வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக கேரள அரசியல் தலைவர் பி.சி. ஜார்ஜ் கைது
திருவனந்தபுரம்: கேரளாவின் மூத்த அரசியல் தலைவர் பி.சி. ஜார்ஜ், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக நேற்று கைது செய்யப்பட்டார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் அண்மையில் நடைபெற்ற அனந்தபுரி இந்து மகா சம்மேளன மாநாட்டில் ஜார்ஜ் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல்களில் குளிர்பானம், தேநீரில்கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது. இதனால் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படும். இந்துக்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி முஸ்லிம்களின் மக்கள் தொகையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது” என்று குற்றம் சாட்டினார். … Read more