ஆப்கன் தொடர் குண்டு வெடிப்பில் 30 பேர் பலியான சம்பவம்: ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் நேற்று நடந்த 3 குண்டுவெடிப்பு சம்பவங்களில் 30க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி, அந்நாட்டின் ஆட்சியை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதிலிருந்து அங்கு குண்டு வெடிப்புகள், தற்கொலைப் படை தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் நேற்று (ஏப்.21) நாட்டின் வடக்குப் பகுதியில் இருக்கும் மசார்- இ- ஷெரிஃப் நகரத்தில் உள்ள ஷியா பிரிவினரின் மசூதி ஒன்றில் தொழுகை வேளையில் சக்திவாய்ந்த … Read more

ராமஜெயம் கொலை வழக்கில் 198 சாட்சிகளிடம் விசாரணை: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில், 6 போலீஸார் உள்பட 198 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாக தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ல் நடைப்பயிற்சி சென்ற, தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி – கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை … Read more

100-வது சுதந்திர தினம் நாட்டுக்கு முக்கியமான தருணம் – சிவில் சர்வீஸ் தினத்தில் பிரதமர் பேச்சு

புதுதில்லி: இந்தியா தனது 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, அது ஒட்டுமொத்த நாட்டுக்கும் முக்கியமான தருணமாக இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். டெல்லியில் நேற்று 15-வது சிவில் சர்வீஸ் தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில், அரசு அதிகாரிகள் இடையே பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்திய சுதந்திரத்தின் பொன் விழா, கடந்த 70 ஆண்டுகளை புகழ்வதாக மட்டும் இல்லை. கடந்த 70 முதல் 75 ஆண்டு காலத்தை, நாம் வழக்கமானதாக கடந்திருக்கலாம். … Read more

பாகிஸ்தானை மட்டும் அமெரிக்கா மிரட்டுவது ஏன்? -இந்தியாவை மீண்டும் பாராட்டிய இம்ரான் கான் 

இஸ்லாமாபாத்: இந்தியாவை பணிய வைக்க முடியாத அமெரிக்கா பாகிஸ்தானை மட்டுமே மிரட்டுகிறது, இதற்கு இந்தியாவின் சுதந்திரமான வெளிநாட்டுக்கொள்கையே காரணம் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் இந்தியாவை பாராட்டியுள்ளார். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மீண்டும் ஒருமுறை பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், “புதுடெல்லியின் முடிவு அதன் மக்களின் நலனுக்கானது” என்று கூறினார். பாகிஸ்தானில் எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதையடுத்து இம்ரான் கான் பிரதமர் பதவியில் … Read more

'கரோனா வார்டுகளை மறுகட்டமைப்பு செய்க' – தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளுக்கு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். வட மாநிலங்கள் மற்றும் சென்னை ஐஐடி வளாகத்தில் கரோனா நோய் பரவல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அனைத்து மருத்துவமனைகளுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் முகக்கவசம் அணிய வேண்டும். மருத்துவம் மற்றும் செவிலிய படிப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் … Read more

ஹிஜாபுக்கு அனுமதி மறுப்பு: கர்நாடகாவில் பொதுத் தேர்வைப் புறக்கணித்த 2 மாணவிகள்

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்திலுள்ள பியு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டதால் பொதுத் தேர்வைப் புறக்கணித்து மாணவிகள் இரண்டுபேர் வீடு திரும்பினர். இவர்கள் இருவரும், கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளை அந்த நிர்வாகங்கள் அனுமதிக்கவில்லை. இந்து மாணவர்களும் காவித் துண்டு அணிந்து பள்ளி கல்லூரிகளுக்கு வந்தனர். அவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்டத் தடையை எதிர்த்து, … Read more

திருக்குறள், தொல்காப்பியம் முற்றோதலில் சாதனை: தேனி இரட்டை சகோதரிகளுக்கு முதல்வர் தலா ரூ.1 லட்சம் பரிசு

சென்னை: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டையர் செந்தமிழ் சாலினி மற்றும் முத்தமிழ் சாமினி தமிழ் ஆர்வத்தினைப் பாராட்டி தலா ரூ.1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ் மொழியின் மீது கொண்ட ஈடுபாட்டால் திருக்குறள், தொல்காப்பியம், திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய நூல்களை மனனம் செய்து பல விருதுகளைப் பெற்றுள்ள தேனி மாவட்டம், மறவப்பட்டிக் கிராமத்தைச் சேர்ந்த இரட்டையர் செந்தமிழ் சாலினி மற்றும் முத்தமிழ் சாமினி ஆகியோரை … Read more

நவீன மருத்துவத்தை ஆயுர்வேதா யோகாவுடன் இணைக்க வேண்டும் – மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் வலியுறுத்தல்

புதுடெல்லி: “நவீன மருத்துவத்துடன் பாரம்பரிய ஆயுர்வேதா மற்றும் யோகாவை இணைக்க வேண்டியது அவசியம்” என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார். தேசிய மருத்துவ அறிவியல் அகடமியின் 62-வது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு டெல்லியில் நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது: நாட்டு மக்களுக்கு முழுமையான சிகிச்சை அளிப்பதற்கு நவீன மருத்துவத்துடன் பாரம்பரிய ஆயுர்வேதா மற்றும் யோகா போன்றவற்றை இணைக்க வேண்டியது அவசியம். … Read more

முகக்கவசம் அணியாவிடில் ரூ.500 அபராதம் மீண்டும் அமல்: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: முகக்கவசம் அணியாவிடில் ரூ.500 அபராதம் விதிக்கும் நடைமுறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ண்ன இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கரோனா தொற்று அதிகரிப்பது தொடர்பாக பதற்றம் அடையத் தேவையில்லை. இதனை மத்திய அரசே கூறியுள்ளது. சென்னை ஐஐடியில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் உடல்நலனில் எந்த பாதிப்பும் இல்லை. ஒருவருக்கு மட்டுமே காய்ச்சல் உள்ளது. அனைவருக்கும் ஆக்சிஜன் நிலைமை சீராக … Read more

உ.பி.யில் துறவிகள், புரோகிதர்கள், பூசாரிகளுக்கு நலவாரியம்: அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் யோகி முடிவு

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் துறவிகள், புரோகிதர்கள், பூசாரிகளுக்காக நலவாரியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நேற்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் கூடிய அமைச்சரவையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, உ.பி.,யின் இந்த நலவாரியம் சார்பில் அம்மாநிலத்திலுள்ள மடங்களில் வாழும் துறவிகள், தெய்வீக நகரங்களில் வாழும் புரோகிதர்கள் மற்றும் கோயில்களின் பூசாரிகள் ஆகியோரில் வயது முதிர்ந்தோருக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. புரோகிதர் மற்றும் கோயில்களின் பூசாரிப் பணியில் உள்ளவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட … Read more