தினமும் பூஜை நடத்த அனுமதி கோரி 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் … Read more

மூத்த அதிகாரிகளை நியமித்து மந்தமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை விரைப்படுத்தவும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் ஒவ்வொரு மண்டலத்திற்கும் மூத்த அதிகாரி ஒருவரை பொறுப்பு அதிகாரியாக நியமித்து வடிகால் பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகள் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது பல முறை வெள்ளத்தில் மூழ்கியதும், அதனால் சென்னை மாநகர மக்கள் அனுபவித்த கொடுமைகளும் எவராலும் எளிதில் மறக்க முடியாத கொடுந்துயரம் ஆகும். அத்தகைய … Read more