கண்காணிப்பு குழுவிடம் அதிகாரம் | கட்சிகளுடன் பேசி முடிவெடுக்க வேண்டும்: முதல்வருக்கு அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள்
சென்னை: முல்லை பெரியாறு விவகாரத்தில் அணை பாதுகாப்பு அமைப்பின் அதிகாரத்தை கண்காணிப்புக் குழுவுக்கு அளிப்பது குறித்து அனைத்து கட்சியினருடன் பேசி முதல்வர் முடிவெடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். முல்லை பெரியாறு அணை தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் மீது எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘தற்போது கேரள அரசுடன் நட்புடன் உள்ள தமிழக முதல்வர், நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். … Read more