தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி 2 பெண்கள் மனு – அலகாபாத் உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

அலகாபாத்: உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 22 மற்றும் 23 வயதான 2 இளம்பெண்கள் ஒரே கல்லூரியில் பயின்று வந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். ஆனால், இரு பெண்கள் திருமணம் செய்வதை இந்த சமூகமும், தங்கள் பெற்றோரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என உணர்ந்த அவர்கள், வேறு ஊருக்கு சென்று ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இதையடுத்து இந்த விஷயம் அந்தப் பெண்களின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களில் … Read more

இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை – இந்தியா-பிரான்ஸ் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு

புதுடெல்லி: இந்தியா, பிரான்ஸ் ராணுவ அதிகாரிகளிடையிலான 20-வது ஆண்டு பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையின் போது 2 நாடுகளிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்தியா, பிரான்ஸ் ராணுவ உயர் அதிகாரிகளிடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான பேச்சுவார்த்தை பிரான்ஸின் பாரிஸ் நகரில் கடந்த 12, 13-ம் தேதிகளில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் இந்த இந்தியா-பிரான்ஸ் கூட்டு பேச்சுவார்த்தை நிகழ்ச்சி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக … Read more

ட்விட்டரின் 100 சதவீத பங்குகளை 4,300 கோடி டாலருக்கு வாங்க எலான் மஸ்க் விருப்பம்

கலிபோர்னியா: சமூக வலைதளங்களில் ட்விட்டருக்கு தனிச் சிறப்பு உண்டு. உலக அளவில்அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், கலைத்துறையினர் முதல் பொதுமக்கள் வரை தங்கள் கருத்துகளை வெளிப்படையாக பகிர்வதற்கான தளமாக ட்விட்டர் உள்ளது. எலான் மஸ்க் ட்விட்டரில் புழங்குபவர். இந்நிலையில், ‘ஒரு சமூகம் ஜனநாயகப் பூர்வமாக செயல்படுவதற்கு பேச்சுச் சுதந்திரம் அவசியம். ட்விட்டர் அதன் தற்போதைய கட்டமைப்பில் முழுமையான பேச்சு சுதந்திரத்தைக் கொடுக்கும் தளமாக இல்லை. அது இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்’ என்று கூறிய எலான் … Read more

தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: லட்சத்தீவு பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் 16, 17-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். 16-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலைபகுதி மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 17-ம் … Read more

டெல்லியில் திடீரென அதிகரிக்கும் கரோனா – பள்ளிகளை மூடுவது குறித்து துணை முதல்வர் சிசோடியா விளக்கம்

புதுடெல்லி: டெல்லியில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வியாழக்கிழமை அன்று இந்தியாவில் மொத்தமாக 949 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் புதிதாக 325 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி டெல்லியில் கரோனா தொற்று பரவல் 0.57 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் தற்போது அது 2.39 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் வீட்டுத் தனிமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 48 சதவீதம் அதிகரித்துள்ளது. … Read more

ஐ.நா. பொதுச்செயலாளருடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு – உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசனை

நியூயார்க்: அமெரிக்காவில் முகாமிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸை நியூயார்க்கில் நேற்று சந்தித்தார். அப்போது உக்ரைன் போர் குறித்து இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். போர் காரணமாக உக்ரைனில் உணவு, எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அந்த நாட்டுக்கு உணவு, எரிபொருள் விநியோகம் செய்வது குறித்து இருவரும் ஆலோசித்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அந்த நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் குறித்தும் … Read more

இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்ப உரிய வசதி செய்து தர வேண்டும் – மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கையில் உணவுத் தட்டுப்பாட்டால் அவதிப்படும் தமிழர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு விரைவில் உரிய வசதியை செய்து தர வேண்டும், யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த மாதம் 31-ம் தேதி பிரதமரை நான் சந்தித்தபோது, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இலங்கைத் தமிழர்களுக்கு தேவையான … Read more

யேசு கிறிஸ்துவின் லட்சியங்கள் மக்களுக்கு வழிகாட்டும் ஒளி – புனித வெள்ளி நாளில் பிரதமர் ட்வீட்

புதுடெல்லி: புனித வெள்ளி நாளான நேற்று யேசு கிறிஸ்துவின் துணிச்சல் மற்றும் தியாகங்களை பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி நாளில் யேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்றனர். இது அவர்களுக்கு துக்கம் மற்றும் தவம் செய்யும் நாளாகும். இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று ட்விட்டர் பதிவில், “புனித வெள்ளியன்று யேசு கிறிஸ்துவின் தைரியம் மற்றும் தியாகங்களை நாங்கள் நினைவுகூர்கிறோம். அவருடைய லட்சியங்களான சேவையும் சகோதரத்துவமும் பல மக்களுக்கு … Read more

திருநங்கையர், திருநம்பியர் உரிமை காக்க தமிழக அரசு தொடர்ந்து உழைக்கும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: திருநங்கையர் நாள் வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருநங்கையர் திருநம்பியர் உரிமை காக்க தொடர்ந்து உழைக்கும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பான தமிழக முதல்வர் ஸ்டாலினின் சமூகவலைதள பதிவு: “இன்று என்னைச் சந்தித்த சகோதரி ரியா உள்ளிட்ட திருநங்கை சகோதரிகளுக்கு திருநங்கையர்நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். திருநங்கையர் கண்ணியம் காத்த மறைந்த முதல்வர் கருணாநிதி காட்டிய சமூகநீதிப் பாதையில் நடைபோடும் தமிழக அரசு, திருநங்கையர் – திருநம்பியர் உரிமை காக்க தொடர்ந்து உழைக்கும்” என்று பதிவிட்டுள்ளார். Source … Read more

அடுத்த 10 ஆண்டுகளில் மருத்துவர்கள் எண்ணிக்கையில் இந்தியா புதிய சாதனை படைக்கும் – பிரதமர் மோடி நம்பிக்கை

புதுடெல்லி: மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற மத்திய அரசின் கொள்கையால் அடுத்த 10 ஆண்டுகளில் மருத்துவர்கள் எண்ணிக்கையில் இந்தியா புதிய சாதனை படைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள புஜ் என்ற இடத்தில் கட்ச் லேவா படேல் சமாஜ் என்ற தொண்டு அமைப்பு சார்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய 200 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள முதல் தொண்டு நிறுவன … Read more