அதிக வெப்பத்தை தாங்கும் புதிய கரோனா தடுப்பூசி – இந்திய நிறுவனம் கண்டுபிடிப்பு

புதுடெல்லி: கடும் வெப்பநிலையையும் தாக்குப்பிடிக்கும் வகையில் இந்தியாவில் புதிய கரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் புதிய தடுப்பூசியை 37 டிகிரி செல்சியஸில் நான்கு வாரங்கள் வைத்துக்கொள்ளலாம். அதேபோல் 100 டிகிரி செல்சியஸில் 90 நிமிடங்கள் வரையில் வைத்துக்கொள்ளலாம். இந்தத் தடுப்பூசியை இந்திய அறிவியல் நிறுவனமும் பெங்களூரைச் சேர்ந்த மைன்வேக்ஸ் என்ற பயோடெக் ஸ்டார்ட்அப் நிறுவனமும் இணைந்து உருவாக்குகின்றன. தற்போதுள்ள கரோனா தடுப்பூசிகள் மிக குறைவான வெப்பநிலையில் பராமரிக்கப்பட வேண்டியவை. கோவிஷீல்ட் தடுப்பூசியை 2-8 டிகிரி செல்சியஸ் … Read more

தமிழகத்தில் இலவசமாக 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கி சாதனை – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தமிழகத்தில் குறுகிய காலத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1 லட்சம் விவசாயக் குடும்பங்கள் பயனடைவதோடு, அவர்களது வேளாண் உற்பத்தியால் தமிழகமும் வளர்ச்சி அடையும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக அரசு சார்பில் விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு செப்.23-ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் காணொலி மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள மின்வாரிய … Read more

பெங்களூருவில் பெண் போலீஸ் அதிகாரி மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை

பெங்களூரு: பெங்களூரு மாநகர சிறப்பு காவல் கண்காணிப்பாளர் ஷோபா காதவ்கர் (53) மர்மமான முறையில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு மாநகர சிறப்பு காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஷோபா காதவ்கர் (53) புட்டனஹள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தாருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் விடுமுறை தினத்தையொட்டி அவரது குடும்பத்தினர் ஹாசனுக்கு சென்றனர். ஷோபா காதவ்கர் பணி முடித்து விட்டு வெள்ளிக்கிழமை மாலை வீட்டுக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் … Read more

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் 17, 18-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும். 19-ம் தேதி தென் தமிழகம், மேற்கு … Read more

பக்திப் பாடல் பாடியபடி திருமலை சென்ற தமிழக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

திருப்பதி: இசைக் கருவிகளுடன் பக்திப் பாடல்கள் பாடியபடி, திருப்பதி திருமலை சென்ற பக்தர்களுக்கு நேற்று அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த தீபு சக்ரவர்த்தி குழுவினர் பக்திப் பாடல்கள் பாடியபடி, நேற்று முன்தினம் திருப்பதி கோவிந்தராஜர் கோயிலை வந்தடைந்தனர். பின்னர், அன்னதானம் செய்து விட்டு, அங்கேயே படுத்துறங்கினர். நேற்று காலை அலிபிரியிலிருந்து மீண்டும் பக்திப் பாடல்கள் பாடியபடி மலையேறி செல்ல அலிபிரி கருடன் சிலை அருகே வந்தனர். அப்போது, அங்கு காவலுக்கு இருந்த தேவஸ்தான … Read more

அரசியல் கட்சித் தலைவர்கள் ஈஸ்டர் திருநாள் வாழ்த்து

சென்னை: சிலுவையில் மரித்த இயேசு கிறிஸ்து 3-ம் நாள் உயிர்த்தெழுந்த புனிதத் திருநாள், ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவ மக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திகள்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: இயேசு உயிர்த்தெழுந்தார். துக்கத்தில் இருந்த உலகம் மீண்டது. தமிழகத்தில் அற்புதமான ஆட்சி ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ளது. கூட்டாட்சி தத்துவம் வெற்றி பெறவும், மாநில சுயாட்சி மலரவும், சனாதன இந்துத்துவா … Read more

நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு பட்டா வழங்கியும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை: திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு

திருப்பூர்: நீர்நிலை புறம்போக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட திருப்பூர் மாநகர்மற்றும் சாமளாபுரம் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு கருப்பராயன் கோயில் வீதியில் 300-க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வந்தனர். குடியிருப்பின் அருகே சாமளாபுரம் குளம் அமைந்திருந்ததால், குளத்தின் அருகே இருந்த வீடுகளை கடந்த 4-ம் தேதி வருவாய் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் இடித்தனர். அங்கு குடியிருந்த … Read more

கோவையில் சேதமடைந்த சாலைகளைக் கண்டறிய மாநகராட்சி அறிமுகம் செய்த வாட்ஸ் அப்: 4 நாட்களில் 1300 புகார்கள்

கோவை: கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள், பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளால் மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு சேதமடைந்துள்ளன. ஏற்கெனவே மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்க ரூ.200 கோடி சிறப்பு நிதியாக அரசால் ஒதுக்கப்பட்டது. சிறப்பு நிதித் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில்,மிக மோசமாக உள்ள சாலைகளை கண்டறிந்து, அவற்றில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக, பொதுமக்கள் தங்கள் பகுதியில் குண்டும், குழியுமாக … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.விடம் போலீஸார் விசாரணை

கோவை: நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு,ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்டப் போலீஸார் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ராய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு … Read more

மதுரை சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்: நான்கு மாசி வீதிகளில் நடைபெற்ற மீனாட்சி தேரோட்டம் கோலாகலம்

மதுரை: அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இன்று காலை இறங்குகிறார். மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாசிவீதிகளில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய வைபவமான மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் விமரிசையாக நடந்தது. திருவிழாவின் 11-ம் நாளானநேற்று நடைபெற்ற தேரோட்டத்தைஒட்டி கீழமாசி வீதி தேரடியில் … Read more