ஏழை முஸ்லிம்கள் மீது புல்டோசர்களைக் கொண்டு போர் தொடுத்துள்ளது பாஜக: ஜவாஹிருல்லா ஆவேசம்

சென்னை: டெல்லி – ஜஹாங்கீர்பூரில் உள்ள ஏழை முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்துள்ள மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, “கடந்த 15 நாட்களாக வடமாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை முஸ்லிம்கள் மீது பாஜக போர் தொடுத்துள்ளது” என்று ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைநகர் டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்பூரில் உள்ள ஏழை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்களின் வீடுகள் … Read more

அதிமுகவை மீட்டெடுத்து சசிகலாவை பொதுச் செயலாளர் ஆக்குவோம்: தினகரன் உறுதி

மதுரை: “அதிமுகவை மீட்டெடுத்து சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்குவோம்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உறுதிபட கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியது: “திமுக ஆட்சிக்கு வந்தால் விடியல் வராது. மக்கள் ஏமாறுவர். திமுக ஆட்சி என்றாலே தமிழகத்திற்கு இருண்ட காலம் என்பது வரலாறு. திமுக ஆட்சி தவறான பாதையை நோக்கி செல்கிறது. இந்த ஆட்சி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் மாபெரும் தோல்வியை இந்த ஆட்சியாளர்கள் அரசு சந்தித்துள்ளனர். ஜெயலலிதா விரும்பி சென்று … Read more

சென்னை ஐஐடியில் 12 பேருக்கு கரோனா | 'தமிழகத்திற்கும் டெல்லி நிலைமை வரலாம்' – ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

சென்னை: “கரோனா தொற்று வழிமுறைகளை பின்பற்றாவிடில், தமிழகத்துக்கும் டெல்லியின் நிலைமை வரலாம்” என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். சென்னை ஐஐடியில் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவத் துறை செயலாளர் நேரில் ஆய்வு செய்தார். இதன்பிறகு அவர் அளித்த பேட்டியில், “19-ம் தேதி ஐஐடியில் முதல் கரோனா தொற்று பதிவானது. 20-ம் தேதி 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது வரை ஐஐடியில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. … Read more

என்எஸ்இ முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி: கோ-லொகேஷன் (co-location) ஊழல் வழக்குத் தொடர்பாக தேசிய பங்கு சந்தையின் முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் முன்னாள் சிஓஓ ஆனந்த் சுப்ரமணியன் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறப்பு நீதிமன்றத்தில் தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த சிபிஐ தனது அறிக்கையில், சித்ரா ராமகிருஷ்ணா பல்வேறு முக்கிய முடிவுகளில் தனது பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. முடிவுகள் எடுப்பதில், உருவமில்லாத யோகி ஒருவர் தன்னை மின்னஞ்சல் மூலமாக வழிநடத்தினார் என … Read more

7 பேர் விடுதலை குறித்த கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு ஜன.27, 2021-ல் ஆளுநர் அனுப்பினார்: தமிழக அரசு தகவல்

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் ஆளுநரிடமிருந்து கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக முந்தைய அதிமுக … Read more

புதுச்சேரியில் ஆளுநர் மூலம் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த பாஜக சதி – திருமாவளவன் குற்றச்சாட்டு

புதுச்சேரி: விரைவில் புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் நிகழ்வதற்கு ஆளுநர் மூலமாக மத்திய பாஜக அரசு முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகின்றன. இந்த போக்கு மிகவும் ஆபத்தானது என்று திருமாவளன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அடுத்த மண்ணாடிப்பட்டு பெரியபேட் பகுதியில் அம்பேத்கரின் முழு உருவ வெங்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை திறந்து வைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களைவை உறுப்பினருமான திருமாவளவன் இன்று (வியாழக்கிழமை) புதுச்சேரிக்கு வருகை தந்தார். முன்னதாக அவர் புதுச்சேரி தனியார் ஓட்டலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: … Read more

தமிழகத்தில் 10 மாதங்களில் போக்சோ சட்டத்தின் கீழ் 4,023 வழக்குகள் பதிவு

சென்னை: கடந்த மே 2021 முதல் மார்ச் 2022 வரையிலான 10 மாதங்களில் “பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் 4,023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையில் இன்று மாற்றுத்திறனாளிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர் கீதா ஜீவன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி இனி முழுவதும் ரொக்கமாக… – முதல்வர் ஸ்டாலினின் 20 முக்கிய அறிவிப்புகள்

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 24 பள்ளிகள், நிறுவனங்களின் கட்டடங்கள் ரூ.2 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண நிதியுதவிக்கான முழுத் தொகையையும் ரொக்கமாக வழங்கப்படும், பொது கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் தடைகளற்ற சூழலை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு … Read more

சாலைகளின் பெயர் பலகைகளில் போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: தெருக்கள், சாலைகளின் பெயர் பலகையில் போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மையைப் பராமரிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அரசு, மாநகராட்சி கட்டடங்கள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள் உட்பட … Read more

ஆப்கன் மசூதியில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி; 40 பேர் படுகாயம்

காபூல்: ஆப்கனின் வடக்குப் பகுதியில் உள்ள மசார்- இ – ஷெரிஃப் நகரிலுள்ள மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்; 40 பேர் காயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி, அந்நாட்டின் ஆட்சியை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதிலிருந்து அங்கு குண்டுவெடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறன. இந்த நிலையில், நாட்டின் வடக்குப்பகுதியில் இருக்கும் மசார்- இ- ஷெரிஃப் நகரத்தில் உள்ள ஷியா பிரிவினரின் மசூதி ஒன்றில் தொழுகை வேளையில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று … Read more