ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு டெல்லியில் நடந்த ஊர்வலத்தில் கல்வீச்சு, துப்பாக்கி சூடு

புதுடெல்லி: டெல்லியில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில், கல்வீச்சு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 14 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, டெல்லி ஜகாங்கீர்புரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு, ஊர்வலம் நடந்தது. மசூதி ஒன்றை ஊர்வலம் கடந்து சென்ற போது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்சார் என்பவர் ஊர்வலத்தில் சென்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது மோதலாக மாறி இரு தரப்பினரும் … Read more

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் 15 மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன்நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வட தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் 18-ம் தேதி (இன்று)தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் … Read more

மசூதிகளில் ஒலிபெருக்கி இருக்க கூடாது: மே 3 வரை ராஜ் தாக்கரே கால கெடு

புனே: கடந்த 2-ம் தேதி மகாராஷ்டிராவில் புத்தாண்டு (குடி பட்வா) கொண்டாடப்பட்டது. இதையொட்டி மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, மகாராஷ்டிரா முழுவதும் மசூதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கூம்பு ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும்” என்று தெரிவித்தார். இந்த சூழலில் புனேவில் நேற்று அவர் கூறியதாவது: கூம்பு ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவது சட்டவிரோதம். வரும் மே 3-ம் தேதிக்குள் மகாராஷ்டிரா முழுவதும் மசூதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கூம்பு ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும். இல்லையென்றால் எங்கள் … Read more

சன்மார் குழும தலைவர் சங்கர் காலமானார்

சென்னை: சன்மார் குழுமத் தலைவர் என். சங்கர் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 76. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட சன்மார் குழுமம்,இரசாயனம், கப்பல் சரக்கு, பொறியியல், உலோகம் உள்ளிட்ட பிரிவுகளில் வணிகம் செய்து வருகிறது. இக்குழுமத்தின் தற்போதைய மதிப்பு ரூ.12,500 கோடி ஆகும். சன்மார் குழுமத்தின் கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில், 1975 முதல் 2004 வரையில் சங்கர் இருந்தார். 1998 முதல் 2004 வரையில் அந்நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகித்தார். அதன் … Read more

ஜார்க்கண்டில் மின் தடை நிலவும் கிராமத்தில் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர் சிறிய நீர் மின் உற்பத்தி திட்டத்தை நிறுவி சாதனை

ராம்கர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர் சிறிய நீர்மின் உற்பத்தி திட்டத்தை நிறுவி சாதனை படைத்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டம் பயாங் கிராமத்தைச் சேர்ந்தவர் கேதார் பிரசாத் மஹதோ (33). கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய இவர், விவசாயம் செய்து வருகிறார். அப்பகுதியில் மின்சார தட்டுப்பாடு நிலவுவதால் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதில் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். கோடை காலத்தில் பிரச்சினை மேலும் மோசமாக இருக்கும். இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக சொந்தமாக நீர்மின் உற்பத்தி … Read more

25 மாவட்டங்களில் நடந்த உட்கட்சி தேர்தலில் தேர்வான அதிமுக நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தல் நடந்த 25 மாவட்டங்களில் தேர்வான நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுகவில் அமைப்பு ரீதியாக 75 மாவட்டங்கள் உள்ளன. கடந்தஆண்டு டிச.7-ம் தேதி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் நடத்தப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மாவட்டங்களின் கிளை, பேரூராட்சி வார்டு, நகராட்சி வார்டு, மாநகராட்சி வட்ட நிர்வாகிகளுக்கான முதல்கட்ட தேர்தல் கடந்த மார்ச் 27-ம் தேதி நடத்தப்பட்டது. இதையடுத்து, ராணிப்பேட்டை, கோவை, திருவண்ணாமலை, கடலூர், திருப்பூர், … Read more

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் – வல்லுநர் குழு அறிக்கையை பரிசீலித்து விரைவில் முடிவு: தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்து வல்லுநர் குழுவின் அறிக்கையை பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். இதையடுத்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற … Read more

பிரிட்டன் பிரதமர் ஜான்சன் 21-ல் இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை

புதுடெல்லி: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார். அப்போது இரு நாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிகிறது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஏற்கெனவே 2 முறை இந்தியா வருவதற்காக திட்டமிட்டிருந்தார். ஆனால், கரோனா பெருந்தொற்று காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், பிரிட்டன் பிரதமரின் இந்திய பயணம் உறுதியாகியுள்ளது. அதன்படி, 2 நாள் பயணமாக … Read more

உக்ரைன் ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் : ரஷ்யா எச்சரிக்கை

மாஸ்கோ: மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் வீரர்கள் சரணடைய வேண்டும் என்றும் எதிர்த்து போரிட்டால் கொல்லப்படுவார்கள் என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 53-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. கிழக்கு உக்ரைன் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள, ரஷ்ய படைகள் அங்கு துறைமுக பகுதியான மரியுபோல் நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தியில்,‘‘மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் வீரர்கள், ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்தால், அவர்களின் … Read more

மக்கள் விரோத போக்குடன் தமிழக ஆளுநர் செயல்படுகிறார்: திருநாவுக்கரசு எம்பி குற்றச்சாட்டு

விழுப்புரம் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கஸ்தூரி செல்லாராம் மறைவையொட்டி, தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டித் தலைவரும், எம்பியுமான திருநாவுக்கரசர் நேற்று முன்தினம் இரவு அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் பாஜக அரசு, அவர்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்களை பயன்படுத்தி, மக்களால் தேர்வு செய்த அரசுகளுக்கு தொல்லை தருகிறது. இதை ஒரு வழக்கமாக செய்து வருகிறார்கள். உதாரணமாக புதுச்சேரி, … Read more