தமிழகத்தில் புதிய கோளரங்கம் அமைத்தால் மதுரைக்கு முக்கியத்துவம்: அமைச்சர் பொன்முடி  

சென்னை: தமிழகத்தில் புதிய கோளரங்கம் அமைக்க திட்டமிட்டால் மதுரையில் அமைக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தவர்க்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் சின்னத்துரை, “கந்தர்வர்க்கோட்டை தொகுதியில் கோளரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “தமிழகத்தில் 4 கோளரங்கங்கள் உள்ளன. சென்னை, திருச்சி, வேலூர், கோவை என்று 4 இடங்களில் இவை … Read more

மத ஊர்வலங்கள் நடத்த முன் அனுமதி கட்டாயம் – உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

லக்னோ: டெல்லி ஜஹாங்கிர்புரியில் ராம நவமி ஊர்வலத்தின்போது கலவரம் மூண்டது. இதுபோல வேறு சில ஊர்களிலும் இதுபோன்ற சம்பவம் நடந்தது. இந்நிலையில், இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று முன்தினம் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து மத ஊர்வலங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈத் மற்றும் அக்சய திரிதியை பண்டிகைகள் வரும் மே மாதம் ஒரே நாளில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

'முகக்கவசம் கட்டாயமே; அபராதத்திலிருந்து தான் அரசு விலக்களித்துள்ளது' – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிவது கட்டாயமே. அதிலிருந்து அரசு விலக்களிக்கவில்லை. முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்ற கெடுபிடியிலிருந்து மட்டுமே விலக்களிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகளும் எழுப்பப்பட்டன. அவற்றிற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர், “டெல்லி, ஹரியாணா, மகாராஷ்டிரா மாநிலங்களில் மீண்டும் கரோனா தொற்று … Read more

அரிசி, கோதுமை வருவாயை மிஞ்சியது இந்தியாவின் பால் உற்பத்தி மிக அதிகம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

தியோதர்: இந்தியாவின் பால் உற்பத்தி உலகிலேயே மிக அதிகம் எனவும், இது அரிசி, கோதுமை வருவாயை மிஞ்சிவிட்டது எனவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில், தியோதர் என்ற இடத்தில் உள்ள பனாஸ் பால் பண்ணையில் புதிய வளாகம் மற்றும் உருளை பதப்படுத்துதல் தொழிற் சாலையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அதன்பின் இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாட்டின் பால் உற்பத்தியின் மதிப்பு ஆண்டுக்கு ரூ.8.5 லட்சம் கோடியாக உள்ளது. இது அரிசி … Read more

உக்ரைன் – ரஷ்யா மோதலால் வளரும் நாடுகளில் பாதிப்பு: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கவலை

நியூயார்க்: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் தொடங்கி 8-வது வாரம் வந்துவிட்ட நிலையில் அங்கு நிலவும் மனிதாபிமான நெருக்கடி குறித்து ஆலோசிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று கூடியது. இக்கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர துணைப் பிரதிநிதி ரவீந்திரா இந்தியாவின் நிலைப்பாட்டினை எடுத்துரைத்துப் பேசினார். அப்போது அவர், “ரஷ்யா, உக்ரைன் மோதல் விவகாரத்தில் இந்தியா ஆரம்பம் முதலே ஒரே நிலைப்பாட்டில் தான் இருக்கிறது. இருதரப்பும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும். வன்முறையை விடுத்து தூதரக … Read more

உங்கள் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்காதீர்கள்: பெற்றோருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை: பெற்றோர் தங்கள் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்க கூடாது. அவர்களின் விருப்பங்களை அறிந்து வழிகாட்ட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன. அதன்படி பெற்றோர், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள் கொண்ட புதியகுழு மாநிலம் முழுவதும் உள்ள 37,557 அரசுப் பள்ளிகளிலும் புதிதாக ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள … Read more

டெல்லி வன்முறை: 5 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

புதுடெல்லி: டெல்லியில் கடந்த சனிக்கிழமை மத ஊர்வலத்தில் நடந்த வன்முறை தொடர்பாக 23 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 5 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்றோர் மீது மற்றொரு தரப்பினர் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் வன்முறை வெடித்தது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீஸார் உட்பட பலர் காயமடைந்தனர். இந்நிலையில், வன்முறை தொடர்பாக இதுவரை இரு பிரிவுகளையும் … Read more

உக்ரைன் ராணுவ வீரர்கள் உடனே சரணடைய வேண்டும்: ரஷ்யா கடும் எச்சரிக்கை

மாஸ்கோ: உக்ரைன் ராணுவ வீரர்கள் உடனே சரணடைய வேண்டும் என்று ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போர் 55-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இந்த போரில் ரஷ்யா, உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை தனது முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வர ரஷ்யா முயற்சித்துள்ளது. அங்கு ஆயிரக்கணக் கான வீரர்கள், டேங்குகள், ஏவுகணைகளை ரஷ்ய ராணுவம் குவித்து வருவதாகக் கூறப்படுகிறது. … Read more

மாணவர்கள் சேர ஆர்வம் குறைவு பாலிடெக்னிக்குகளில் 1.10 லட்சம் இடங்கள் காலி: சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1.10 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரமாணவர்களின் ஆர்வம் குறைந்துள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, பேசிய உதகமண்டலம் காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.கணேஷ், தொகுதியில் உள்ள மஞ்சூர் பகுதியில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதேபோல, கூடலூர் தொகுதிஅதிமுக உறுப்பினர் பொன் ஜெயசீலன், தனது தொகுதியில் 2003-ம் ஆண்டு தொடக்கப்பட்ட கல்லூரி, 2019-ல் அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளதாகவும், அக்கல்லூரியில் … Read more

தூய்மை இந்தியா திட்டத்தால் காந்தியின் கனவு நனவாகும் – பாஜக மூத்த தலைவர் கவுரவ் நம்பிக்கை

புதுடெல்லி: பாஜக மூத்த தலைவர் கவுரவ் பாட்டியா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2014-ம் ஆண்டில் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்துக்காக 2021-2026-ம் ஆண்டுகளில் கிராமங்களுக்காக ரூ.7,192 கோடியும் நகரங்களுக்காக ரூ.1,41,678 கோடியும் செலவிடப்பட உள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதுவரை 58,000 கிராமங்கள், 3,300 நகரங்கள் பயன் பெற்றுள்ளன. … Read more