மகளிர் குழு தயாரிப்பை அரசு துறைகள் வாங்க அறிவுறுத்தல்: சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு

சென்னை:மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்பொருட்களை அரசு அலுவலகங்களில் வாங்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார். பாஜக கோரிக்கை சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தில் பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், ‘‘மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் கிடைக்கும் வருவாயால் அவர்களது குடும்பத்துக்கு பெரிய அளவில் பயன் கிடைக்கிறது. ஆன்லைன் வர்த்தகம் வளர்ந்துவிட்ட நிலையில், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை ஆன்லைனில் சந்தைப்படுத்தவும், அவற்றை அரசுத் … Read more

உ.பி.யின் பனாரஸ் இந்து பல்கலை.யில் இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு: துணைவேந்தரை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் நாட்டின் பழமையான மத்திய பல்கலைக்கழகமான பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (பிஎச்யூ) மஹிளா மஹாவித்தியாலயா எனும் மகளிர் கல்லூரியும் செயல்படுகிறது. இதன் சார்பில் நேற்று முன்தினம் மாலை முஸ்லிம்களுக்கான ரம்ஜான் நோன்பு முடிக்கும் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முஸ்லிம் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளுடன் இணைந்து முக்கிய விருந்தினராக பிஎச்யூ துணைவேந்தர் பேராசிரியர் சுதிர் குமார் ஜெயினும் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சி தொடர்பான செய்தி படங்களுடன் சமூக வலைதளங்களில் அன்று இரவே வெளியானது. … Read more

சிறுபான்மையினரின் பாதுகாவலனாக அதிமுக திகழும்: இஃப்தார் நிகழ்ச்சியில் இபிஎஸ் உறுதி

சென்னை: மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர்,ஜெயலலிதா ஆகியோர் வழியில் சிறுபான்மையினரின் பாதுகாவலனாக அதிமுக தொடர்ந்து திகழும் என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்தார். அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னைமயிலாப்பூர் நியூ உட்லண்ட்ஸ்ஓட்டலில் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். அதன்பின் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் அமர்ந்து நோன்பு கஞ்சி அருந்தினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் கே.பழனிசாமி பேசியதாவது: “இந்திய அரசியல் இயக்கங்களில் அதிமுகதான் இஃப்தார் நோன்பு … Read more

பிரதமர் பொறுப்பை தட்டிக் கழிக்கிறார்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் புகார்

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அதிக எரிபொருள் விலை, நிலக்கரி பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என எதுவாக இருந்தாலும் மாநில அரசுகளே காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. எரிபொருள் மீதான மொத்த வரியில் 68 சதவீதம் மத்திய அரசால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. என்றாலும் பிரதமர் மோடி தனது பொறுப்பை தட்டிக் கழிக்கிறார். பிரதமர் மோடியின் கூட்டாட்சி முறை என்பது அனைவரையும் ஒத்துழைக்க வைப்பதல்ல, வற்புறுத்திப் பெறுவது. இவ்வாறு … Read more

சென்னை கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் சர்வதேச தரத்தில் வடிவமைப்பு மையம்: கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு

சென்னை: ரூ.10 கோடி செலவில், சர்வதேசதரத்தில் சென்னையில் வடிவமைப்பு மையம் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.காந்தி அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. உறுப்பினர்களின் கேள்விகள் மற்றும் கோரிக்கைகளுக்கு அத் துறையின் அமைச்சர் ஆர்.காந்தி பதிலளித்துப் பேசும்போது வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு: கைத்தறி ஆடைகளின் விற் பனையை அதிகரிக்க ஏதுவாக சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப … Read more

ராஜஸ்தான், உ.பி., டெல்லி, ஹரியாணா, ஒடிசாவில் 5 நாட்கள் அனல் காற்று வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

புதுடெல்லி: ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும். பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதுகுறித்து வானிலை மைய விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமணி நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: “ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லி, ஹரியாணா, ஒடிசா ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும். தற்போதே இந்த மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸ் (113 டிகிரி … Read more

உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கு: நீதிமன்றம் நிராகரிப்பு

சென்னை: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி தொடர்ந்த தேர்தல் வழக்கை, உயர் நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்து உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து ஆர்.பிரேமலதா என்ற வாக்காளர், உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ‘‘உதயநிதி தனது வேட்புமனுவில் தவறானதகவல்களை அளித்துள்ளதாகவும், இதுதொடர்பான ஆட்சேபங்களை தேர்தல் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 3,303 பேருக்கு தொற்று: கரோனா வைரஸ் 4-வது அலை அச்சம்

புதுடெல்லி: நாட்டில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது. புதிதாக 3,303 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரேநாளில் 39 பேர் உயிரிழந்தனர். தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் 4-வது அலை பரவுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. கரோனா வைரஸ் பரவல் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம்: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,303 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள் ளது. ஒரே நாளில் 39 … Read more

பெட்ரோல், டீசல் மீதான வரியை அதிகம் உயர்த்தியது மத்திய அரசு: பிரதமரின் புகாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மாநில அரசுகளுடன் பகிர வேண்டும் என்பதால் அதை குறைத்து, மாநில அரசுகளுக்கான வருவாயில் மத்திய அரசு கைவைத்தது. ஆனால், மத்திய தல வரி, தல மேல் வரியை மாநில அரசுகளுடன் பகிர வேண்டியது இல்லை என்பதால், அவற்றை மிக கடுமையாக உயர்த்தி பல லட்சம் கோடி வருவாயையும் மத்திய அரசு தனதாக்கிக் கொண்டது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் … Read more

ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் நாடுகளுக்கு – பிரதமர் மோடி மே 2 முதல் சுற்றுப்பயணம்

புதுடெல்லி: ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ்ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்குமே 2-ம் தேதி முதல் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ஐரோப்பிய நாடுகளுக்கு 4 நாள் சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி மேற்கொள்ளவுள்ளார். மே 2-ம் தேதி ஜெர்மனி செல்கிறார். பெர்லின் நகருக்குச் செல்லும் பிரதமர் மோடி, ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும் 2 நாடுகளின் நல்லுறவை வலுப்படுத்தும் ஐஜிசி அமைப்பின் கூட்டத்திலும் … Read more