மகாராஷ்டிராவில் ஜேசிபி உதவியுடன் ஏடிஎம்மில் கொள்ளையடித்த திருடர்கள்

மும்பை: மகாராஷ்டிராவில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ கடந்த 2 நாட்களாக வேகமாக பகிரப்பட்டு வருகிறது. கடந்த 22-ம் தேதி இரவு பதிவாகி உள்ள அந்த வீடியோவில், சங்லி மாவட்டம் மிராஜ் பகுதியில் உள்ள ஆக்சிஸ் வங்கி ஏடிஎம்மில் ஒருவர் நுழைகிறார். அவர் வெளியே வந்த சில விநாடிகளில் ஒரு ஜேசிபி இயந்திரத்தின் கிரேன் கண்ணாடி கதவுகளை உடைக்கிறது. பின்னர் அந்த கிரேன் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து இழுக்கிறது. இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்துள்ளனர். இதுகுறித்து, மிராஜ் … Read more

5 ஆண்டுகளுக்கு முன்பே ட்விட்டரின் விலையை கேட்ட மஸ்க்; வைரலாகும் பழைய ட்வீட்

டெக்சாஸ்: ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 2017-ல் ட்விட்டரின் விலையை ட்வீட் மூலம் கேட்டுள்ளார் மஸ்க். தற்போது அந்த ட்வீட் வைரலாகி வருகிறது. உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆன மஸ்க், ட்விட்டர் தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக அது தொடர்பான பேச்சுவார்த்தையில் இரண்டு தரப்பும் ஈடுபட்டது. கடந்த மார்ச் மாதம் முதலே ட்விட்டர் குறித்து பேசி வந்தார் மஸ்க். முதலில் ஜனநாயக செயல்பாட்டுக்கு பேச்சு சுதந்திரம் தேவை என … Read more

துணை வேந்தர்கள் நியமனம்: ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்: முத்தரசன்

சென்னை: பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கும் மசோதாவை சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தி, ஒரு மனதாக நிறைவேற்றி இருப்பதை வரவேற்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “அரசியலமைப்பு அதிகாரத்தின்படி, மாநிலத்தில் மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சியின் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும். ஆனால் தமிழக ஆளுநர் ஆர்என் ரவியின் செயல்பாடு மக்கள் பிரதிநிதிகள் ஆட்சிக்கு போட்டியாக அமைந்துள்ளது. சட்டமன்றப் … Read more

இமாச்சலில் பொது சிவில் சட்டம்: முதல்வர் ஜெய்ராம் அறிவிப்பு

சிம்லா: பொது சிவில் சட்டத்தை இமாச்சல பிரதேச மாநிலத்தில் அமல்படுத்த தயாராக இருக்கிறோம் என்று முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தெரிவித்தார். பாஜக கொள்கைகளில் பொது சிவில் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்பதும் முக்கியமாக உள்ளது. இமாச்சல் தலைநகர் சிம்லாவில் உள்ள இமாச்சல் பவனில் செய்தியாளர்களிடம் நேற்று முதல்வர் ஜெய்ராம் தாக்குர் கூறியதாவது: பொது சிவில் சட்டம் (யுசிசி) ஒரு நல்ல திட்டமாகும். இதை மாநிலங்களில் அமல்படுத்தலாம். இந்த பொது சிவில் சட்டத்தை இமாச்சல் பிரதேச … Read more

டெல்டா மாவட்டங்களில் 4 நவீன அரிசி ஆலை: உணவுத்துறை அமைச்சர்

சென்னை: டெல்டா மாவட்டங்களில் 4 நவீன அரிசி ஆலை அமைக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று மின்சாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் காலை நடைபெற்ற கேள்வி நேரத்தில் திமுக திருவிடைமருதூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கோவி செழியன், ‘‘எனது தொகுதியில்16 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் நவீன அரிசி ஆலை அமைக்கப்படுமா?’’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் … Read more

2024 தேர்தலை சந்திக்க அதிகாரம் பொருந்திய குழு: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு

புதுடெல்லி: டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பின்னர், சோனியா காந்தி இல்லத்துக்கு வெளியில் கட்சி மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கூறியதாவது: வரும் 2024-ம் ஆண்டு நடைபெற மக்களவை தேர்தல் சவால்களை சமாளிப்பது உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு வருவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. … Read more

மஸ்க் வசமான ட்விட்டர் | 'நான் ட்விட்டருக்குத் திரும்ப மாட்டேன்' – ட்ரம்ப்

புளோரிடா: மீண்டும் நான் ட்விட்டருக்குத் திரும்ப மாட்டேன் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கும் நிலையில் இதனை ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்விட்டர் சமூக வலைதளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறார் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆன மஸ்க். இந்த செய்தி உறுதியானது முதலே அமெரிக்காவின் குடியரசு கட்சி உறுப்பினர்கள் அவரிடம் ஒரு கோரிக்கை வைத்து வருகின்றனர். அது அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், குடியரசு கட்சியைச் சார்ந்தவருமான் … Read more

வாழை மரங்கள், வாழை நாரைக் கொண்டு புதிய தொழில்: தங்கம் தென்னரசு

சென்னை: வாழை மரங்கள், வாழை நார்களை உள்ளடக்கிய தொழில்களைத் தொடங்குவதற்கு தமிழக அரசுக்கு ஒரு திட்டம் இருக்கிறது என்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்பேது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று எரிசக்தி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. இதற்கு பதிலளித்து அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, சி.வி.கணேசன் ஆகியோர் புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளனர். முன்னதாக காலை 10 மணிக்கு … Read more

சமாஜ்வாதி எம்எல்ஏவை தவிர்த்து விட்டு உ.பி. காங்கிரஸ் தலைவரை சந்தித்த ஆஸம் கான்

புதுடெல்லி: சமாஜ்வாதி கட்சியின் முஸ்லிம் தலைவர் ஆஸம் கான் சிறையில் தன்னை பார்க்க வந்த தங்கள் கட்சி எம்எல்ஏவை சந்திக்க மறுத்துவிட்ட நிலையில் நேற்று உ.பி. காங்கிரஸ் தலைவரை சந்தித்துப் பேசினார். சமாஜ்வாதி கட்சியின் முக்கிய முஸ்லிம் தலைவரான ஆஸம் கான் கடந்த 26 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார். அவரது விடுதலைக்கு கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முயற்சி எடுக்கவில்லை என அவரும் அவரது ஆதரவாளர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். சமாதான முயற்சி தோல்வி அகிலேஷும் ஆஸம் … Read more

'முன்பை காட்டிலும் ட்விட்டரை சிறந்ததாக மாற்ற விரும்புகிறேன்' – எலான் மஸ்க்

டெக்சாஸ்: சமூக வலைதளமான ட்விட்டர் தளத்தை முன்பை காட்டிலும் சிறந்ததாக மாற்ற விரும்புவதாக தெரிவித்துள்ளார் அதனை வாங்கவுள்ள எலான் மஸ்க். உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆன எலான் மஸ்க், ட்விட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறார். ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது. அந்த அறிவிப்பு முறைப்படி வெளியாகி உள்ளது. இந்நிலையில் அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை தெரிவித்துள்ளார் மஸ்க். சாமானியர்கள் … Read more