‘ஆளுநர் பதவியே தேவையில்லை’ – தெலங்கானா முதல்வர் குற்றச்சாட்டு

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் மாநாடு நேற்று நடந்தது. இதில் முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியதாவது: ஆளுநர் பதவியால் மறைந்த முதல்வர் என்.டி.ராமாராவ் பதவி இழந்தார். பின்னர் மீண்டும் மக்கள் அவரை முதல்வராக தேர்ந்தெடுத்தனர். அப்படிப்பட்ட என்.டி.ராமாராவுக்கே ஆளுநர் பதவி சினிமா காட்டி விட்டது. ஆளுநர் பதவியை சிலர் சுய நலத்திற்காக பயன்படுத்துகின்றனர். மகாராஷ்டிராவில் மாநில முதல்வர் 12 எம்எல்சிக்களை ஆளுநருக்கு சிபாரிசு செய்துள்ளார். இதனை மாநில ஆளுநர் கண்டுகொள்ளாமல் உள்ளார். தமிழ்நாடு, மேற்கு … Read more

மரியுபோலில் இருந்து 200 பேரை காப்பாற்றிய 'தனி ஒருவன்': குவியும் பாராட்டு!

மரியுபோல்: ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் இருந்து தனி ஒருவராக 200 பேரை காப்பாற்றியிருக்கிறார் அந்நாட்டைச் சேர்ந்த கிளப் ஓனர் ஒருவர். அவருக்குப் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள மிகப் பெரிய துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. இந்த நிலையில் ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு இடையே மரியுபோலிலிருந்து 200 பேரை காப்பாற்றி இருக்கிறார் உக்ரைன் கேளிக்கை விடுதியின் உரிமையாளர் ஒருவர். அந்த ஆபத்தான … Read more

'முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் பிரதமர்' – பெட்ரோல், டீசல் விலை தொடர்பான புகாருக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

சென்னை: பெட்ரோல்,டீசல் விலை தொடர்பாக பிரதமர் பேசியுள்ளது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பது தொடர்பாக, மாநில முதல்வர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “மக்கள் மீதான பெட்ரோல், டீசல் விலை உயர்வு சுமையை குறைப்பதற்காக, கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு அவற்றின் மீதான உற்பத்தி வரியைக் குறைத்தது. இதேபோன்று, மாநிலங்களும் உள்ளூர் வரியை குறைத்து மக்களுக்கு அந்தப் பலன் … Read more

தாஜ்மகாலுக்கு வந்த அயோத்தி மடத்தின் துறவி: பிரம்மதண்டத்துடன் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் சர்ச்சை

புதுடெல்லி: ஆக்ராவின் தாஜ்மகாலுக்கு அயோத்தி மடத்தின் தலைவர் துறவி பரமஹன்ஸ் தாஸ் தனது சீடர்களுடன் வந்திருந்தார். பிரம்மதண்டத்துடன் உள்ளே செல்ல மத்திய பாதுகாப்பு போலீஸார் அனுமதி மறுத்தது சர்ச்சையாகிவிட்டது. முகலாய மன்னர் ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டியது தாஜ்மகால். உலகின் ஏழாவது அதிசயமான தாஜ்மகாலை பல்வேறு தரப்பினர் பல காரணங்களுக்காகக் காண விரும்புவது உண்டு. இந்தவகையில் அயோத்தி ராம் ஜானகி மடத்தின் தலைவரான துறவி பரமஹன்ஸ் தாஸ் தனது இரண்டு சீடர்களுடன் நேற்று முன்தினம் … Read more

பெல்ஜியம் சாக்லேட் மூலம் பரவும் 'சால்மோனெல்லா நோய்': லண்டனில் 9 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி 

