நீலகிரியில் 25, 26-ல் துணைவேந்தர்கள் மாநாடு: ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார்

சென்னை: பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு, நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வரும் 25, 26-ம்தேதிகளில் நடைபெறுகிறது. ஆளுநர் மாளிகை ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டை, ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார். புதிய உலக சூழலில் இந்தியாவின் பங்கு, 2047-ம் ஆண்டு இந்தியா முன்னணி என்ற கருத்துகளை மையப்படுத்தி நடத்தப்படும் இந்த மாநாட்டில், யுஜிசி தலைவர் எம்.ஜெகதீஷ் குமார், ஜோஹோ கார்ப்பரேஷன் தலைமைச் செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். தமிழகத்தில் … Read more

வெளிநாடுவாழ் இந்தியருக்கு வாக்குரிமை – தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலனை

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணைய குழு அண்மையில் தென் ஆப்பிரிக்கா, மொரிஷியஸ் நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தது. அந்த நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினரிடம் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க ஆண்டுக்கு 4 தகுதி தேதிகள், ஆதார் எண் இணைத்தல், வாக்குச் சாவடிகளில் முதியவர்களுக்கு முன்னுரிமை, கரோனா நோயாளிகள் வாக்களிக்க நேரம் ஒதுக்கீடு, பெண்கள் நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள் என பல்வேறு சீர்திருத்தங்கள், புதிய முயற்சிகள் … Read more

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருகை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார். புதுச்சேரியில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச் சர் அமித் ஷா, டெல்லியில் இருந்து விமானத்தில் இன்று இரவு 7 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தமிழக பாஜக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆவடியில் இரவு தங்குகிறார் பாஜகவினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின்னர், காரில் ஆவடி மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வளாகத்துக்குச் செல்கிறார். அங்கு, … Read more

கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு ஜாமீன்

ராஞ்சி: ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பிஹார் முதல்வராக இருந்த போது கால்நடைகளுக்கு தீவனங்கள் வாங்கியதாக போலியாக கணக்கு காண்பித்து அரசு கருவூலத்தில் இருந்து பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து லாலு மீது சிபிஐ 5 வழக்குகளை பதிவு செய்தது. ஏற்கெனவே 4 வழக்குகளில் லாலு சிறை தண்டனை பெற்றார். 5-வதாக ராஞ்சியில் உள்ள தோரந்தா கருவூலத்தில் நடந்த ரூ.139 கோடி மோசடி தொடர்பாக லாலு … Read more

ஓரிரு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 23-ம் தேதி, தென் தமிழகம், கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும். 24-ம் தேதி, கன்னியாகுமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், சேலம், நாமக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, திருப்பத்தூர், … Read more

தொழில்நுட்பத்தில் 2 அடி முன்னே இருக்க காவலர்களுக்கு அமித் ஷா அறிவுரை

போபால்: மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் காவலர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு செயல்படுகிறது. இந்த அமைப்பு சார்பில் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் 48-வது அகில இந்திய காவலர் அறிவியல் மாநாடு நேற்று தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது: நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்த காவல் துறை நவீனப்படுத்தப்பட வேண்டும். காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட வேண்டும். தொழில்நுட்பத்தில் குற்றவாளிகளைவிட, காவலர்கள் 2 அடி முன்னே இருக்க … Read more

உயர் நீதிமன்ற விழாவில் அமைச்சர் ரகுபதி பங்கேற்பது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அண்ணாமலை கடிதம்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் விழாவில் அமைச்சர் ரகுபதி பங்கேற்பது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்.23-ம் தேதி (இன்று) நடைபெற உள்ள விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் திறப்பு விழா மற்றும் உயர் நீதிமன்ற நிர்வாக அலுவலகக் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க உள்ளீர்கள். இந்த விழாவில், … Read more

ஜம்முவில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 தற்கொலைப் படை தீவிரவாதிகள் – பிரதமர் மோடி பயணத்தை சீர்குலைக்க சதி

புதுடெல்லி: ஜம்முவின் சுன்ஜ்வான் பகுதியில் நேற்று காலை சுட்டுக் கொல்லப் பட்ட 2 தற்கொலைப்படை தீவிரவாதிகள், பிரதமரின் ஜம்மு காஷ்மீர் பயணத்தில் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டியிருக்கலாம் என ஜம்மு காஷ்மீர் ஏடிஜிபி தில்பாக் சிங் கூறியுள்ளார். ஜம்மு சுன்ஜ்வான் பகுதியில் நேற்று 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தீவிரவாதிகள் என தெரியவந்துள்ளது. இது குறித்து ஜம்மு காஷ்மீர் ஏடிஜிபி தில்பாக் சிங் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஜம்மு புறநகர் … Read more

திருவள்ளுவர் பல்கலை.,யில் அம்பேத்கர் படிப்புகள் துறை தொடங்கக் கோரிய வழக்கு:  தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் படிப்புகள் துறையை தொடங்கக் கோரிய வழக்கில் பல்கலைக்கழகம், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவள்ளுவர் பல்கலைக்கழக சிண்டிகேட் முன்னாள் உறுப்பினரும், ஓய்வுபெற்ற பேராசிரியருமான இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் படிப்புகள் என்ற பெயரில் தனித் துறையை அமைக்க 2006-ம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் 2007-ம் ஆண்டு … Read more

ட்ரோன் சேவை துறை மூலம் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: மத்திய அமைச்சர் சிந்தியா தகவல்

புதுடெல்லி: ட்ரோன் தயாரிப்பை அதிகரிக்கும் நோக்கில் உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் (பிஎல்ஐ) கீழ் 14 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தைச் சேர்ந்த இரு நிறுவனங்களும் அடங்கும். இந்நிலையில் நேற்று இந்தோ – அமெரிக்கன் வர்த்தக சபை நிகழ்வில் மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பேசினார். ரூ.5,000 கோடி அளவில்.. அப்போது அவர் கூறும்போது, ‘‘தற்போது ட்ரோன் சேவை துறை மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அத்துறையில் ரூ.5,000 கோடி அளவில் … Read more