3 ஆண்டில் 14,000 வங்கதேசத்தினரை திருப்பி அனுப்பிய அரசு

புதுடெல்லி: எல்லை பாதுகாப்பு படை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022 ஏப்ரல் வரை,இந்தியாவில் சட்டவிரோத மாக தங்கியிருந்த வங்கதேசத் தினர், தங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்ல முயன்றபோது சர்வதேச எல்லையில் 9,233 பேர் பிடிபட்டனர். இதே காலகட்டத்தில் வங்க தேசத்தி லிருந்து இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 4,896 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளில், இந்தியா – வங்கதேச எல்லையை கடந்த வங்கதேசத்தினர் 14,361 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர். … Read more

கோவை அரசு மருத்துவமனையில் முதல்முறையாக இளைஞரின் துண்டிக்கப்பட்ட கையை இணைத்து உயிரூட்டிய மருத்துவர்கள்

கோவை: அரிவாளால் வெட்டப்பட்டு கை துண்டிக்கப்பட்ட நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞரின் கையை அறுவை சிகிச்சை செய்து இணைத்து மருத்துவர்கள் மீண்டும் உயிரூட்டியுள்ளனர். ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் (21) திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். குடும்பத் தகராறு காரணமாக நடந்த பிரச்சினையில், அவரது உறவினர் ஒருவர் கணேசை அரிவாளால் கடந்த 8-ம் தேதி வெட்டியுள்ளார். இதில் முதுகு, கழுத்து ஆகியவற்றில் வெட்டு விழுந்ததோடு, வலது கை துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு … Read more

கரோனா: பொருளாதார பாதிப்பை சரி செய்ய இந்தியாவுக்கு 13 ஆண்டுகள் ஆகும்: ரிசர்வ் வங்கி அறிக்கை 

மும்பை: கரோனா தொற்று சூழலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சரி செய்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இந்தியாவுக்கு 13 ஆண்டுகள் வரை ஆகலாம் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு உலகளவில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. மனிதர்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகளையும் உயிர்களையும் காவு வாங்கியதோடு மட்டுமல்லாமல் உலகப்பொருாதாரத்தையும் புரட்டிப்போட்டது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள அமெரிக்கா கூட பெரிய அளவில் பொருளாதார பாதிப்புக்கு ஆளானது. கரோனா ஏற்படுத்திய பொருளாதார … Read more

"எனது வீட்டிலும் காலை 2 மணி நேரம் மின்வெட்டு" – எடப்பாடி பழனிசாமி

சேலம்: “நிலக்கரி பற்றாக்குறை காரணமாகத்தான மின் தடை ஏற்பட்டுக்கொண்டிரு்ககிறது. எனவே தமிழக அரசு தேவையான அளவு நிலக்கரியை கொள்முதல் செய்து தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும்“ என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலத்தில் இலவச தையல் பயிற்சி மையத்தை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்.30) திறந்துவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “மின்சாரம் என்பதில் பாகுபாடு இல்லை. எனது வீட்டிலும் … Read more

உதயநிதியை அமைச்சர்கள் துதிபாடுவது திமுகவுக்குப் பின்னடைவு: செல்லூர் ராஜூ விமர்சனம்

மதுரை: “அமைச்சர்கள் தங்களது துறை சார்ந்த பணிகளை கவனிக்காமல் உதயநிதியை காக்காப்பிடிக்க அவரை சட்டமன்றத்தில் துதிபாடுவது திமுகவிற்கு ஒரு பின்னடைவுதான்” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று கே.கே.நகர் பகுதியில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, “அதிமுகவில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். இது திமுக அல்ல. … Read more

'தொழிலாளர்களின் உரிமைக்குக் கேடயமாகவும், போர்வாளாகவும் திமுக எப்போதும் திகழும்' – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தொழிலாளர்களின் உரிமைகளுக்கும், நலனுக்கும் “கேடயமாகவும், போர்வாளாகவும்” திமுகவும், திமுக அரசும் எப்போதும் திகழும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சிகாகோ நகரில் தொழிலாளர்கள் வரலாற்றுப் புகழ்பெற்ற பிரம்மாண்டமான பேரணியை நடத்தி, தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து பெற்ற உன்னதமான உரிமைகளை நினைவுகூரும் மே 1-ஆம் நாளை முன்னிட்டு தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தொழிலாளர்களின் உற்ற … Read more

‘‘காசு கொடுத்தாலும் கிடையாது’’- உலகை உலுக்கும் சமையல் எண்ணெய் பற்றாக்குறை: ஐரோப்பிய நாடுகளில் ரேஷன்; இந்தியாவிலும் விலை கடும் உயர்வு

புதுடெல்லி: உலகம் முழுவதும் எண்ணெய் வித்துகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பல ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு சமையல் எண்ணெய் ரேஷன் முறையில் கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பாதிப்பும் இந்தியாவிலும் கடுமையாக எதிரொலிக்கிறது. தேவை அதிகரிப்பு, உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால் உலகம் முழுவதுமே சமையல் எண்ணெய் விலை கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடுமையாக உயர்ந்து வருகிறது. ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக … Read more

களிமேடு தேர் விபத்து | தொடங்கியது ஒரு நபர் குழு விசாரணை; சாட்சியம் அளிக்க விரும்புவோருக்கு அழைப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே களிமேடு தேர் விபத்து குறித்து தமிழக அரசு அமைத்த, ஒரு நபர் குழு விசாரணை இன்று (30ம் தேதி) தொடங்கியது. தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில், கடந்த 27-ம் தேதி அப்பர் சதய விழாவையொட்டி நடைபெற்ற தேர் வீதியுலாவில் உயரழுத்த மின் கம்பி தேர் மீது உரசியதால் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து, தேர் விபத்து … Read more

"சமூக சமத்துவம் காண்போம்" – தொழிலாளர் தினம்: தமிழகத் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தொழிலாளர்கள் தினமான மே தினத்தை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் வி.கே.சசிகலா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ், ஈபிஎஸ்: “வயல் வெளிகளில் விளைந்து நிற்கும் மணிகளாக, எழிலார் சேவைகளில் பூத்துக் குலுங்கும் மலர்களாக, ஓடும் நதிகளின் … Read more