லண்டன்: லண்டனில் 151 குழந்தைகளுக்கு சால்மோனெல்லா நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 9 குழந்தைகள் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. லண்டனில் பெல்ஜியம் சாக்லேட் மூலம் சால்மோனெல்லா நோய் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி 150 குழந்தைகள் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 11 நாடுகளில் இந்தத் தொற்று பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக லண்டனில் 65 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தவிர்த்து பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, … Read more

'ஆண்கள் கையில் கொடுக்கும் பணம் பீடி, சிகரெட்,டாஸ்மாக்கிற்கு போய்விடும்' – வானதி சீனிவாசன் பேச்சால் பேரவையில் சலசலப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், “பெண்கள் கையில் கொடுக்கப்படுகிற பணம் என்பது, முழுமையாக குடும்பத்திற்காக பயன்படுகிறது. ஆண்கள் கையில் வரும் வருமானம் கூட பீடி, சிகரெட், டாஸ்மாக் என்று போய்விடும்” என்று கூறியதால், சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் இன்று கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை மற்றும் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு … Read more

'இந்தி ஒருபோதும் தேசிய மொழியாகாது' – அஜய் தேவ்கனுக்கு சித்தராமையா பதிலடி

இந்தி முன்பும் இப்போதும் எப்போதும் நமது தாய்மொழியாக, தேசிய மொழியாக இருக்கும் என்று ட்வீட் செய்திருந்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார் கர்நாடக முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தி எப்போதுமே தேசிய மொழியாகாது. நமது தேசத்தின் மொழி பன்முகத்தன்மையை மதிக்க வேண்டியது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனின் கடுமையாகும். ஒவ்வொரு மொழிக்கும் வளமான வரலாறு உண்டு. அதில் அந்தந்த மொழி … Read more

அதிமுக உட்கட்சித் தேர்தல்: மாவட்ட செயலர்கள் போட்டியின்றித் தேர்வு

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கான அதிமுக செயலர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிமுக நிர்வாக ரீதியாக செயல்பட்டு வரும் 75 மாவட்டங்களில் பல்வேறு கட்டங்களில் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 4-வது கட்டமாக கடந்த 21,25-ம் தேதிகளில் மாவட்டச் செயலர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர் பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டனர். மாவட்டச் செயலர்கள்: … Read more

'ஆன்மாவுக்கான ஆகாரம்' – சர்வதேச விருதை வென்ற காஷ்மீர் கபாப் வியாபாரியின் புகைப்படம்

காஷ்மீர் கபாப் வியாபாரியின் புகைப்படம் ஒன்று சர்வதேச புகைப்பட விருதினை வென்றுள்ளது. ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள உணவு புகைப்படக்கார்களுக்கு பிங்க் லேடி ஃபுட் போட்டோகிராஃபர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு விருதுக்கான போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக உலகம் முழுவதும் 60 நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் குவிந்துள்ளன. இவற்றில் இந்தியாவைச் சேர்ந்த தேபதத்தா சக்ரபோர்தி, காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள கய்யாம் சவுக் பகுதியில் ஒரு பிரபல கபாப் வியாபாரியின் புகைப்படத்தை எடுத்து போட்டிக்காக … Read more

பணியில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்யும் மனநிலையில் இருக்கிறேன்: டிஜிபி-க்கு பெண் டிஎஸ்பி கடிதம்

பெரம்பலூர்: பணியில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்யும் மனநிலையில் இருப்பதாகவும், எனவே பணியிட மாறுதல் அளிக்கவேண்டும் எனவும் டிஜிபி-க்கு பெண் டிஎஸ்பி கடிதம் எழுதியவிவகாரம் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு டிஎஸ்பியாக பணிபுரிந்து வருபவர் சந்தியா(29). கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று, 2019-ல் டிஎஸ்பி பணியில் சேர்ந்தார். சென்னையில் பயிற்சி பயிற்சி முடித்து முதல்முறையாக கடந்த ஆண்டு செப்.8-ம்தேதி, பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு உட்கோட்ட சட்டம் ஒழுங்குப் … Read more