2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி: இந்திய மாணவர்கள் திரும்ப சீனா ஒப்புதல்; ஜெய்சங்கர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

புதுடெல்லி: கரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக படிப்பை தொடர முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மீண்டும் சீனா திரும்ப அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்பு சீனா ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்திய மாணவர்கள் பல்வேறு நாடுகளில் உயர் கல்வி பயின்று வருகின்றனர். சீனாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களிலும் இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர். சீனாவில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இந்தியாவைச் சேர்ந்த 23 … Read more

எலி கொல்லி பசை தடை திட்டம், சுகாதார நிலையங்களில் வைஃபை… – தமிழக மருத்துவத் துறையின் முக்கிய அறிவிப்புகள்

சென்னை: அதிகரித்து வரும் தற்கொலை மரணங்களை குறைக்கும் நோக்கில் தமிழகத்தில் உயிர்க்கொல்லியான எலி கொல்லி பசை விற்பனை தடை செய்ய “சிறப்பு கவன திட்டம்” என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, 17,077 சுகாதார நிலையங்களில் கம்பி இல்லா இணைய சேவை (Wi-Fi Facility), தமிழகத்தில் … Read more

தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஹால்மார்க் கட்டாயம்: பிஐஎஸ் அறிவிப்பு

புதுடெல்லி: கட்டாய ஹால்மார்க் திட்டத்தின் இரண்டாம் கட்டம் 2022 ஜூன் 01 முதல் அமலுக்கு வரும் எனவும், தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஹால்மார்க் கட்டாயமாக்கப்படவுள்ளதாக பிஐஎஸ் எனப்படும் இந்திய தர நிர்ணய அமைப்பு கூறியுள்ளது. சர்வதேச வர்த்தக அமைப்பான டபிள்யூடிஓ, தங்க நகை ஏற்றுமதி செய்யும் நாடுகள் பிஐஎஸ் தரச்சான்றை கட்டாயமாக்கியுள்ளது. டபிள்யூடிஓ அமைப்பில் இடம்பெற்றுள்ள 164 உறுப்புநாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் … Read more

இலங்கைத் தமிழர்களுக்கு உணவுகள் அனுப்பிவைக்க அனுமதித்து உத்தரவிடுங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: கடும் பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கை மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்க உரிய அனுமதிகளை வழங்கிட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (29-4-2022) முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகியுள்ளனர் என்றும், ஒவ்வொரு நாளும் அங்கு … Read more

மே தொடக்கத்திலேயே வெப்ப அலை வீசும்; வரலாறு காணாத அளவு வெப்பம் உயரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

புதுடெல்லி: மே மாதம் தொடக்கத்திலேயே நாட்டின் பல பகுதிகளில் வெப்ப அலை வீசும் எனவும், பல மாநிலங்களில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை உயரும் என்றும் வானிலை ஆய்வு மைய தலைவர் மிருத்யுஞ்சய் மஹாபத்ரா தெரிவித்துள்ளார். கடந்த பிரப்ரவரி மாதம் முதலே நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டேதான் உள்ளது. நாடு முழுவதும் கோடை வெப்பம் தீவிரமாகியுள்ளது. பல இடங்களில் கத்திரி வெயிலுக்கு முன்பாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே முந்தைய ஆண்டை … Read more

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து விமர்சித்ததாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக திருவாரூரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பொன்முடி, அப்போதை தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகவும், இந்திய இறையாண்மைக்கும், தேச ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் வகையில் பேசியதாக அதிமுக நகர செயலாளர் தட்சிணாமூர்த்தி என்பவர் புகார் அளித்திருந்தார். … Read more

குப்பைக் கிடங்குகளில் தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்கள்: சென்னை மாநகராட்சி திட்டம்

சென்னை: கோடை காலம் முடியும் வரை குப்பைக் கிடங்குகளில் தயார் நிலையில் தீயணைப்பு வாகனங்களை நிறுத்தி வைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான பெருங்குடி குப்பை கிடங்கில் கடந்த 26-ஆம் தேதி மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தொடர்ந்து 2 நாட்களாக 12 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் நடைபெற்றது. தற்போது தீயணைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாளைக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவடையும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இந்நிலையில், … Read more

இந்தியா என்றால் வர்த்தகம்; அடுத்த தொழில்நுட்ப புரட்சிக்கு நாடு தலைமையேற்கும்: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: அடுத்த தொழில்நுட்பப் புரட்சிக்கு தலைமையேற்க இந்தியா வழிகாட்டுகிறது, உலகின் வேகமாக வளரும் ஸ்டார்ட்அப் சூழலியலில் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியை நோக்கி இந்தியா செல்கிறது, இந்தியா என்றால் வர்த்தகம் என்று பொருள்பட திகழச்செய்து வருகிறோம். என செமிகான் இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். செமிகான் இந்தியா மாநாடு 2022-ஐ காணொலி வாயிலாக தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, தொடக்க விழாவில் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். மத்திய அமைச்சர்கள், செமிகண்டக்டர் தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள், … Read more

முரசொலி விவகார அவதூறு வழக்கு: விசாரணைக்கு ஆஜராக எல்.முருகனுக்கு விலக்கு

சென்னை: முரசொலி அலுவலக இடம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு விலக்களித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூரில் நடத்த கூட்டம் ஒன்றில் அப்போதைய தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றும், மூல பத்திரத்தை காட்ட முடியுமா என்று பேசியிருந்தார். அவரது பேச்சு அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாக முரசொலி அறக்கட்டளை நிர்வாகி என்ற முறையில் திமுக எம்பி, … Read more

நிலக்கரி ரயில்களை இயக்க இதுவரை நாடு முழுவதும் 620 பயணிகள் ரயில் பயணங்கள் ரத்து

புதுடெல்லி: நிலக்கரி ரயில்களை வேகமாக இயக்குவதற்கான, நாடு முழுவதும் 620 பயணிகள் ரயில் பயணங்களை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல மாநிலங்கள் இருளில் முழ்கி வருகின்றன. பல மாநிலங்களில் பல மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டள்ளது. தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயில்கள் கூட இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், பயணிகள் ரயில் சேவையை ரத்து செய்து, நிலக்கரி கொண்டு செல்லும் ரயில்களை வேகமாக இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. … Read more