துறையின் பெயர் மாற்றம் முதல் தஞ்சை, உதகையில் 'மினி டைடல் பார்க்' வரை: தமிழக தொழில் துறையின் 25 அறிவிப்புகள்

சென்னை: தொழில் துறையினை ‘தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை’ என பெயர் மாற்றம் செய்யப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் பெரிய அளவில் முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு ‘ஹைட்ரஜன் எரிசக்திக் கொள்கை’ வெளியிடப்படும், சுற்றுச்சூழலின் தரத்தை மேம்படுத்த ‘எத்தனால் கொள்கை 2022’ வெளியிடப்படும், … Read more

இந்தியாவில் அறிமுகமானது 'டிஸோ வாட்ச் S' ஸ்மார்ட்வாட்ச் | விலை and அம்சங்கள்

புதுடெல்லி: இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது ‘டிஸோ வாட்ச் S’ ஸ்மார்ட்வாட்ச். வரும் 26-ம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளது இந்த வாட்ச். இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். ரியல்மி டெக் லைஃப் பிராண்டான டிஸோ, கீபோர்டு போன்கள், ஸ்மார்ட்வாட்ச், ஹேர் டிரையர் மற்றும் ட்ரிம்மர் போன்ற பொருட்கள் மற்றும் ஆடியோ ஹெட் போன்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், வாட்ச் S என்ற புதிய ஸ்மார்ட்வாட்ச்சை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இதற்கு … Read more

ஆளுநர் கார் மீதான கல்வீச்சு தாக்குதலுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும்: அண்ணாமலை

சென்னை: “மயிலாடுதுறையில் ஆளுநர் கார் மீது கற்கள், கருப்புக் கொடி வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்குப் பொறுப்பேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “மயிலாடுதுறையில் இன்று ஆளுநர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அங்கிருக்கக்கூடிய திமுக தொண்டர்கள் தன்னிச்சையாக நடத்திய தாக்குதல் கிடையாது; 3 நாட்களாக … Read more

உலகின் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா; அரிசி, கோதுமையை விட அதிகம்: பிரதமர் மோடி பெருமிதம்

அகமதாபாத்: உலகின் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது, கோதுமை மற்றும் அரிசியின் விற்பனை கூட ரூ.8.5 லட்சம் கோடிக்கு சமமாக இல்லை என பிரதமர் மோடி கூறினார். குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தியோதர் பகுதியில் புதிய பால் பண்ணை வளாகம் மற்றும் பனாஸ் பால் பண்ணையின் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். பின்னர் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பனஸ்கந்தாவில் உள்ள புதிய பால் … Read more

சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம்: கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் 

சென்னை: விமானப் போக்குவரத்தில் எதிர்கால தேவையென மதிப்பிட்டுள்ளதை எதிர்கொள்வதற்கும், நீண்டகால அடிப்படையில் விமானப் போக்குவரத்து சேவைகளுக்கான உலகளாவிய தேவையை பூர்த்தி செய்வதற்கும், சென்னை அருகே ஒரு “புதிய பன்னாட்டு விமான நிலையத்தை” நிறுவ மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தொழில் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று கனிம வளங்கள் துறை, தொழில் துறை, தமிழ் வளர்ச்சித்துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முன்னதாக கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு … Read more

இரண்டாண்டுகளுக்குப் பின் நடந்த கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா: திருநங்கைகள் கோலாகல கொண்டாட்டம்

கள்ளக்குறிச்சி: இரு ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழாவில் பல்வேறு மாநிலங்களில் திருநங்கைகள் திரண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர். மகாபாரதப் போரில் அரவான்(கூத்தாண்டவர்) களப்பலி கொடுப்பதை நினைவுப் படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழாவில் திருநங்கைகளுக்கான மணமுடித்தலும், மறுநாள் தேரோட்டமும், தாலி அறுத்து அழுகளம் நிகழ்ச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கூவாகம் கிராமத்தில் அருள்மிகு கூத்தாண்டவர் திருக்கோவிலில் நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து நடைபெற்றுவந்த இந்த திருவிழா கடந்த இரு … Read more

ஆப்கனில் பள்ளி வளாகம் அருகே குண்டு வெடிப்பு: 6 பேர் பலி; பலர் படுகாயம்

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பள்ளிக்கூட வளாகத்தின் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் பலியாகினர். 7 குழந்தைகள் உள்பட பலர் படுகாயமடைந்தனர். மேற்கு காபூலில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி வளாகத்தின் அருகே அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்தன. இதில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். இந்தப் பகுதியில் வசிப்போரில் பெரும்பாலானோர் ஷியா ஹசாரா பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஆப்கனின் மத சிறுபான்மையினத்தவராக கருதப்படுகிறார்கள். சன்னி பிரிவினர் இவர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துவது ஆண்டாண்டு … Read more

"ஒன்று தமிழனாக இரு அல்லது திராவிடனாக இரு" – இளையராஜா, யுவன் விவகாரத்தில் சீமான் கருத்து

சென்னை: “பிரதமர் மோடி குறித்து இளையராஜா கூறியிருப்பது, அவரது தனிப்பட்ட விருப்பம், தனிப்பட்ட கருத்து. அதை ஏற்கிறோமா எதிர்கிறோமா என்பது வேறு. அதற்காக இளையராஜாவை விமர்சிக்க வேண்டியது இல்லை. காரணம், இதைவிட புகழ்ந்து பேசியவர்கள்தான் தற்போது இளையராஜாவை திட்டுகின்றனர்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “இளையராஜாவின் தனிப்பட்ட விருப்பம், தனிப்பட்ட கருத்து. அதை … Read more

‘‘இலங்கைக்கு சரியான நேரத்தில் உதவி’’- இந்தியாவுக்கு ஐஎம்எப் பாராட்டு 

வாஷிங்டன்: கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு தக்கநேரத்தில் இந்தியா செய்து வரும் மனிதாபிமான உதவிக்கு சர்வதேச நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கையில் அண்மையில் கையிருப்பு டீசல் தீர்ந்து பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா 40,000 டன்கள் டீசலை உடனடியாக வழங்கியது. நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பெரும் ஆறுதலாக அமைந்தது. நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு 1 பில்லியன் டாலர்கள் கடன் வழங்க இருநாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. … Read more

தமிழ்நாடு கனிம நிறுவன கிரானைட் வருவாயை ரூ.105 கோடியாக அதிகரிக்க திட்டம்: கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்

சென்னை: தமிழ்நாடு கனிம நிறுவனம் 2022-2023 ஆம் நிதியாண்டில் கிரானைட் மூலம் கிடைக்கும் வருவாயினை ரூபாய் 77 கோடியாகவும், 2023-2024 ஆம் ஆண்டில் ரூபாய் 105 கோடியாகவும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக சுரங்கங்கள் மற்றும் கனிமவளங்கள் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று கனிம வளங்கள் துறை, தொழில் துறை, தமிழ் வளர்ச்சித்துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முன்னதாக கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். சுரங்கங்கள் … Read more