ராணுவ தளபதியால் ஆட்சி கவிழ்ந்தது – இம்ரான் கான் புகார்

லாகூர்: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணிக் கட்சிகள் விலக்கி கொண்டன. இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய பிரதமாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் பதவி யேற்றார். இந்நிலையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று கூறும்போது, “எனது அரசு கவிழ்க்கப்பட்டதற்கு நாட்டின் சக்திவாய்ந்த அமைப்பில் (ராணுவத்தில்) தவறான வழியில் செயல்படும் … Read more

எஸ்சி, எஸ்டி பிரிவினர் பின்னடைவாக உள்ள 10 ஆயிரம் பணியிடத்தை நிரப்ப சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம்

சென்னை: அரசுத் துறைகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் பின்னடைவாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் நடத்த அரசாணை வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை செயலர் க.மணிவாசன் வெளியிட்ட அரசாணை: அரசுத் துறைகளில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் மூலம் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அனைத்து துறைகளிடம் இருந்து தொகுதி வாரியாக பணியிடங்கள் விவரங்கள் பெறப்பட்டன. அதன்படி, எஸ்சி … Read more

கடந்த 2020-21 நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.212 கோடி தேர்தல் நன்கொடை

புதுடெல்லி: நாட்டில் உள்ள 7 தேர்தல் அறக்கட்டளைகள், பெரு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடமிருந்து ரூ.258 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளன. இதில் அதிக அளவாக 82 சதவீத தொகை பாஜகவுக்கு கிடைத்துள்ளது. அரசியல் கட்சிகள் சார்பில் பெரு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து நன்கொடை பெறுவதற்காக தேர்தல் அறக்கட்டளைகள் நிறுவப்பட்டன. இவை லாப நோக்கமற்ற அமைப்பாகும். அரசியல் கட்சிகள் தேர்தல் செலவினங்களுக்கு பயன்படுத்தப்படும் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதே இவற்றின் நோக்கம் ஆகும். இந்த … Read more

கரோனா குறைந்தது: உலக சுகாதார நிறுவனம் தகவல்

ஜெனீவா: உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையிலான காலத்தில் உலகம் முழுவதும் 55.9 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தைவிட 24 சதவீதம் அளவுக்கு வைரஸ் பரவல் குறைந்திருக்கிறது. முந்தைய வாரத்தை ஒப்பிடும் போது உயிரிழப்பு 21 சதவீதம் குறைந்திருக்கிறது. கடந்த வாரத்தில் தென்கொரியாவில் மிக அதிகபட்சமாக 9.72 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அதற்கு அடுத்து பிரான்ஸில் 8.27 … Read more

சில மாவட்டங்களில் இடியுடன் இன்று மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வளி மண்டல கீழடுக்கு சுழற்சி,வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தென் தமிழகம், சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், தருமபுரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார். Source link

மத விரோதத்தை தூண்டியதாக குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கைது

அகமதாபாத்: குஜராத்தில் வட்கம் சட்டப் பேரவை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி. தலித் சமூக ஆர்வலரான இவர் காங்கிரஸ் ஆதரவாளர். பிரதமர் மோடியையும் பாஜகவையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில், ஜிக்னேஷ் மேவானி வெளியிட்ட ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி குறித்து அவதூறாகவும் இரு மதப் பிரிவினரிடையே மத விரோதத்தைத் தூண்டும் வகையிலும் கருத்து பதிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அசாம் கோக்ரஜ்ஹார் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் அருப் குமார்டே அளித்த புகாரின் … Read more

10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளை மேற்பார்வையிட மாவட்ட வாரியாக கண்காணிப்பு அதிகாரி நியமனம்

சென்னை: தமிழக பள்ளிக் கல்வியில் 10, 11, 12-ம்வகுப்புகளுக்கு மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில் பொதுத் தேர்வு பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்ட அரசாணை: மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க பள்ளிக்கல்வி அதிகாரிகள், இயக்குநர்கள், இணை இயக்குநர்களை 38 மாவட்டங்களுக்கு பொறுப்பு அலுவலர்களாக நியமிக்க தேர்வுத் துறை இயக்குநர் … Read more

மேசை, நாற்காலிகளை அகற்ற கூட புல்டோசர்கள் தேவையா? – ஜஹாங்கீர்புரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

புதுடெல்லி: டெல்லி ஜஹாங்கீர்புரியில், ஆக்கிரமிப்புகளை அகற்ற புல்டோசர்கள் தேவையா என டெல்லி மாநகராட்சியிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. டெல்லி ஜஹாங்கீர்புரியில் ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் மற்றும் பி.ஆர்.கவேய் ஆகியோர் அடங்கி அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி மாநகராட்சி சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தெருக்கள் மற்றும் நடைபாதையில் உள்ள கடைகள், மற்றும் பொருட்களை அகற்ற சட்டம் அனுமதித்துள்ளது என்றார். … Read more

சென்னை ஐஐடியில் 12 மாணவருக்கு கரோனா தொற்று – சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு

சென்னை: சென்னை ஐஐடியில் 12 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் அங்கு ஆய்வு மேற்கொண்டார். இந்தியாவில் கரோனா தொற்று 2020 பிப்ரவரியில் பரவத் தொடங்கியது. தமிழகத்தில் அதே ஆண்டு மார்ச் மாதத்தில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. 3 அலைகளாக தொற்று பரவிய நிலையில், 2-வது அலையில் பாதிப்பு அதிகம் இருந்தது. மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதால், 3-வது அலையான ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாக இருந்தாலும், உயிரிழப்பு குறைவாகவே இருந்தது. வரும் ஜூன் மாதம் … Read more

கல்விக் கட்டண விவகாரம்: சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கடலூர்: தனியார் மருத்துவக் கல்லூரி கல்வி கட்டணத்தை நிர்வாகம் கட்டச் சொல்வதைக் கண்டித்து சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மருத்து மாணவர்களை தனியார் மருத்துவக் கல்லூரி கல்வி கட்டணத்தைக் கட்ட வேண்டும் என்று நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. மேலும், கட்டணத்தை உடனே கட்ட வேண்டும் என்று மாணவர்களுக்கு நெருக்கடியை தந்து வந்தது. ஆனால், அரசு மருத்துவக் … Read more