உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள்: இந்திய கல்லூரியில் இடம் கோரி ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: உக்ரைன் நாட்டில் கல்லூரிகளில் ஏராளமான இந்திய மாணவர்கள் எம்பிபிஎஸ், பொறியியல் படிப்புகளை படித்து வந்தனர். இந்நிலையில், பிப்ரவரி 24 -ம்தேதி ரஷ்ய ராணுவம் உக்ரைன்மீது தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து, வான்வழிப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியஅரசு 18,500 மாணவர், இந்தியர்களை தாயகம் அழைத்து வந்துள்ளது. Source link

கடந்த அதிமுக ஆட்சியில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் இந்தியில் மொழிபெயர்ப்பு: ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி

சென்னை: இந்தி மொழி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று குற்றம் சாட்டினார். அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள் என்று கூறிய உடனேயே, உள்துறை அமைச்சரின் இந்தக் கருத்து இந்தியாவின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் செயல் என்றும், ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது, ஒருமைப்பாட்டையும் … Read more

முடிவுக்கு வரும் கர்நாடக பாஜக மூத்த தலைவர்களின் அரசியல் வாழ்க்கை; எடியூரப்பாவை தொடர்ந்து ஈஸ்வரப்பா: 2023 தேர்தலுக்கு தயாராகும் புதிய படை

தென்னிந்தியாவில் முதல்முறையாக கர்நாடகாவில் பாஜகவை அரியணையில் ஏற்றிய மூத்த தலைவர்கள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், சதானந்தகவுடா ஆகியோரை தொடர்ந்து ஈஸ்வரப்பாவின் அரசியல் வாழ்க்கையும் முடிவுக்கு வந்துள்ளது. முப்பெரும் தலைவர்கள் கர்நாடக மாநிலத்தில் 1990-கள் வரை காங்கிரஸ், ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சியை பிடித்தன. ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து வந்த எடியூரப்பா (79), சங்கர் மூர்த்தி (82), ஈஸ்வரப்பா (73) ஆகிய 3 பேரும் 1970-களில் பாஜகவின் முந்தைய அமைப்பான பாரதிய … Read more

உக்ரைன் – ரஷ்ய போர் காரணமாக உலகில் 5-ல் ஒருவர் வறுமைக்கு தள்ளப்படலாம்: ஐ.நா.

ஜெனீவா: உக்ரைன் மீதான் ரஷ்ய போர் காரணமாக உலகில் 5-ல் ஒருவர் வறுமைக்கு தள்ளப்படலாம் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. அதாவது 1.7 பில்லியன் மக்கள் வறுமை, பசி, பட்டினி போன்ற சூழலுக்கு தள்ளப்படுவார்கள். இது அண்மைக் காலங்களில் ஏற்படாத புதியதொரு சூழல் என்று எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்ரேஸ் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், “உக்ரைனில் நடக்கும் துயரங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உக்ரைன் எல்லைகளைத் தாண்டியும் இந்தப் … Read more

பிரதமர் மோடி குறித்து இளையராஜா சொன்னது இயல்பானது: எச்.ராஜா

சென்னை: பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தனது கருத்தை தெரிவிக்க உரிமை உள்ளது. மத்திய அரசுக்கு எதிராக பல ஆண்டுகளாக திட்டமிட்டு தமிழகத்தில் வெறுப்புணர்வை பரப்புகின்றனர். அதை, இளையராஜாவின் கருத்து மாற்றிவிடும் என்பதால்தான் அவரை இழிவுபடுத்துகின்றனர். மோடி குறித்து இளையராஜா சொன்னது இயல்பான கருத்து. ஆனால், இணைப்பு மொழி குறித்து ஏ.ஆர்.ரகுமான் சொன்னது உள்நோக்கம் கொண்டது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் முயற்சிகூட திமுகவில் இல்லை. திமுகவினர் அதிகார வரம்பை … Read more

இந்தியாவில் ஒரேநாளில் 90% அதிகரித்த கரோனா பாதிப்பு: புதிதாக 2,183 பேருக்கு தொற்று

புதுடெல்லி: இந்தியாவில் ஒரேநாளில் கரோனா பாதிப்பு 90% அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,183 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் முதன்முதலில் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்தியாவில் 2020 ஜனவரியில் கேரள மாநிலத்தில் முதல் கரோனா நோயாளி கண்டறியப்பட்டார். தமிழகத்தில் மார்ச் 2020ல் கத்தாரில் இருந்து திரும்பிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபருக்கு கரோனா உறுதியானது. அதன் பின்னர் இந்தியா மூன்று அலைகளைச் சந்தித்துவிட்டது. இதில் இரண்டாவது … Read more

அதிகரிக்கும் கரோனா; கெடுபிடிகள் காட்டும் ஹாங்காங்: விமான சேவையை நிறுத்தியது ஏர் இந்தியா

ஹாங்காங்: அதிகரித்து வரும் கரோனா காரணமாக ஹாங்காங் அதிகாரிகள் விதிக்கும் பல்வேறு கெடுபிடிகளை ஒட்டி அந்நாட்டுக்கான விமான போக்குவரத்து சேவையை ஏப்.19 தொடங்கி 23 ஆம் தேதி வரை நிறுத்தியுள்ளது ஏர் இந்தியா நிறுவனம். ஹாங்காங்கில் அண்மைக்காலமாக கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஹாங்காங்குக்கான விமான சேவைகளை நிறுத்துவதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், ஹாங்காங் அதிகாரிகள் விதிக்கும் கெடுபிடிகளாலும், ஹாங்காங்குக்கான விமான சேவைக்கான … Read more

இரட்டை இலை சின்னம் விவகாரம்: டிடிவி தினகரன் ஏப்.21-ல் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்

சென்னை: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்கொடுத்த விவகாரத்தில், டிடிவி.தினகரன் வரும் 21-ம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக டிடிவி.தினகரன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசி, ரூ.2 கோடி முன்பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சுகேஷிடம் அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணையின்போது, டிடிவி.தினகரன் முன் பணமாக ரூ.2 கோடி கொடுத்ததாக … Read more

ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் வருகிறது; அத்தியாவசிய பொருட்களுக்கு வரி குறைப்பு? – அடுத்த மாதம் நடக்கும் கவுன்சில் கூட்டத்தில் முடிவு

புதுடெல்லி: அடுத்த மாதம் நடக்கவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வரிவிதிப்பு அடுக்குகளில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது. 5 சதவீத வரியின்கீழ் வரும் சில அத்தியாவசியப் பொருட்களுக்கு 3 சதவீதமாக வரி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறையை கொண்டுவரும் நோக்கில் சரக்கு மற்றும் சேவைவரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, ஜிஎஸ்டியால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி … Read more

266-வது பிறந்த நாள் கொண்டாட்டம்: தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர், தலைவர்கள் மரியாதை

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 266-வது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 266-வது பிறந்த நாள் தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை கிண்டியில் தமிழக அரசு சார்பில் நிறுவப்பட்டுள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தீரன் சின்னமலை உருவச் … Read more