'100 கேள்விகள்' – கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் முதல் நாளில் 6 மணி நேரம் விசாரணை

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் தொடர்பாக சென்னை தியாகராயநகரில் உள்ள வீட்டில் சசிகலாவிடம் 6 மணி நேரம் இன்று (ஏப்.21) விசாரணை நடத்திய தனிப்படை போலீஸார் நாளை (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணை நடத்தவுள்ளனர். தனிப்படை விசாரணை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் தொடர்பாக சென்னை தியாகராயநகரில் உள்ள சசிகலாவிடம் மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை இன்று விசாரணை நடத்தியது . இந்தத் தனிப்படையில் நீலகிரி எஸ்.பி. ஆஷிஷ் ராவத், … Read more

திருப்பத்தூர் | ஆசிரியரைத் தாக்க முயன்ற மாணவர் – பள்ளியில் வருவாய் கோட்டாட்சியர் நேரடி விசாரணை

திருப்பத்தூர்: மாதனூர் ஒன்றியத்தில் இயங்கி வரும் பள்ளியில் ரெக்கார்டு நோட்டு கேட்ட ஆசிரியரை ஆபாசமாகப் பேசி தாக்க முயன்ற பள்ளி மாணவர் மற்றும் அவரது பாதுகாவலரிடம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினர். இதையடுத்து, ஆசிரியர்களுக்கு மாணவர்கள் உரிய மரியாதை தர வேண்டும் என அவர் கவுன்சலிங் வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்றி வருகின்றனர். இப்பள்ளியில், தாவிரவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சஞ்சய்காந்தி. … Read more

கடமையைச் செய்யாத ஆளுநர் மீது கோபம் வரத்தான் செய்யும்: சீமான்

சென்னை: “ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானங்களின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோபம் வரத்தான் செய்யும்“ என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சென்னையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பாரதிதாசனின் படத்திற்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஜனநாயக நாட்டில் ஒரு கருத்துக்கு எதிர்கருத்து தெரிவிப்பது, அதைக் … Read more

இந்தியாவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் | உற்சாக வரவேற்பு முதல் அதானி சந்திப்பு வரை – அண்மைத் தகவல்கள்

அகமதாபாத்: இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட்ட போரிஸ் ஜான்சன் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார். அதானியுடன் சந்திப்பு: இந்தியாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று வியாழக்கிழமை காலை குஜராத் மாநிலம் அகமதாபாத் விமானநிலையம் வந்திறங்கினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் … Read more

திண்டுக்கல் அருகே சமத்துவ மீன்பிடி திருவிழா: 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உள்ள மணியக்காரன்பட்டி கிராமத்தில் கிராம மக்களிடம் ஒற்றுமையை வளர்க்கும் விதமாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மீன்களை பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே மடூர் ஊராட்சி மணியக்காரன்பட்டி கிராமத்தில், சாதி மத பேதமின்றி கிராம மக்களை இணைக்கும் மீன்பிடி திருவிழா பல ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்றது. கடந்த பத்து ஆண்டுகளாக குளத்தில் நீர் தேங்காததால் இந்த விழா நடத்தப்படவில்லை. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தைவிட … Read more

பெண்களுக்கான இலவசப் பேருந்து திட்டத்தில் 91.85 கோடி பயணங்கள் : தமிழக அரசு

சென்னை: இலவசப் பேருந்து திட்டத்தில் பெண்கள் 91.85 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் பெண்கள் அனைவரும் நகரப் பேருந்துகளில் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி மாநிலம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட நகரப் பேருந்துகளின் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இத்திட்டத்தின் மூலம் தற்போது வரை பெண்கள் 91 கோடி பணயங்களை மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. … Read more

தமிழகத்தில் 2021-ல் மட்டும் 2,816 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: அரசின் நடவடிக்கைகள் என்னென்ன?

சென்னை: தமிழகத்தில் மார்ச் 2022 வரை 17,557 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று மாற்றுத்திறனாளிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு துறையின் அமைச்சர் கீதா ஜீவன் பதிலளித்தார். முன்னதாக, கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தினர். மாற்றுத்திறனாளிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கொள்கை … Read more

உக்ரைனின் மரியுபோலை கைப்பற்றிய ரஷ்யா: வெற்றி முழக்கமிட்ட விளாடிமிர் புதின்

மாஸ்கோ: உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள மிகப் பெரிய நகரமான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “உக்ரைனிடமிருந்து மரியுபோலை விடுவித்துவிட்டோம். வீரர்களுக்கு பாராட்டுகள். மரியுபோலின் மிகப் பெரிய இரும்பு ஆலையைக் கைப்பற்றுங்கள்” என்று கூறியுள்ளார். மேலும், அசோவ் கடற்கரையில் உள்ள மரியுபோலில் இப்போது வெறும் 1000 உக்ரைனிய வீரர்கள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் அங்குள்ள மிகப் பெரிய இரும்பு ஆலையில் தஞ்சமடைந்திருப்பதாகவும் ரஷ்யப் படைகள் தெரிவித்துள்ளன. முதலில், அந்த … Read more

புதுச்சேரியில் அமித் ஷா வருகையின்போது கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டம்

புதுச்சேரி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புதுச்சேரி வருகையின்போது கருப்புக்கொடி காட்ட உள்ளதாக இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. மேலும், இந்தப் போராட்டத்தில் பங்கேற்க கட்சித் தலைமையிடம் அனுமதி கேட்டுள்ளதாக திமுக தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி செயலர் ராஜாங்கம் மற்றும் விசிக தேவபொழிலன், சிபிஐஎம்எல் பாலசுப்பிரமணியன் மற்றும் மதிமுக, முஸ்லிம் லீக், மனித … Read more

ஜம்மு-காஷ்மீரில் குவியும் முதலீடு – 2.4 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் குவியும் முதலீடுகள் காரணமாக 2.4 லட்சம் வேலை வாய்ப்புகள் அங்கு உருவாகவுள்ளன. ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு சலுகை அளித்து வந்த அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு 2019-ம் ஆண்டு நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு பிற மாநிலத்தவர் நிலம் வாங்கவும், தொழில் தொடங்கவும் வகை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஓராண்டில் ரூ.52,155 கோடி ரூபாய்க்கு தொழில் முதலீட்டுக்கான முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன. இதன்மூலம் 2.4 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் எனத் தெரியவந்துள்ளது. இதனிடையே, கடந்த … Read more