தமிழகத்தில் புதிதாக 57 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஆண்கள் 30, பெண்கள் 27 என மொத்தம் 57 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 37 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 53,447 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 34 லட்சத்து 15,136 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 27 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 286 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு … Read more

கிராமப்புற சிறுபான்மையின பள்ளி மாணவியருக்கு ஊக்கத் தொகை: தமிழக அரசின் 5 முக்கிய அறிவிப்புகள்

சென்னை: மாநில அளவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18-ம் தேதி “சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா” கொண்டாடப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, கிராமப்புற சிறுபான்மையின மாணவியர் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில 3 முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்குதல், சென்னையில் … Read more

அடிப்படை வசதி கோரிய கர்நாடக இளைஞரை அறைந்த காங்கிரஸ் எம்எல்ஏ

பெங்களூரு: கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் பவகடா தொகுதிக்கு உட்பட்ட நாகேனஹள்ளியை சேர்ந்தவர் நரசிம்ம மூர்த்தி (26). இவர் நேற்றுமுன்தினம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வெங்கட ரமணப்பாவை சந்தித்து, நாகேனஹள்ளியில் சாலை, குடிநீர் வசதிகள் இல்லை. அவற்றை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்று கோரினார். இதனால் கோபமடைந்த வெங்கட ரமணப்பா, நரசிம்ம மூர்த்தியின் கன்னத்தில் அறைந்தார். இதை சற்றும் எதிர்பாராத அவர், எம்எல்ஏவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து எம்எல்ஏ.வின்ஆதரவாளர்கள் அங்கிருந்து நரசிம்ம மூர்த்தியை அப்புறப்படுத்தினர். … Read more

'காவலாளி கொலையில் நியாயம் கிடைக்கணும்' – கொடநாடு வழக்கு விசாரணையில் சசிகலா கூறியதாக தகவல்

சென்னை: கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் நியாயம் கிடைக்க வேண்டும் என்று தனிப்படை போலீஸார் விசாரணையின்போது சசிகலா கூறியுள்ளதாக வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் கூறியுள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீஸார் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர். காவல்துறை ஐ.ஜி. சுதாகர் தலைமையில் நீலகிரி எஸ்.பி ஆசிஸ்ராவத், ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பி சந்திரசேகரன், பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் என8 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் இன்று காலை 10 மணிக்கு … Read more

‘‘பாஜகவிடம் நல்ல விஷயங்கள் உள்ளன; நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்’’- ஹர்திக் படேல் புகழுரையால் காங்கிரஸ் அதிர்ச்சி

அகமதாபாத்: பாஜகவிடம் சில நல்ல விஷயங்கள் உள்ளன, அவர்கள் வலுவாக உள்ளனர், அதை நாம் ஒப்புக்கொள்ள தான் வேண்டும் என குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார். குஜராத் மாநில காங்கிரஸில் உட்கட்சிப்பூசல் ஏற்பட்டுள்ளது. தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ள குஜராத் மாநில காங்கிரஸின் செயல் தலைவர் ஹர்திக் படேல் அக்கட்சியில் இருந்து விலகப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கு ஏற்ப குஜராத் காங்கிரஸ் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து அவர் கடுமையாக விமர்சித்து … Read more

தீவிர கரோனா நோயாளிகளுக்கான மாத்திரை: உலக சுகாதார நிறுவனம் அனுமதி

ஜெனிவா: தீவிர கரோனா நோயாளிகளுக்கு வழங்குவதற்காக பைசர் நிறுவனம் தயாரித்த மாத்திரைக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. தீவிர கரோனா தொற்று உள்ளவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அளிப்பதற்காக சைபர் நிறுவனம் கரோனா மாத்திரை அறிமுகம் செய்தது. இந்த மாத்திரை 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி “பாக்ஸ்லோவிட்” என்ற மாத்திரைக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. தீவிர கரோனா தொற்று உள்ளவர்கள், தடுப்பூசி செலுத்தாதாவர்கள், வயதானவர்கள் ஆகியோருக்கு இந்த மருந்தை … Read more

கோடநாடு வழக்கு விசாரணையில் முழு ஒத்துழைப்பு வழங்கினேன்; நீதி கிடைக்க வேண்டும்: சசிகலா

சென்னை: கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க வேண்டும் என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோடநாட்டில் உள்ள எங்களது எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்றும் இன்றும் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது. காவல் துறையை சேர்ந்தவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளித்திருக்கிறேன். முழுமையான அளவிற்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறேன். கோடநாடு எஸ்டேட் என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஒரு சாதாரண இடமாக … Read more

உர மானியம் ரூ.1.65 லட்சம் கோடியை எட்டும்

புதுடெல்லி: மத்திய அரசு வழங்கி வரும் உர மானியம் நடப்பு நிதி ஆண்டில் ரூ.1.65 லட்சம் கோடியை எட்டும் என்று மதிப்பீட்டு நிறுவனம் கிரிஸில் தெரிவித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டு பட்ஜெட்டில் உர மானியத்துக்கு என்று ரூ.1.05 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போது மூலப் பொருட்களின் விலையும் சர்வதேச அளவில் உர விலையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் உர மானியம் அதிகரிக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் மத்திய அரசு உர … Read more

விருத்தாசலத்தில் நாஞ்சில் சம்பத் காரை முற்றுகையிட்ட பாஜகவினர்: காவல் உதவி ஆய்வாளர் உட்பட 4 பேர் காயம்

விருத்தாசலம்: தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த நாஞ்சில் சம்பத் காரை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதில் காவல் உதவி ஆய்வாளர் உட்பட 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விருத்தாசலத்தில் உள்ள ஜெயப்ரியா மேல்நிலைப் பள்ளியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நெறியாளராக பங்கேற்க நாஞ்சில் சம்பத் காரில் விருத்தாசலம் வந்தார். அவர் வருவதை அறிந்த பாஜகவினர், அதன் மாவட்டத் தலைவர் மணிகண்டன் தலைமையில் மாவட்ட துணை தலைவர் … Read more

‘‘வழக்கமான வியாபாரம்’’- ஒருவரின் உயிருக்கு விலை நிர்ணயம் செய்ய முடியாது: ஆதார் பூனாவாலா ஆதங்கம்

புதுடெல்லி: அது அவர்களுக்கு வழக்கமான வியாபாரம் என்ற கருத்தை மறுப்பதாகவும், கரோனா தொற்று நம்மைப் பின்தொடரவில்லை என்பதால் ஒருவரின் உயிருக்கு விலை நிர்ணயம் செய்ய முடியாது என்று சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா ஆதங்கம் தெரிவித்துள்ளார். பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் அஸ்ட்ரா ஜென்கா கோவிட் தடுப்பூசியை உருவாக்கியது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வழங்குகிறது. இந்தியாவில் ஏராளமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதால் தற்போது … Read more