மோடியின் காஷ்மீர் பயணத்தை 'அரங்கேற்றம்' என விமர்சித்த பாக். பிரதமர்: இந்தியா கடும் கண்டனம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் காஷ்மீர் பயணத்தை ‘அரங்கேற்றம்’ என்று விமர்சித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு இந்தியா கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “பாகிஸ்தான் பிரதமர் பயன்படுத்திய ஸ்டேஜ்ட் என்ற வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை. ஒருவேளை அவர், பிரதமர் காஷ்மீருக்கு வராமலேயே வந்ததுபோல் சொல்லப்பட்டது எனக் கூறுகிறாரோ. அப்படியென்றால் அவரது புரிதல் தவறு. காஷ்மீரில் அவருக்குக் கிடைத்த வரவேற்பை பாகிஸ்தான் பிரதமர் அறிந்திருக்க … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் 18 ஆண்டுகளாக நேர்முக உதவியாளராக இருந்து பூங்குன்றனிடம் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நீலகிரி மாவட்ட போலீஸார், சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், … Read more

10-ம் வகுப்பு வினாத் தாள்கள் ஆந்திராவில் 2-வது நாளாக கசிவு

அமராவதி: ஆந்திராவில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தெலுங்கு மற்றும் ஹிந்தி தேர்வுகளின் வினாத் தாள்கள் கசிந்ததால் கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. முதல் நாள் தெலுங்கு தேர்வு நடைபெற்றது. தேர்வு தொடங்கிய சில நிமிடங்களில் காகுளம், சித்தூர், கர்னூல், விஜயவாடா உள்ளிட்ட மாவட்டங்களில் பல தேர்வு மையங்களில் இருந்து வினாத் தாள்கள் வெளியில் கசிந்தன. இவை உடனுக்குடன் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதால் கல்வித்துறை … Read more

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தரைப் பாலங்களுக்கு பதிலாக மேம்பாலங்கள்: ஓரிரு ஆண்டுகளில் பணிகள் முடியும் என அமைச்சர் வேலு உறுதி

சென்னை: தமிழகம் முழுவதும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ள தரைப் பாலங்களுக்கு பதில் மேம்பாலங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. ஓரிரு ஆண்டுகளில் இப்பணிகள் முடிவடையும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார். பேரவையில் கேள்வி நேரத்தின்போது, தென்காசி உறுப்பினர் எஸ்.பழனிநாடார், ‘‘தென்காசி- திருநெல்வேலி நான்கு வழிச்சாலை திட்டப் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். புறவழிச்சாலை அமைக்க வேண்டும்’’ என்றார். பல்லாவரம் உறுப்பினர் இ.கருணாநிதி, ‘‘குரோம்பேட்டை- திருமுடிவாக்கம் இடையிலான சாலையை 4 வழிச் சாலையாக மாற்ற வேண்டும்’’ என்றார். ஒகேனக்கல் … Read more

இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 3,377 ஆக அதிகரிப்பு: சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 17,000ஐ கடந்தது

புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 3,377 ஆக அதிகரித்துள்ள நிலையில், சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 17,000 ஐ கடந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேர நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,377 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 4,30,72,176 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், … Read more

டெபிட், கிரெடிட் கார்டு மூலமாக கோயிலில் கட்டணம் செலுத்தலாம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: கோயில்களுக்கு பண வசூலுக்கான கையடக்க கருவிகள் (ஸ்வைப்பிங் இயந்திரம்) வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், 550 கோயில்களுக்கு 1,500 கையடக்க கருவிகளை கோயில் இணை ஆணையர்களிடம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சேவை முன்பதிவு வசதியை எளிமைப்படுத்தும் வகையில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி, வடபழனி ஆண்டவர் உள்ளிட்ட கோயில்களுக்கு … Read more

தேச துரோக சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: சரத் பவார் வலியுறுத்தல்

மும்பை: கிழக்கிந்திய கம்பெனி, மராட்டியர்களுக்கு இடையே நடந்த போரின் 200-வது ஆண்டு நினைவு நிகழ்ச்சி 2018 ஜனவரி 1-ம் தேதி மகாராஷ்டிராவின் பீமா கோரேகானில் நடைபெற்றது. அப்போது இருதரப்பினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.என்.படேல் தலைமையில் நீதித்துறை ஆணையம் விசாரித்து வருகிறது. இதனிடையே வன்முறையில் இந்துத்துவா அமைப்புகளுக்கு தொடர்பிருப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குற்றம் சாட்டினார். இதுகுறித்து விரிவான … Read more

நிலத்தின் சந்தை வழிகாட்டி மதிப்பை சீரமைக்க குழு: கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

சென்னை: நிலங்களின் சந்தை வழிகாட்டி மதிப்புகளில் காணப்படும் முரண்பாடுகளை போக்கி, கள நிலவரத்துக்கு ஏற்ப, சந்தை வழிகாட்டி மதிப்புகளை மாற்றியமைக்க சீரமைப்புக் குழு அமைக்கப்பட உள்ளதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பதிவுத் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மாநிலம் முழுவதும் கடந்த 2012 ஏப்.1-ம் தேதி முதல் சந்தைமதிப்பு வழிகாட்டி நடைமுறைப்படுத்தப்பட்டது. இது கடந்த 2017 ஜூன் 9-ம் தேதி முதல் 33சதவீதம் குறைக்கப்பட்டு, கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வழிகாட்டி மதிப்புகளில் காணப்படும் முரண்பாடுகளை போக்கி, … Read more

வாட்டும் வெயில்; நகரும் பந்தலுக்குக் கீழ் மணமகன் ஊர்வலம்: இணையத்தில் வைரலாகும் வீடியோ 

திருமண ஊர்வலம் ஒன்று நகரும் பந்தலுக்குக் கீழ் ஒய்யாரமாகச் செல்லும் வீடியோ ஒன்று இணையவாசிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியத் திருமணங்கள் எப்போதுமே கொண்டாட்டங்கள் நிறைந்தவை. பணமதிப்பிழப்பு, பெருந்தொற்று, பணவீக்கம், என என்ன நடந்தாலும் அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு திருமணங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தற்போது வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் வேளையில் நகரும் பந்தலுக்குக் கீழ் திருமண ஊர்வலம் ஒய்யாரமாகப் போகும் வீடியோ ஒன்று அனைவரையும் கவர்ந்துள்ளது. தேவயானி கோஹ்லி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் … Read more

உக்ரைனில் ஐ.நா. தலைவர் ஆய்வு செய்த பகுதிக்கு அருகே ரஷ்யா ராக்கெட் தாக்குதல்: 10 பேர் காயம்; குவியும் கண்டனம்

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது அந்தப் பகுதிக்கு வெகு அருகில் ரஷ்யா ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். ஏப்ரல் பாதியில் நிறுத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல் ஐ.நா. பொதுச் செயலாளர் வந்திருந்த வேளையில் மீண்டும் தொடங்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் 25 மாடிகள் கொண்ட குடியிருப்பு ஒன்று சேதமடைந்தது. அதிலிருந்த 2 தளங்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. இதில் … Read more