சென்னை ராஜீவ் காந்தி சாலையில் ரூ.46 கோடியில் மேம்பாலம்: விரைவில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்

சென்னை: சென்னையின் முக்கிய சாலையான ராஜீவ் காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.50 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக ரூ.46 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் ஆகியன ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்ப விரைவு சாலையில்தான் அமைந்துள்ளன. இதன் காரணமாக காலை மற்றும் மாலை வேளையில் கிண்டி சர்தார் படேல் சாலை தொடங்கி மத்திய கைலாஷ் வரை கடும் போக்குவரத்து நெரிசல் … Read more

வேலை வாங்கித்தருவதாக கூறி ஆன்லைன் மூலம் ரூ.3,000 கோடிக்கு மேல் மோசடி

லக்னோ: வேலை வாங்கித் தருவதாகக் கூறி நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடம் ஆன்லைன் மூலம் ரூ.3,000 கோடிக்கு மேல் மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தர பிரதேசம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் உள்ள இளைஞர்கள் பலரிடம் பிலிப் கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு பதிவுக் கட்டணமாக குறிப்பிட்ட தொகையை கட்டுமாறும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மன்ஸ்ருல் இஸ்லாம்என்பவர் ‘டால்பின் கன்சல்டன்ட் சர்வீஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் … Read more

"இஸ்லாமிய மக்களுக்கு காவலாக விளங்குகிறது தமிழக அரசு" – ரமலான் வாழ்த்துச் செய்தியில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “பெரும்பான்மைவாதமும் மதவாதமும் தலைதூக்காத சமய நல்லிணக்கப் பூங்காவாகத் தமிழகத்தைக் காத்து நிற்கும் “திராவிட மாடல்” ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஒற்றுமையுணர்வும் சகோதரப் பாசமும் நிலைத்திருப்பதால்தான் தமிழகம் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது“ என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ரமலான் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: “புனித ரமலான் மாதம் முழுவதும் தங்கள் நோன்புக் கடமையை ஆற்றி, ஏழை எளியவருக்கு உதவிகள் புரிந்து, அன்பு, இரக்கம், கருணை, … Read more

‘‘மக்களிடம் செல்ல வேண்டிய நேரம் இது’’- பிரசாந்த் கிஷோர் புதிய கட்சி?- காங்கிரஸ் திட்டம் தோல்வியால் அடுத்த முடிவு

பாட்னா: பிஹாரை மையமாக கொண்டு புதிய கட்சி ஒன்றை தொடங்கப்போவதாக பிரசாந்த் கிஷோர் மறைமுகமாக கருத்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். காங்கிரஸில் சேரும் அவரது திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. மேற்கு வங்கம், தமிழகம், டெல்லி என பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் பணியில் பங்கேற்று வெற்றி கண்ட பிரசாந்த் கிஷோர் கடந்த ஆண்டே காங்கிரஸில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின. ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை பலமுறை சந்தித்து பேசினார். ஆனால் காங்கிரஸில் இணையவில்லை. அதன் … Read more

'ஒரு மூத்த மருத்துவரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது' – சமஸ்கிருத உறுதிமொழி விவகாரத்தில் ப.சிதம்பரம் கருத்து 

சென்னை: “சமஸ்கிருத உறுதிமொழி விவகாரத்தில், டீனுக்குத் தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது. ஒரு நல்ல, மூத்த மருத்துவரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மதுரை மருத்துவக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்கள் சமஸ்கிருத உறுதிமொழியை மொழிமாற்றம் செய்து உறுதியேற்றதாக பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த விவகாரத்தில் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரெத்தினவேலு காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் மருத்துவக் கல்வி … Read more

பொது சிவில் சட்டம்: பாஜக அரசு மீது ஒவைசி புகார்

ஹைதராபாத்: அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தலைவர் ஹைதராபாத் எம்.பி ஒவைசி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: நாட்டில் உள்ள பல்வேறு சமுதாய மக்களுக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறை தேவையில்லை. பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. மின்தட்டுப்பாடு நிலவுகிறது. நிலக்கரியை கொண்டு செல்வதற்காக பயணிகள் ரயில்கள்இந்த வாரம் ரத்து செய்யப்பட் டுள்ளன. வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. ஆனால், இதைப் பற்றி கண்டு கொள்ளாமல், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது பற்றி அரசு அதிக அக்கறை செலுத்துகிறது. நம் நாட்டுக்கு … Read more

'கோடை வெயிலால் கோமா நிலைகூட ஏற்படக்கூடும்..' – ஆளுநர் தமிழிசை விழிப்புணர்வு ட்வீட்

சென்னை: உடல் உஷ்ண தாக்கத்தால் கோமா நிலைக்குக் கூட செல்லலாம் என்று தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநரும், மருத்துவருமான தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் வெப்ப நோய்களிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளையும் அவர் விளக்கி ட்வீட் செய்துள்ளார். நாடு முழுவதும் கோடை வெப்பம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கோடை வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோடை வெயிலால் ஏற்படும் உடல் உஷ்ண தாக்கத்தால் கோமா நிலைக்குக் … Read more

'கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது' – உச்ச நீதிமன்றம்

டெல்லி: எந்தவொரு தனிநபரையும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள கட்டாயப்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில மாநிலங்களில் கரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. இதற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று (மே 2) தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கு பின்னணி: தமிழகம், கேரளம், ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்திக் … Read more

'சமத்துவம் தழைக்கட்டும், சகோதரத்துவம் நிலைக்கட்டும்' – தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து

சென்னை: இஸ்லாமிய பெருமக்கள் நாளை (மே 3) புனித ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். ஒருசில பகுதிகளில் இன்றும் சில இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி … Read more

வழிபாட்டுத் தலங்களிலிருந்து 54,000 ஒலிப்பெருக்கிகள் அகற்றம்: உ.பி. அரசு அறிக்கை

லக்னோ: மசூதிகள், கோயில்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களிலிருந்து 54,000 ஒலிப்பெருக்கிகள் அகற்றப்பட்டதாக உத்தரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் 60,200 ஒலிப்பெருக்கிகளை எந்த ஒலியளவில் இயக்க வேண்டும் என்பதை நிர்ணயித்துக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மசூதிகள், கோயில்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களில் இருந்து இதுவரை 53,942 ஒலிப்பெருக்கிகளை அப்புறப்படுத்தியுள்ளோம். மேலும், 60,200 ஒலிப்பெருக்கிகளின் ஓசையளவைக் குறைத்துக் கட்டுப்படுத்தியுள்ளோம். பெரேலி பகுதியில் மட்டும் 16,682 ஒலிப்பெருக்கிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு … Read more