தமிழகத்தில் மின் விநியோகம் சீராகிவிட்டது: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை: மத்திய மின் தொகுப்பிலிருந்து மின்சாரம் வரதாதால் மின் விநியோகத்தில் பற்றாக்குறை இருந்ததாகவும், இன்று (சனிக்கிழமை) மாலை முதல் நிலைமை சீராகிவிட்டதாகவும் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ” 796 மெகா வாட் மத்திய தொகுப்பு மின்சாரம் வராததால், மின் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது. முதல்வர் ஸ்டாலினின் சீரிய நடவடிக்கையால், தகுந்த மாற்று ஏற்பாடுகளும், மாநில மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டும், இன்று மாலை முதல் சீரான மின் … Read more

வைகை ஆற்றில் மணல் எடுத்து தடுப்பணை கட்டும் ஒப்பந்ததாரர்கள்: வேடிக்கைப் பார்க்கும் அதிகாரிகள்

மதுரை; மதுரை ஆரப்பாளையத்தில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணைக்காக ஆற்றிலே மண் எடுத்து தடுப்பணை கட்டப்படுவதாகவும், அதனைத் தடுக்க வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் கைக்கட்டி வேடிக்கைப் பார்ப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை வைகை ஆற்றல் ஓடக்கூடிய தண்ணீரை ஆங்காங்கே தடுத்து தேக்கி வைத்து மாநகராட்சிப் பகுதிகளின் நிலத்தடி நீரை பெருக்க தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. ஏற்கெனவே மாநகராட்சியின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ஏவி மேம்பாலம் அருகேயும், ஒபுளாபடித்துறை அருகேயும் தடுப்பனைகள் கட்டப்பட்டது. ஆனால், எந்த நோக்கத்திற்காக … Read more

நீதியைக் கொன்றுவிடும் 'உடனடி' எதிர்பார்ப்பு: திருக்குறளை மேற்கோள் காட்டி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு

சென்னை: “நீதிமன்றம் தங்கள் உரிமையை பாதுகாக்கும் என மக்கள் நம்புகின்றனர்” என்று திருக்குறளை மேற்கோள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேசினார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் 9 மாடி நிர்வாக பிரிவு கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டி, நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடங்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நீதிபதி ரமணா பேசுகையில், “எல்லாருக்கும் வணக்கம்… நிகழ்ச்சியில் பங்கேற்றது ரொம்ப சந்தோஷம். முதல் … Read more

3 வாரங்களுக்கு முன்பு ரூ.5, இன்று ரூ.40, நாளை ரூ.50 – தக்காளி விலை அதிகரிப்பின் பின்புலம் | மதுரை நிலவரம்

மதுரை: தமிழகத்தில் கோடை வெயிலுக்கும், மழைக்கும் சாகுபடி செய்த தக்காளி அழுகிப்போவதால் கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. அதனால், தக்காளி விலை கிலோ ரூ.40-க்கு விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தக்காளி விற்பனைக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, சென்னை கோயம்பேடு சந்தைகளுக்கு அடுத்ததாக மதுரை மாட்டுத்தாவணி சென்டரல் காய்கறி மார்க்கெட் முக்கிய சந்தையாக திகழ்கிறது. இந்த சந்தைக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மட்டுமில்லாது கர்நாடகா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. … Read more

இந்தியா போஸ்ட் குலுக்கல்; பரிசு வழங்குவதாக சமூகவலைதளங்களில் போலி யுஆர்எல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

புதுடெல்லி: குலுக்கலில் பரிசுகள் வழங்கப்படுவதாக கூறி போலியான பெயர்களில் வாட்ஸ் அப் உட்பட சமூகவலைதளங்களில் வலம் வரும் போலி யுஆர்எல்-களை நம்பி பதிலளிக்க வேண்டாம் என பொதுமக்களை தபால்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து இந்தியா போஸ்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அண்மைக்காலமாக, வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மின்னஞ்சல்கள், குறுந்தகவல்களின் மூலம், சில ஆய்வுகள், வினாடி-வினா வழியாக அரசு மானியங்கள், பரிசுகள் வழங்கப்படுவதாக யுஆர்எல்-கள் வைரலாகி வருவதை இந்தியா போஸ்ட் கண்காணித்து வருகிறது. இந்தியா போஸ்ட் பெயரில் இதுபோன்ற … Read more

நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை பின்பற்ற வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நீதிமன்றக் கட்டிட திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற தலைமை தலைமை நீதிபதி மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,” … Read more

ஆர்-வேல்யூவும் சென்னை ஐஐடி ஆய்வும் | இந்தியாவில் கரோனா பரவல் அதிகரிக்கிறதா?

சென்னை: இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைக் கணக்கிடும் ஆர்-வேல்யூ திடீரென கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், நாட்டில் கரோனா 4-வது அலை ஏற்படுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆர்-வேல்யூ என்றால் என்ன? ஆர்-வேல்யூ என்பது எண் வரிசையில் 1-க்கும் குறைவாக இருந்தால்தான் கரோனா பரவல் குறைவாக இருக்கிறது என்று அர்த்தம். 1 அல்லது அதிகமாகச் செல்லும்போது, கரோனா பரவல் வேகம் அதிகரி்க்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். அதாவது ஆர் வேல்யூ என்பது தொற்றுள்ள ஒருவர் மூலம் எத்தனை … Read more

வளைகுடாவில் திருப்புமுனை: ஈரான் – சவுதி இடையே நடந்த 5வது சுற்று பேச்சுவார்த்தை

தெஹ்ரான்: ஈரானும் சவூதி அரேபியாவும் ஐந்தாவது சுற்று நேரடிப் பேச்சுவார்த்தையை பாக்தாத்தில் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை ஈரான் பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில், ‘இராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரானும் சவுதி அரேபியாவும் ஐந்தாவது சுற்று நேரடிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை எந்த தேதியில் நடத்தப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. பேச்சுவார்த்தையில் ஈரானின் சுப்ரீம் நேஷனல் செக்யூரிட்டி கவுன்சில் பிரதிநிதிகள் மற்றும் சவுதி அரேபியாவின் உளவுத்துறை தலைவர் காலித் பின் … Read more

பில் கேட்ஸை உருவக் கேலி செய்த எலான் மஸ்க்: எதிர்வினை ஆற்றிய நெட்டிசன்கள்

கலிபோர்னியா: மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸை உருவக் கேலி செய்துள்ளார் உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க். அவர்கள் இருவருக்கும் இடையிலான உரையாடல் கூட வெளியாகியுள்ளது. 1995 முதல் 2017 வரை உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்தவர் பில் கேட்ஸ். இதில் 2010 மற்றும் 2013-ல் அந்த அந்தஸ்த்தை அவர் இழந்திருந்தார். அவர் சிறந்த கொடையாளியும் கூட. அவரை பகிரங்கமாக ட்விட்டர் களத்தில் ட்ரோல் செய்துள்ளார் டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி … Read more

இந்தியா – இலங்கை கடல்வழி மின்பாதை திட்டத்தை கைவிடுக: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் ஒரு போதும் இந்தியாவுக்கு எதிராக அமைந்துவிடக் கூடாது. எனவே கடல்வழி மின் தடம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார் இது குறித்து இன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதற்கு வசதியாக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடலுக்கடியில் மின் பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுகள் மீண்டும் தொடங்கியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் … Read more