என்எம்டி முதல் ஸ்ட்ரீட் ஃபர்னிச்சர் வரை: சென்னையின் முக்கிய சாலைகள் 'ஸ்மார்ட்'டாக மாறப்போவது எப்படி?

சென்னை: சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் என்எம்டி, ஸ்ட்ரீட் ஃபர்னிச்சர் உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட் சாலையாக மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளன. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளன. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து விபத்துகளும் அதிகரித்தக் கொண்டே உள்ளன. மேலும், வானகங்களில் இருந்து வரும் புகையால் காற்று மாசும் அதிகரிக்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்தவும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று வல்லுநர்கள் கருத்து … Read more

'புதுச்சேரி சட்டப்பேரவை செயலகத்துக்கு நிதி அதிகாரம் பெறப்பட்டுள்ளது' – அவைத் தலைவர் செல்வம் தகவல்

காரைக்கால்: “புதுச்சேரி சட்டப்பேரவை செயலகத்துக்கு நிதி அதிகாரம் பெறப்பட்டுள்ளது. புதுச்சேரி மக்களுக்கான அனைத்து தேவைகளையும் படிப்படியாக பிரதமர் மோடியின் ஒத்துழைப்போடு மாநில அரசு நிறைவேற்றும்” என அம்மாநில சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் உறுதிபடக் கூறியுள்ளார் காரைக்காலில் இன்று (ஏப்.16) செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், “அசாமில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் காமென்வெல்த் சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு புதுச்சேரி மாநில இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, அரசியல் … Read more

புதுச்சேரியில் ஆளுநரை வைத்து அரசுக்கு எதிராக போட்டி சர்க்கார் நடத்துவது ஜனநாயக விரோதச் செயல்: முத்தரசன் குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளுநரை பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகப் போட்டி சர்க்காரை நடத்துவது ஜனநாயக விரோதச் செயல் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். “புதுச்சேரியில் அதிகார அத்துமீறல் புரியும் பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், புதுச்சேரி மாநிலத்துக்கென்று நிரந்தர ஆளுநரை நியமிக்க வேண்டும்” என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுதேசி மில் அருகில் ஆர்ப்பாட்டம் இன்று … Read more

மீனவர்களுக்கான நிவாரணத் தொகையை ரூ.10,000-ஆக உயர்த்தி வழங்குக: மநீம வலியுறுத்தல்

சென்னை: மீன் பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதிகளில் ஏப்ரல், மே, ஜுன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளின் இனப்பெருக்க காலமாக, மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. மீன்வளத்தைப் பெருக்கும் நோக்கத்தில், இந்தக் காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் … Read more

திடீர் திருப்பம்: சோனியா, ராகுலுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு; குஜராத்தில் வெற்றி பெற புதிய வியூகம் – 2024 தேர்தலில் மாறும் திட்டம்?

புதுடெல்லி: காங்கிரஸ் தலைமையை கடுமையாக விமர்சித்த வந்த தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்து பேசியுள்ளார். இதன் தொடர்ச்சியாக குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வியூகப் பணி பிரசாந்த் கிஷோர் வசம் ஒப்படைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். அதன்பின் 2015 ஆம் … Read more

உலகின் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகள் பட்டியலில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி

சென்னை: உலகின் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி இடம்பிடித்துள்ளது. உலகில் உள்ள சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை உலகின் சிறப்பு வணிக இதழான CEOWORLD இதழ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் ஹார்டுவேர் மருத்துவக் கல்லூரி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்தப் பட்டியலில் முதல் 21 இடங்களில் அமெரிக்காவைச் சேர்ந்த பல்கலைக்கழங்கள்தான் உள்ளன. இந்தியாவைச் சேர்ந்த 5 … Read more

குஜராத்தை தொடர்ந்து ராமேஸ்வரம், மே.வங்கத்திலும் ஹனுமன் சிலை: பிரதமர் மோடி 

புதுடெல்லி: குஜராத்தின் மோர்பி பகுதியில் 108 அடி உயரமுள்ள ஹனுமன் சிலையை திறந்துவைத்த பிரதமர் நரேந்திர மோடி விரைவில் ராமேஸ்வரத்திலும், மேற்குவங்கத்திலும் ஹனுமன் சிலை நிறுவப்படும் என்று கூறினார். ஹனுமன் ஜெயந்தியை ஒட்டி குஜராத் மாநிலம் மோர்பி நகரில் நிறுவப்பட்டுள்ள 108 அடி சிலையை பிரதமர் மோடி இன்று (ஏப்.16) காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தார். “ஹனுமன் ஜி சார் தம் திட்டத்தின் கீழ் நாட்டின் 4 திசைகளிலும் ஹனுமன் சிலை நிறுவப்பட்டு வருகிறது. ஏற்கெனவே ஷிம்லாவில் … Read more

வரி சர்ச்சை முதல் ’பார்ட்டி’ வரை – இங்கிலாந்து பிரதமர் ரேஸில் ரிஷி பின்தங்குவதன் பின்புலம்

இங்கிலாந்து பிரதமர் பதவி ரேஸில் மிகவும் பின்தங்கியிருக்கிறார் ரிஷி சுனக். இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட ரிஷி சுனக், இங்கிலாந்தின் முதன்மைப் பதவியை அடையும் வாய்ப்பு கடந்த மாதம் வரை பிரகாசமாக இருந்தன. ‘இன்போசிஸ்’ நாராயணமூர்த்தியின் மகள் அக்‌ஷதாவின் கணவரான அவருக்கு எதிராக அடுத்தடுத்து எழுந்த சர்ச்சைகள் இப்போது பிரதமர் கனவை தவிடுபொடியாக்கியுள்ளன. Source link

ரூ.119 கோடி சொத்து வரி செலுத்திய சென்னை மக்கள்: ரூ.2.50 கோடி ஊக்கத் தொகை வழங்கிய மாநகராட்சி

சென்னை: முறையாக சொத்துவரி செலுத்திய சென்னை மக்களுக்கு அறிவித்தபடி மாநகராட்சி சார்பில் ரூ.2.58 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாயாக சொத்துவரி உள்ளது. இதை முறையாக செலுத்துபவர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி அரையாண்டுக்கான சொத்துவரி முதல் 15 நாட்களுக்குள் செலுத்தியவர்களுக்கு அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் வரை ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 2020 – 2023 ஆம் நிதியாண்டில் முதல் அரையாண்டுக்கான சொத்துவரியை … Read more

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மேற்குவங்கத்தில் திரிணமூல் முன்னிலை; பிஹாரில் ஆர்ஜேடி முந்துகிறது

புதுடெல்லி: மேற்குவங்க மாநிலம் அசன்சோல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. இந்த தொகுதியை பாஜகவிடம் இருந்து திரிணமூல் காங்கிரஸ் கைபற்றுகிறது. இதுபோலவே பிஹாரில் ஆர்ஜேடியும் சத்தீஸ்கரில் காங்கிரஸும் முன்னிலை வகித்து வருகின்றன. மேற்குவங்க மாநிலம் அசன்சோல் மற்றும் மேற்கு வங்க மாநிலம் பாலிகங்கே, சத்தீஸ்கரின் கைராகர், பிஹாரின் போச்சான், மகாராஷ்டிரத்தின் கோலாப்பூர் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற்றது. அசன்சோல் தொகுதி பாஜக எம்.பி.யாக இருந்த … Read more