தெலுங்கு நடிகர் பிரபாஸுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம்

ஹைதராபாத்: பாகுபலி படப்புகழ் பிரபாஸின் காருக்கு நேற்று ஹைதராபாத் போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர். ஹைதராபாத்தில் தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால் போக்குவரத்து விதிமுறைகள் அங்கு சற்று கடுமையாக்கப்பட்டுள்ளன. பிரபலங்கள் தவறு செய்தால் கூட உடனடியாக போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி, நடிகர் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர், நடிகர் மோகன் பாபுவின் மகன் மனோஜ் உட்பட பல பிரபலங்கள் அபராதம் செலுத்துவது வாடிக்கையாகிவிட்டது. விதிமுறைகளை மீறி கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது, … Read more

போராட்டத்தில் மரணம் அடைந்த விவசாயிக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி: முதல்வர் அறிவிப்பு 

தமிழகம்: தர்மபுரியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது மரணம் அடைந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தர்மபுரி மாவட்டம் பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கரியப்பன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவர் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த செய்தியைக் கேட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் … Read more

'பிரதமரின் மவுனம் அதிர்ச்சி அளிக்கிறது' – 13 எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டறிக்கை

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்குவங்க முதல்வர் (திரிணமூல் காங்கிரஸ்) மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் (திமுக) ஸ்டாலின், மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, ஜார்க்கண்ட் முதல்வர் (ஜேஎம்எம்) ஹேமந்த் சோரன், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் தேபபத்ரா பிஸ்வாஸ், புரட்சிகர சோசலிஸ்ட் தலைவர் மனோஜ் … Read more

எனக்கு நிர்வாக திறமை இல்லை என்று  சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்: முத்தரசனுக்கு ஆளுநர் தமிழிசை சவால்

புதுச்சேரி: எனக்கு நிர்வாக திறமை இல்லை என்று முத்தரசனை சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம் என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஆளுநர் மாளியைில் ‘‘சித்திரை முழு நிலவொளியில் கூடுவோம்-விருந்துண்போம், தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடுவோம்’’ நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சந்திர பிரியங்கா, சாய் ஜெ சரவணன்குமார், சட்டப்பேரவை துணைத் தலைவர் ராஜவேலு மற்றும் எம்எல்ஏக்கள், தலைமைச் செயலர், அரசுத்துறை அதிகாரிகள், … Read more

குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல், 2024 மக்களவை தேர்தலில் வியூகம் அமைக்க பிரசாந்த் கிஷோருடன் சோனியா ஆலோசனை

புதுடெல்லி: அடுத்து வரவிருக்கும் குஜராத், இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சார வியூகம் அமைப்பது தொடர்பாக தேர்ல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர். தமிழகம் மற்றும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்களில் முறையே திமுக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றிக்கு பிறகு பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூக நடவடிக்கை தொடர்கிறது. இவரை அடுத்து வரவிருக்கும் குஜராத், இமாச்சலபிரதேச சட்டப்பேரவை தேர்தல் மற்றும் … Read more

தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் இளையராஜாவை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா?- தமிழிசை சரமாரி கேள்வி

சென்னை: இசைஞானி இளையராஜா பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா? என தெலங்கனா மாநில ஆளுநரும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீர்திருத்தவாதிகளின் கருத்துகளும், செயல்பாட்டாளர்களின் அமலாக்கமும் என்ற … Read more

டெல்லி வன்முறை; 14 பேர் கைது: சதி இருப்பதாக பாஜக புகார்

புதுடெல்லி: டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் சதி இருப்பதாக பாஜக புகார் கூறியுள்ளது. டெல்லியில் நேற்று ஜஹாங்கிர்புரி பகுதியில் நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்றோர் மீது, மற்றொரு தரப்பினர் கல்வீச்சில் ஈடுபட்டதால் கலவரம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பல வாகனங்கள் மர்மநபர்களால் அடித்து நொறுக்கப் பட்டன. கலவரத்தின் போது அங்கு பாதுகாப்பிற்கு வந்த போலீஸார் அவர்களை கட்டுப்படுத்தினர். கல்வீச்சில் போலீஸார் … Read more

இளையராஜா செய்த குற்றம் என்ன? – மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி

பிரதமர் மோடிக்கும், அம்பேத்கருக்கும் பல விஷயங்களில் ஒற்றுமை இருக்கிறது என்று புத்தகம் ஒன்றின் முன்னுரையில் இசையமைப்பாளர் இளையராஜா எழுதியிருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு எதிராக பலர் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், மத்தியஇணை அமைச்சர் எல்.முருகன்தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இசையமைப்பாளர் இளையராஜா செய்த குற்றம் என்ன? இந்திய அரசியலமைப்புச் சட்டம்கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்த அனைவருக்கும் சுதந்திரம்வழங்கியுள்ளது. அது இசையமைப்பாளர் இளைய ராஜாவுக்கும் பொருந்தும். தலித் மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு … Read more

ஒற்றுமை, ஆதரவு தெரிவித்து ‘காஷ்மீர் தனியாக இல்லை’ – வீடியோ வெளியிட்டது ராணுவம்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் ஒவ்வொரு பிரிவினரும் தீவிரவாதத்தால் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைத் காட்டும் வீடியோவை ராணுவம் வெளியிட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஸ்திரத்தன்மைக்கான காஷ்மீரிகளின் போராட்டத்தில் வலுவுடன் துணை நிற்பதாக குடிமக்களுக்கு உறுதி அளித்துள்ளது. ‘காஷ்மீர் மீண்டும் போராடுகிறது’ என்ற தலைப்பில் இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் ஒரு வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அதில் காஷ்மீரில் தீவிரவாதத்தால் மதப் பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் படும்துன்பங்களையும் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து இயல்பு நிலையை ஏற்படுத்த பாதுகாப்பு படையினர் … Read more

தொடர் விடுமுறையால் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு – பல்வேறு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சென்னை: தமிழ் புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறையால் ரயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பல ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஏப்.18, 19, 20-ல் ராமேசுவரம் – சென்னை எழும்பூர் விரைவு ரயிலிலும் (22662), ஏப்.18-ம் தேதி காரைக்கால் – எழும்பூர் ரயில் (16176), காரைக்கால் – எர்ணாகுளம் ரயிலிலும் (16186) ஒரு 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. இன்று (17-ம் தேதி) தாம்பரம் – நாகர்கோவில் விரைவு ரயில் … Read more