இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போன் | விலை and சிறப்பு அம்சங்கள்

புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகியுள்ளது ரியல்மி நார்சோ 50A பிரைம் (Realme Narzo) ஸ்மார்ட்போன். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம். ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன நிறுவனமான ரியல்மி நிறுவனத்தின் நார்சோ லைன் அப்பில் அண்மைய வரவாக வெளிவந்துள்ளது ரியல்மி நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போன். இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த போன் வரும் 28-ஆம் தேதி முதல் அமேசான், ரியல்மி வலைதளம் மற்றும் ரீடைல் சந்தையில் … Read more

சென்னை ஐஐடியில் மேலும் 18 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 78 ஆக அதிகரிப்பு

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் புதிதாக மேலும் 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், வளாகத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் கடந்த வியாழக்கிழமை மந்தாகினி என்ற விடுதியில் தங்கியிருந்த மாணவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொடர்பில் இருந்த மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 3 பேருக்கும், அதன் பின்னர் 18 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து … Read more

ராமர் குறித்து பேஸ்புக்கில் விமர்சனம்: பஞ்சாப்பில் உதவிப் பேராசிரியர் பணி நீக்கம்

சண்டிகர்: பஞ்சாப்பில் உள்ள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் ஒருவர், கடவுள் ராமர் குறித்து தரக்குறைவான விமர்சனத்தை தனது பேஸ்புக்கில் பகிர்ந்ததாகக் கூறி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப்பில் உள்ள லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் குர்சங் பீரித் கவுர். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ராமர் குறித்து தரக்குறைவான வார்த்தைகள் இடம்பெற்ற வீடியோவை பதிவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவரது வீடியோ பதிவுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் உதவிப் பேராசிரியர் குர்சங் பீரித் … Read more

அமைச்சர் பெரியகருப்பனைக் கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினரை கடுமையான வார்த்தைகளைக் கொண்டு விமர்சித்த அமைச்சர் பெரியகருப்பனைக் கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டப்பேரவையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இந்த மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அதிமுக தெரிவித்தது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் மசோதா மீதான விவாதத்தின்போது, அதிமுக உறுப்பினரை கடுமையான வார்த்தைகளைக் கொண்டு … Read more

திடீர் திருப்பம்: காங்கிரஸில் சேரும் பிரசாந்த் கிஷோர் தெலங்கானாவில் தேர்தல் வேலை பார்க்க சந்திரசேகர் ராவுடன் ஒப்பந்தம்

ஹைதராபாத்: காங்கிரஸ் கட்சியில் சேருவதற்காக கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தி வரும் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சிக்கு பணியாற்ற ஒப்பந்தம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம், தமிழகம், டெல்லி என பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் பங்கேற்று வெற்றி கண்ட பிரசாந்த் கிஷோர், காங்கிரஸில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின. ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை பலமுறை சந்தித்துப் … Read more

ராணுவச் செலவினம் | உலகளவில் இந்தியா 3-ம் இடம்; 5-வது இடத்தில் ரஷ்யா – ஆய்வறிக்கை தகவல்

ஸ்டாக்ஹோம்: ராணுவத்துக்கான செலவுகளை மேற்கொள்வதில் உலகிலேயே இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது என ஓர் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச அமைதி ஆய்வு மையம் (SIPRI) சார்பில் மேற்கொள்ளப்பட்ட அறிக்கையில், கடந்த 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி உலகின் ராணுவச் செலவுகள் 2.1 ட்ரில்லியன் டாலர் அளவை எட்டியுள்ளது. இது, இதுவரை கண்டிராத உச்சபட்ச செலவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகில் ராணுவத்துகாக அதிகமாக செலவு செய்த நாடுகளில் … Read more

தனியார் டிவியின் யூடியூப் சேனலில் ஆளுநரை இழிவாக பேசியதாக மதுரை வழக்கறிஞர் கைது

மதுரை: தமிழக ஆளுநரை யூடியூப் சேனல் ஒன்றில் இழிவாக பேசிய புகாரில் வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் என்பவரை மதுரை போலீஸார் கைது செய்தனர். மதுரை பிபி.சாவடி பல்லவன் நகர் 3-வது தெருவைச் சேர்ந்த அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் நிறுவனத் தலைவரான வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன்(56) தனியார் டிவியின் யூடியூப் சேனலுக்கு பிப்.4-ம் தேதி அளித்த பேட்டியில் ஆளுநருக்கு எதிராக கண்ணியக் குறைவாகவும் இழிவான வார்த்தைகளையும் பேசியுள்ளார். ஆளுநருக்கு எதிராக மக்களைத் தூண்டி கலகம் ஏற்படுத்தும் … Read more

‘‘எதிரியின் நண்பனை ஒருபோதும் நம்பக்கூடாது’’- பிரசாந்த் கிஷோர் மீது மாணிக்கம் தாகூர் மறைமுக தாக்கு

புதுடெல்லி: பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சிக்கு தேர்தல் பணியாற்ற ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் எதிரிக்கு நண்பனாக இருக்கக்கூடியவரை ஒருபோதும் நம்பக்கூடாது என்று பிரசாந்த் கிஷோரை தெலங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்கம் தாகூர் மறைமுகமாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் சேருவதற்காக கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தி வரும் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம், தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சிக்கு பணியாற்ற … Read more

பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: 496 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

வேலூர்: வேலூரில் பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த இளம் பெண் மருத்துவர், அதே மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவரான தனது ஆண் நண்பருடன் கடந்த மார்ச் 16-ம் தேதி இரவு காட்பாடியில் உள்ள திரையரங்கில் படம் பார்த்துவிட்டு நள்ளிரவு ஷேர் ஆட்டோவில் வேலூர் திரும்பிக் கொண்டிருந்தார். அந்த ஆட்டோவில் பயணிகள் போல் ஏற்கெனவே அமர்ந்திருந்த கும்பல், இருவரையும் கத்தி முனையில் கடத்தி செல்போன், 2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்ததுடன் அவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். … Read more

பிரியங்கா காந்தியிடமிருந்து எம்.எப்.ஹுசைன் ஓவியத்தை ரூ.2 கோடிக்கு வாங்க கட்டாயப்படுத்தப்பட்டேன்: குற்றப்பத்திரிகையில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் தகவல்

மும்பை: காந்தி குடும்பத்தாரிடமிருந்து பிரபல ஓவியர் எம்.எப்.ஹுசைன் ஓவியத்தை ரூ.2 கோடிக்கு வாங்கும்படி, அப்போதைய மத்திய அமைச்சர் முரளி தியோராவால் கட்டாயப்படுத்தப்பட்டேன் என்று யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் தெரிவித்துள்ளார். பணமோசடி வழக்கில் மார்ச்2020-ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட யெஸ் வங்கியின் நிறுவனரும் அதன் முன்னாள் நிர்வாக இயக்குனருமான ராணா கபூர் தற்போதுநீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுஉள்ளார். சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் செய்ததன் மூலம்ராணா கபூர், யெஸ் வங்கியின் இணை நிறுவனர், அவரது குடும்பத்தினர், திவான் ஹவுசிங் … Read more