புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கை: அமித் ஷாவிடம் முதல்வர் ரங்கசாமி மனு

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, நடப்பாண்டில் ரூ.2000 கோடி கூடுதல் நிதி உட்பட 7 அம்ச கோரிக்கைகளை கொண்ட மனுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் முதல்வர் ரங்கசாமி விமான நிலையத்தில் அளித்தார். புதுச்சேரிக்கு ஒரு நாள் பயணமாக வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாலை டெல்லிக்கு புறப்பட்டார். அவரை வழியனுப்ப விமான நிலையத்துக்கு சென்றபோது முதல்வர் ரங்கசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் 7 கோரிக்கைகள் அடங்கிய மனுவை … Read more

கொடைக்கானல் வரும் வாகனங்களில் பிளாஸ்டிக் பறிமுதல்:  மலையடிவாரப் பகுதியிலேயே சோதனை நடத்த வலியுறுத்தல் 

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வரும் வாகனங்களில் சுற்றுலாபயணிகள் வைத்திருக்கும் ஒரு முறை பயன்படுத்தப்படும் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை நகராட்சி நிர்வாகம் கொடைக்கானல் நகரின் நுழைவுவாயிலில் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தி பறிமுதல் செய்துவருகிறது. இதை மலையடிவாரப்பகுதியிலேயே மேற்கொள்ளவேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதி மற்றும் மலைகிராமங்களில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்தலங்களில் ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் பிளாஸ்டிக் கேன்கள் விற்பனை … Read more

டெல்லி ஜஹாங்கிர்புரி சம்பவம் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டின் அடையாளம்: ப.சிதம்பரம்

டெல்லி ஜஹாங்கிர்புரி சம்பவம் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டின் ஒட்டுமொத்த சீர்கேட்டின் அடையாளம் என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்தப் பேட்டியில், “டெல்லி ஜஹாங்கிர்புரி சம்பவம் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டின் ஒட்டுமொத்த சீர்கேட்டின் அடையாளம். ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற புதிய உத்தியின் மூலம் முஸ்லிம்கள், ஏழைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. சம்பவ இடத்துக்கு காங்கிரஸ் குழு தாமதமாகச் சென்றதாகவும், ஓவைசியும் பிரந்தா காரத்தும் தான் முதலில் சென்றதாகவும் கூறுகின்றனர். … Read more

சென்னை மின்சார ரயில் விபத்து; விசாரணைக் குழு அமைக்கப்படும்: தெற்கு ரயில்வே

சென்னை: சென்னை கடற்கரை மின்சார ரயில் நிலையத்தில், பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ரயில் நடைமேடை மீது ஏறி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில் விபத்து: தாம்பரம் செல்வதற்காக மின்சார ரயில் ஒன்று பணிமனையிலிருந்து சென்னை கடற்கரை மின்சார ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடைக்கு இன்று மாலை 4.25 மணிக்கு வந்தது. ரயிலை நிறுத்துவதற்கு ஓட்டுநர் சங்கர் முயன்றபோது, பிரேக் பிடிக்கவில்லை. இதனால் … Read more

ஜனநாயகத்தின் புதிய அத்தியாயங்களை ஜம்மு-காஷ்மீர் எழுதிக் கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்

ஸ்ரீநகர்: ஜனநாயகமாகட்டும் அல்லது வளர்ச்சியாகட்டும் ஜம்மு-காஷ்மீர் கடந்த 2,3 ஆண்டுகளில் புதிய அடையாளத்தைப் பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு இன்று ( ஏப்ரல் 24 ) பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு-காஷ்மீர் வருகை தந்தார். ஜம்மு- காஷ்மீருக்கு சட்டப்பிரிவு 370ன் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் என்பதால் இது பலதரப்பிலும் கவனம் பெற்றது. இந்நிலையில் ஜம்மு வந்த பிரதமர் மோடி … Read more

ஆப்கானிஸ்தானில் டிக் டாக், பப்ஜியை தடை செய்தது தலிபான் அரசு

காபூல்: ஆப்கானிஸ்தானில் டிக் டாக், பப்ஜி போன்ற செயலிகளுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. இதுபோன்ற செயலிகளால் இளைஞர்கள் தடம் மாறிச் செல்வதாகக் கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. இதனையடுத்து அந்நாட்டு அதிபரான ஹமீது கர்சாயும் நாட்டைவிட்டு தப்பியோடினர். இந்நிலையில், ஆட்சி தலிபான்கள் வசம் வீழ்ந்தது. தலிபான் ஆட்சி அமலுக்கு வந்ததில் இருந்தே அங்கே இசை, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என அனைத்து … Read more

சென்னையில் மின்சார ரயில் நடைமேடையில் ஏறி விபத்து: கடைகள் சேதம்; ஓட்டுநருக்கு காயம்

சென்னை: ரயில்வே பணிமனையிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளானது. இது ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. ரயில்வே பணிமனையிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் ஒன்று இன்று (ஏப்.24) மாலை 4.25 மணிக்கு வந்தது. இது கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கிச் செல்லக்கூடிய ரயில். இந்த ரயிலானது சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு வந்தபோது, பிரேக் பிடிக்காத காரணத்தால், கட்டுப்பாட்டை இழந்து ரயில்வே … Read more

'அப்படிச் சொன்னதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை' – ஜாமீனில் வெளிவந்த துறவி பஜ்ரங் முனி பேட்டி 

முஸ்லிம் பெண்களுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட துறவி பஜ்ரங் முனி தாஸ், தனது கருத்துக்காக வருத்தப்படவில்லை, குற்ற உணர்ச்சி இல்லை என்றும், இந்து மதத்தையும், இந்துப் பெண்களையும் பாதுகாக்க எத்தனை முறை வேண்டுமானாலும் சிறை செல்ல தயார் என்றும் கூறினார். உ.பி.யின் சீதாபூரில் மஹரிஷி ஸ்ரீ லஷ்மண் தாஸ் உதாஸி ஆசிரமம் உள்ளது. இதன் தலைமை பதவியில் மடாதிபதி மஹந்த் பஜ்ரங் முனி தாஸ் உள்ளார். இவர் கடந்த ஏப்ரல் 2-ல் சீதாபூரில் … Read more

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில் மருத்துவ முதலுதவி மையம் திறப்பு

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில் பக்தர்களுக்கான மருத்துவ முதலுதவி மையம் இன்று (ஏப்.24) திறக்கப்பட்டது. தமிழகத்தில் பக்தர்கள் வருகை அதிகமாக உள்ள 10 கோயில்களில் மருத்துவ முதலுதவி மையம் அமைக்கப்படும் என்று கடந்தாண்டு செப்.4-ம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார். இதைத்தொடர்ந்து, கடந்தாண்டு டிச.31-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொளிக் காட்சி மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய … Read more

லக்கிம்பூர் கேரி வழக்கு: மத்திய அமைச்சர் மகன் ஆஷிஸ் மிஸ்ரா நீதிமன்றத்தில் சரண்; சிறையில் அடைப்பு

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ரா இன்று (ஏப்.24) நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து அவர் லக்கிம்பூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இது குறித்து சிறைச்சாலை கண்காணிப்பாளர் பிபி சிங், ஆஷிஸ் கூறுகையில், “உச்ச நீதிமன்றம் கொடுத்த கெடு நாளை முடிவடையும் நிலையில் ஆஷிஸ் மிஸ்ரா உள்ளூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக சிறையில் அவர் தனி அறையில் அடைக்கப்படுகிறார்” என்றார். … Read more