சென்னையில் பாய்மரப் படகோட்டுதல் அகாடமிக்கு ரூ.7 கோடி; உதகையில் ரூ.5 கோடியில் மலை மேலிடப் பயிற்சி மையம்: அரசு தகவல்

சென்னை: சென்னையில் பாய்மரப் படகோட்டுதல் அகாடமி மற்றும் பாய்மரப் படகோட்டுதல் மற்றும் துடுப்புப் படகோட்டுதலுக்கான முதன்மை நிலை மையம் அமைக்க அரசு ரூ.7 கோடி ஒதுக்கியுள்ளதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பதிலளித்து புதிய … Read more

இன்றும் முடிவாகவில்லை: காங்கிரஸில் பிரசாந்த் கிஷோரை சேர்க்க மூத்த தலைவர்கள் எதிர்ப்பு

புதுடெல்லி: தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பது தொடர்பாக இன்று நடந்த கூட்டத்திலும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை. மேற்கு வங்கம், தமிழகம், டெல்லி என பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் பணியில் பங்கேற்று வெற்றி கண்ட பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின. ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை பலமுறை சந்தித்து பேசினார். ஆனால் காங்கிரஸில் இணையவில்லை. அதன் பிறகு அவர் காங்கிரஸ் கட்சியையும், நேரு குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சித்து வந்தார். திடீர் திருப்பமாக … Read more

தமிழகம் வரும் இலங்கைத் தமிழர்களை அகதிகளாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இலங்கையிலிருந்து வருவோரை அகதிகளாக அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழ வழியில்லாத தமிழ் மக்கள், தஞ்சம் தேடி தமிழகத்திற்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் அவர்கள் அகதிகளாக மத்திய அரசால் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவர்களுக்கு உணவு, நிதி உள்ளிட்ட உதவிகளை சட்டபூர்வமாக தமிழக அரசால் … Read more

வண்டலூர் உயிரியில் பூங்கா விலங்குளின் நேரலைக்கு இதுவரை 6 கோடி பார்வையாளர்கள்: தமிழக அரசு தகவல் 

சென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியில் பூங்காவினுள்ள 16 விலங்குகளின் 24X7 நேரலை செய்தல் மக்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது மற்றும் இதுவரை 6 கோடி பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளதாக வனத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் பதிலளித்து புதிய அறவிப்புகளை வெளியிட்டனர். … Read more

தூத்துக்குடி மாணவி சோபியா வழக்கில் தமிழிசை சவுந்தரராஜன் விடுவிப்பு: உயர் நீதிமன்ற கிளை உத்தரவு 

மதுரை: தூத்துக்குடி மாணவி சோபியா தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரும் மனுவில், தமிழிசை சவுந்தரராஜன் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சேர்க்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி கந்தன் காலனியைச் சேர்ந்த சோபியா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ‘நான் கனடாவில் மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறேன். கடந்த 2019 செப்டம்பர் 3-ல் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணம் செய்தேன். அதே விமானத்தில் அப்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் … Read more

பற்றாக்குறை என மாநிலங்கள் புகார்; போதுமான நிலக்கரி கையிருப்பில் உள்ளது: மத்திய அமைச்சர் ஜோஷி விளக்கம்

புதுடெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவது மற்றும் கரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக் கப்பட்டது ஆகிய காரணங்களால் மின்சார பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் சில மாநிலங்களில் மின்வெட்டு நிலவுகிறது. இந்நிலையில், அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு சீராக விநியோகம் செய்யவில்லை என சில மாநில அரசுகள் குறை கூறி வருகின்றன. இதுகுறித்து மத்திய நிலக்கரி துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி நேற்று முன்தினம் கூறும்போது, “நாட்டில் போதுமான … Read more

எலான் மஸ்க் வசமாகிறதா ட்விட்டர்? – தொடரும் பேச்சுவார்த்தை

சான் பிரான்சிஸ்கோ: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் அண்மையில் ட்விட்டரை 46.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்க தயார் என அறிவித்தார். இந்நிலையில், அது தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தெரிகிறது. அண்மையில் ட்விட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் மஸ்க். தொடர்ந்து அந்நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியிருப்பதாக மஸ்க் தெரிவித்திருந்தார். அதோடு ட்விட்டரில் எடிட் பட்டன் குறித்தும் அவர் பேசியிருந்தார். அதன் பின்னரே ட்விட்டர் நிறுவனத்தின் … Read more

குஜராத் மாடல் | 'ஆளுநர் இடத்தில் அரசு' – துணை வேந்தர் நியமனத்தில் நிகழப்போகும் மாற்றங்கள் என்னென்ன?

சென்னை: தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டத் திருத்தத்தின்படி, இனி ஆளுநர் இருக்க வேண்டிய இடத்தில் எல்லாம் அரசுதான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குஜராத் மாநில சட்டங்களை பின்பற்றி இந்தப் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தவர்களை அரசே நியமிக்கும் சட்ட திருத்த மசோதாவை தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த சட்ட மசோதாவிற்கு பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. இதனைத் … Read more

'ஹிஜாப்' சர்ச்சையைத் தொடர்ந்து கர்நாடக பள்ளிக் கூடத்தில் எழுந்துள்ள 'பைபிள்' பிரச்சினை

பெங்களூரு: பள்ளிக்கு பிள்ளைகள் பைபிள், கிறிஸ்தவப் பாடல் புத்தகங்களைக் கொண்டு வர அனுமதிப்பீர்களா என்று கர்நாடக பள்ளி ஒன்று பெற்றோரிடம் ஒப்புதல் படிவம் கொடுத்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பெங்களூருவின் புகழ்பெற்ற க்ளாரன்ஸ் ஹை ஸ்கூல் சார்பில் 11 ஆம் வகுப்பில் சேர்வோருக்கான விண்ணப்பப் படிவத்துடன் இந்த ஒப்புதல் படிவமும் கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வருவது பெரும் சர்ச்சைகளுக்கு இடையே தடை செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும் சூழலில், … Read more

பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பப்ஜி மதனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூ டியூப் சேனல்கள் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார், பெண்களை ஆபாசமாக சித்தரித்துப் பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட … Read more