இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் ரெட்மி 10A | சிறப்பம்சங்கள்

நியூடெல்லி: இந்திய செல்போன் சந்தையில் வரும் 20 ஆம் தேதி அறிமுகமாகிறது ரெட்மி 10A (Redmi 10A) ஸ்மார்ட்போன். பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இந்த போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். இது குறித்த தகவல் அமேசான் மற்றும் எம்.ஐ நிறுவனத்தின் வலைதளத்தில் வெளியாகி உள்ளது. Redmi 10A போன், தற்போது சீனாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் அதே மாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ரெட்மி 10 போனை … Read more

வெள்ள நிவாரணம்: தமிழக அரசு கேட்டது ரூ.6 ஆயிரம் கோடி; கிடைத்தது ரூ.352 கோடி – கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தகவல் 

சென்னை: மழை வெள்ள நிவாரணத்திற்காக தமிழக அரசு கேட்ட ரூ.6 ஆயிரம் கோடி நிதியில் மத்திய அரசு இதுவரை வெறும் ரூ.320 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. தமிழக அரசின் வருவாய்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பெருமழை, புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் மாநிலங்கள் தங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நிதியை ஓதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கும். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பில் குழு … Read more

லக்கிம்பூர் கேரி சம்பவம் | 'ஒரு வாரத்துக்குள் சரணடைய வேண்டும்' – மத்திய அமைச்சர் மகனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு கொடுக்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் அவர் சரணடைய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆஷிஸ் மிஸ்ராவின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என லக்கிம்பூர் கேரியில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா … Read more

ஷாங்காயில் மெல்ல குறையும் கரோனா: கட்டுப்பாடுகளை தளர்த்தும் சீன அரசு

ஜெய்ஜிங்: சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த மார்ச் இறுதி முதல் கரோனா தீவிரமாகப் பரவி வந்த நிலையில் அங்கு மூன்று பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்நிலையில், அன்றாட தொற்று குறைவதால் பல்வேறு தளர்வுகளை அரசு அமல்படுத்தி வருகிறது. சீனாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரம் ஷாங்காய். இங்கு கரோனா தொற்று பரவியதால், கடந்த 5 ஆம் தேதி முதல் ஊரடங்கு நடவடிக்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன. சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சிறப்பு அனுமதி பெற்றவர்கள் … Read more

26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 0.24 முதல் 4.59 மீட்டர் வரை உயர்வு: தமிழக அரசு தகவல்

சென்னை: மாநில நீர்வளத் துறையின் நிலத்தடி நீர்மட்ட ஆய்வுகளின்படி, பிப்ரவரி 2021-ல் இருந்து நீர்மட்டத்துடன் ஒப்பிடும்போது, தற்போது (பிப்ரவரி 2022) 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 0.24 முதல் 4.59 மீட்டர் வரை அதிகரித்துள்ளதாகவும், இதர 12 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் 0.12 முதல் 0.47 மீட்டர் குறைந்துள்ளதாகவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாம்மைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக … Read more

'இசையின் மேஸ்ட்ரோ இளையராஜாவை அவமதிப்பதா?' – பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கண்டனம்

புதுடெல்லி: பிரதமர் மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியதற்காக இசைஞானி இளையராஜாவை அவமதிப்பதா? எனக் கேட்டு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான இளையராஜா, பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் தனது கருத்தை சொல்லியிருந்தார். அது மாநில மற்றும் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒரு தரப்பினர் அவரது கருத்துக்கு எதிர்ப்பும், மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், … Read more

பெட்ரோல், டீசல் விலை ஒரே நாளில் 35% வரை உயர்வு: கடும் நெருக்கடியில் இலங்கை மக்கள்

கொழும்பு: இலங்கையில் பெட்ரோல், டீசலுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 35 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் டீசல் விலை ரூ.75 மற்றும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.35 உயர்த்தப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. … Read more

தொடர் விடுமுறையால் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: கொடைக்கானலுக்கு 4 நாளில் 2 லட்சம் பேர் வருகை

கொடைக்கானல்: தொடர் விடுமுறை காரணமாக கடந்த 4 நாட்களில் 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் இயற்கை எழிலை ரசித்துள்ளனர். கொடைக்கானலுக்கு கோடை சீசனான மே மாதத்தில் மட்டும் ஆண்டுதோறும் 7 லட்சம் பேர் வந்து இயற்கை எழிலை பார்த்துச் செல்வர். இந்த ஆண்டு பள்ளித் தேர்வுகள் மே மாதம் தொடங்குகிறது. எனவே முன்னதாகவே குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். வாரம்தோறும் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இந்த வாரம் … Read more

தஞ்சாவூரில் பாஜக நிர்வாகி வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பாஜக மாநில துணைத் தலைவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும், மற்ற நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் கட்சி அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. பாஜகவினர் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அக்கட்சியின் மண்டலத் தலைவர்களிடம் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தி பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில், தஞ்சாவூரில் உள்ள பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், தேசிய செயற்குழு … Read more

‘இந்து தமிழ் திசை’, ராம்ராஜ் காட்டன் சார்பில் `அன்பாசிரியர் விருது' வழங்கும் விழா; மாணவர்களின் தனித் திறன்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்: அன்பில் மகேஸ் வேண்டுகோள்

சென்னை: மாணவர்களின் தனித் திறன்களைக் கண்டறிந்து ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற ‘அன்பாசிரியர்’ விருது வழங்கும் விழாவில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள் விடுத்தார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் மீது பேரன்பும், அவர்களின் வளர்ச்சி குறித்த அக்கறையும் கொண்ட சிறந்த ஆசிரியர்களைக் கவுரவிக்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘அன்பாசிரியர்’ விருதைவழங்குகிறது. 2020-ல் முதல்முறையாக ராம்ராஜ் காட்டனுடன் இணைந்து ‘அன்பாசிரியர்’ விருது வழங்கப்பட்டது. இதையடுத்து, ‘அன்பாசிரியர்2021’ விருதுக்கு … Read more