ஓரிரு மாவட்டங்களில் இடியுடன் மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் சிலவற்றில் இன்று இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட அறிவிப்பு: இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும், குமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை … Read more

ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளில் 3-வது இடத்தில் இந்தியா

ஸ்டாக்ஹோம்: நாட்டின் பாதுகாப்புக்காக ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் நாடுகள் வரிசையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இத்தகவலை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் (எஸ்ஐபிஆர்ஐ) தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் உலக நாடுகள் ராணுவத்துக்காக செலவிடும் தொகை 2021-ம் ஆண்டில் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மொத்த செலவு 2,11,300 கோடி டாலராகும். இதில் அதிக அளவு செலவிட்ட நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாமிடத்தில் சீனாவும் உள்ளன. இங்கிலாந்து மற்றும் ரஷ்யா ஆகியன … Read more

பெய்ஜிங்கிலும் கரோனா அதிகரிப்பதால் ஊரடங்கு அச்சம் – சீனாவில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு

பெய்ஜிங்: கரோனா ஊரடங்கு அச்சம் காரணமாக சீன தலைநகர் பெய்ஜிங்கில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அங்கிருந்து உலகம் முழுவதும் வைரஸ் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், சீனாவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. சீனாவில் 333 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் தொகையில் 88.3 சதவீதம் பேர் இரு தவணை தடுப்பூசி போட்டுள்ளது. எனினும் கடந்த … Read more

மேலும் 16 யூடியூப் சேனல்கள் முடக்கம்

புதுடெல்லி: சமீபத்தில் 78 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், மேலும் 16 யூடியூப் சேனல்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் நேற்று முடக்கியது. இந்தியாவை சேர்ந்த 10 சேனல்கள், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 6 யூடியூப் சேனல்களுக்கு இந்தத் தடையை மத்திய அரசு விதித்துள்ளது. முடக்கப்பட்டுள்ள யூடியூப் சேனல்கள் மற்றும் பேஸ்புக் கணக்குகள், இந்தியாவில் பீதியை உருவாக்கவும், பிரிவினையை தூண்டவும், பொதுஒழுங்கை சீர்குலைக்கவும் பொய்யான, சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பி வருவதாகவும் தெரிய … Read more

கரோனா அதிகரிப்பு: எந்த சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருப்போம் – மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை: நாம் அனைவரும் எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதுடன், தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது: இந்த அரசு பொறுப்பேற்றபோது கரோனா … Read more

குஜராத்தில் 250 கிலோ ஹெராயின் கடத்த முயன்ற 9 பாகிஸ்தானியர் கைது

அகமதாபாத்: குஜராத்தில் இந்திய கடல் பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த அல் ஹஜ் என்ற படகு ஒன்று அத்துமீறி நுழைந்தது. அரபிக் கடலில் நுழைந்த அந்த படகை கடலோர காவல் படையும், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் மடக்கிப் பிடித்தனர். பாகிஸ்தான் படகில் 250 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பாகிஸ்தான் படகில் இருந்த அந்நாட்டைச் சேர்ந்த 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். படகும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 9 … Read more

தொழில் துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டு

தாம்பரம்: தொழில் துறையில் தமிழகம் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முதல்வர் ஸ்டாலின் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை தாம்பரத்தில் உள்ள மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி கவுரவித்தார். இதில் மத்திய வர்த்தகம் … Read more

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு: ஜூலையில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

புதுடெல்லி: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் மீதான விசாரணையை ஜூலையில் தொடங்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது சட்டப்பிரிவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதன்மூலம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சுமார் 20-க்கும்மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை … Read more

25 பசுமைப் பள்ளிகள், மஞ்சப்பை விருதுகள்… – தமிழக சுற்றுச்சூழல் துறையின் 7 முக்கிய அறிவிப்புகள்

சென்னை: ‘மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில் கண்காட்சி’ என்ற திட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய நிதியிலிருந்து ரூ.13 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பசுமைப் பள்ளிக்கூடம் திட்டம், தமிழகத்தில் மாவட்ட அளவில் காலநிலை மாற்ற இயக்கம் உருவாக்குதல், தமிழகத்தில் … Read more

துணை வேந்தர்கள் நியமன மசோதா: பாமகவின் யோசனை செயல்வடிவம் பெற்றிருப்பதாக அன்புமணி மகிழ்ச்சி

சென்னை: பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசே நியமிக்க சட்டம் கொண்டுவரப்படுவதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில், “தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட முன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் இன்று கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. பல்கலைக்கழக நிர்வாகத்தில் தேவையற்ற குழப்பங்களைத் தடுக்க துணை வேந்தர்களை அரசே நியமிக்க வேண்டும் என்று … Read more