குடும்பத்துக்காக பாடுபடும் தமிழகம், மேற்கு வங்க அரசுகள்: பாஜக மாநில இணை பொறுப்பாளர் விமர்சனம்

பாஜக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு, திருப்பூர் குமார் நகரில் நேற்று நடைபெற்றது. மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேசும்போது, “வளர்ச்சிக்கான ஆட்சியை பிரதமர் மோடி முன்னெடுத்துள்ளார். இங்குள்ள அரசியல்கட்சிகளை போல, ஜாதி, மதத்தை முன்னிலைப்படுத்தவில்லை. வரும் 20-ம் தேதி வரை, சமூக நீதிக்கான தலைப்பில்விவசாயிகள், சாலையோர தொழிலாளர்கள் உட்பட அனைவரையும் சந்தித்து நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 2 ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் ஏழரை ஆண்டு கால ஆட்சியில், … Read more

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 61.35 லட்சம் பேர் பயன்: அமைச்சர் மா.சுப்ரமணியன்

உதகை: மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டு கடந்த 7 மாதங்களில் 61 லட்சத்து 34 ஆயிரத்து 350 பேர் பயன் பெற்றுள்ளனர் என மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்ய வந்தார். இன்று அவர் உதகை அருகே தோடா பழங்குடியினர்‌ வாழும்‌ முத்தநாடுமந்து பகுதியில் நடமாடும் மருத்துவமனை சேவையை மக்கள் நல்வாழ்வு மற்றும் … Read more

இந்தி: முதல்வரின் நிலைப்பாட்டில் உள்நோக்கம் காண்பதா? – ஓபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு கண்டனம்

சென்னை: அமித்ஷாவின் இந்தித் திணிப்பு பேச்சுக்கு பதிலளித்த முதல்வரின் நிலைப்பாட்டில் உள்நோக்கம் என்பதா? என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் அறிக்கைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று, தமிழகத்தின் தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”அதிமுகவின் உட்கட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வந்த உடனேயே, நாளும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு அந்தக் கட்சியில் தன்னுடைய இருப்பைப் பிரபலப்படுத்திக் … Read more

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாபயணிகள்: கடந்த நான்கு நாட்களில் 2 லட்சம் பேர் வருகை 

கொடைக்கானல்: கொடைக்கானலில் தொடர் விடுமுறையான கடந்த நான்கு நாட்களில் 2 லட்சம் சுற்றுலாபயணிகள் இயற்கை எழிலை ரசித்துள்ளனர். குறைந்த நாட்களில் சுற்றுலாபயணிகள் அதிகம் வந்துசென்றுள்ளனர். இது வழக்கத்தை விட அதிகம் என சுற்றுலாத்துறையினர் தெரிவிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடைவாசஸ்தலமான கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் கோடை சீசனின் சுற்றுலாபயணிகள் வருகை அதிகரிக்கும். வழக்கமாக ஆண்டுதோறும் கோடை சீசனான மே மாதத்தில் மட்டும் ஏழு லட்சம் பேர் கொடைக்கானலின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க வந்து செல்வர். இந்த ஆண்டு … Read more

தமிழகத்தில் அனைத்து மருத்துவ இடங்களும் நிரப்பப்பட்டு விட்டன: மா.சுப்பிரமணியன் தகவல்

உதகை: தமிழகத்தில் அனைத்து மருத்துவ இடங்களும் நிரப்பப்பட்டு விட்டன என மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் உதகை மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கும் நிகழ்ச்சி உதகை மருத்துவக்கல்லூரியில் இன்று நடந்தது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மாணவர்களுக்கு வெள்ளை அங்கி வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”உதகையில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டது மக்களுக்கு வர பிரசாதமாகும். முன்னாள் முதல்வர் கருணாநிதி அனைத்து மாவட்டங்களில் மருத்துவ … Read more

வியக்க வைக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம்: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்

சென்னை: வியக்க வைக்கும் வகையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை, கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் செயல்பட்டு வருகிறது. ஒன்பது தளங்களுடன் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்ற பெருமையுடன் செயல்பட்டு வரும் இந்நூலகத்தின் ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு பிரிவு உள்ளது. இதன்படி சொந்த நூல்கள் பயன்படுத்தும் பிரிவு, நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்கள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, தமிழ் நூல்கள் பிரிவு, ஆங்கில நூல்கள் பிரிவு, இணைய … Read more

தாய் மொழியுடன் ஆங்கிலம், இந்தி கற்க வேண்டும்: ஆந்திர அமைச்சர் ரோஜா கருத்து

திருவண்ணாமலை: தாய் மொழியுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளை கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும் என ஆந்திரா மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா தெரிவித்துள்ளார். சித்ரா பவுர்ணமியையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று மாலை ஆந்திரா அமைச்சர் ரோஜா சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கரோனா தொற்று பரவல் காரணமாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக சுவாமி தரிசனம் செய்ய வர முடியவில்லை. எனக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டபோது, அண்ணாமலையாரை … Read more

மலிவு விலையில் கிடைக்கும் மாநகராட்சியின் இயற்கை உரம் 

சென்னை: மாநகராட்சி தயார் செய்துள்ள இயற்கை உரம் மிகவும் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் 5000 டன் மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை முறையில் உரம் தயாரிக்கப்படுகிறது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நுண் உரமாக்கும் மையங்கள் இந்த உரம் மிகவும் இயற்கையான முறையில் தயார் செய்யப்படுகிறது. இந்த … Read more

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. ஆனால், கடைசி ஒரு வாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சர்வர் முடங்கியதால் பல்லாயிரக்கணக்கானவர்களால் விண்ணப்பம் செய்ய முடியவில்லை. பி.எட். பட்டப் படிப்புக்கான முதலாமாண்டு தேர்வு முடிவுகள் … Read more

ராமேஸ்வரத்திலும் 108 அடி உயர ஹனுமன் சிலை அமைக்கப்படும் – பிரதமர் நரேந்திர மோடி தகவல்

புதுடெல்லி: ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, குஜராத்தின் மோர்பி என்ற இடத்தில் உள்ள பரம்பூஜ்ய பாபு கேஷ்வானந்த் ஆசிரமத்தில், 108 அடி உயர ஹனுமன் சிலையை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வலிமை, தைரியம், கட்டுப்பாடு ஆகியவற்றின் உருவகமாக ஹனுமன் திகழ்கிறார். நாட்டின் நான்கு திசைகளிலும், ஹனுமன் சிலை அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக முதல் … Read more