திவ்யா, தர்ஷிணி வீட்டிற்குச் சென்றது ஏன்? – நெகிழ்ச்சியுடன் காரணம் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்

திருவள்ளூர்: “விளிம்புநிலை சமுதாயத்தைச் சேர்ந்த பெண் பிள்ளைகள், துணிச்சலாகப் பேசுவதைப் பார்த்து ஆச்சரியமாகவும், அதிசயமாகவும், மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இது பெண்ணுரிமைக்காகப் போராடிய திராவிட இயக்கத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. இந்த வெற்றியை பூஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த அஸ்வினி வடிவிலும், ஆவடியைச் சேர்ந்த திவ்யா வடிவிலும் பார்க்கிறேன். அதனால்தான் எப்படி அஸ்வினி வீட்டிற்குப் போனேனோ, அதேபோல் இன்று திவ்யா, தர்ஷிணி வீட்டிற்கும் சென்றேன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆவடியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று … Read more

தமிழகத்தில் நெல் கொள்முதலில் தொடரும் முறைகேடுகள், அரசியல் தலையீடுகள்: விவசாயிகள் குற்றச்சாட்டு

சென்னை: “தமிழக அரசின் கொள்முதல் குறித்து வெளிப்படையான கொள்கை நிலையை முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்த முன்வர வேண்டும்” என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநில நிர்வாகிகள் கூட்டம், சென்னை மண்டல தலைவர் சைதை சிவா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியது: “தமிழகத்தில் வேளாண் தொழிலை ஊக்கப்படுத்த இயந்திரங்கள் குறித்த … Read more

10 நாட்களில் 1.16 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.183.13 கோடி பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

சென்னை: 2020-2021 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத்தொகையாக கடந்த 10 நாட்களில் 1.16 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.183.13 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றத்தினால் பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகையினை விரைவில் பெற்றுத்தர தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 2020 ஆம் ஆண்டில் நிகழ்ந்த நிவர், புரெவி … Read more

ராமர் கடவுள் இல்லை; ஒரு கதையின் கதாபாத்திரம் மட்டுமே  – மாஞ்சி பேச்சால் சர்ச்சை

பாட்னா: “நான் ராமரை நம்பவில்லை. அவர் கடவுள் இல்லை; துளசிதாசர் மற்றும் வால்மீகி ஆகியோரின் கருத்துக்களைப் பரப்ப உருவாக்கிய கதாபாத்திரம் தான் ராமர்” என பிஹார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வரும், ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா (HAM) கட்சியின் தலைவரும், பிஹார் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மாஞ்சி நேற்று வியாழக்கிழமை அம்பேர்கர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது … Read more

நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு நலத்திட்ட உதவிகள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “எது தேவையானாலும், எப்போது வேண்டுமானாலும், மாவட்ட நிர்வாகத்தையும், என்னையும் அணுகலாம்” என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ஆர்.பிரியா, கே.திவ்யா, எஸ்.எஸ். தர்ஷினி ஆகியோரது வீடியோ பதிவினை பார்த்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (மார்ச் 16) அன்று அம்மாணவிகளை தலைமைச் செயலகத்தில் … Read more

சாய்வாலா: பாகிஸ்தானின் அர்ஷத் கானை உங்களுக்கு நினைவிருக்கிறதா?

பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் கானை உங்களுக்கு நினைவிருக்கிறதா ? நீல நிற கண்களுடன், டீ கடையில் தேநீர் வடிகட்டியுடன் இருக்கும் அர்ஷத்தை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் கான் ‘chaiwala’ என்று அனைவராலும் அறியப்படுகிறார். சமூக வலைதளங்கள் சிலரது வாழ்கையை அப்படியே தலைகீழாக மாற்றும். எதிர்பாராத புகழையும், செல்வத்தையும் ஒரே நேரத்தில் கொட்டும். அதே வேளையில் நேர்த்தியாகவும், நிதானமாகவும் எதிர்கொள்பவர்கள் தங்களுக்கான இருப்பை என்றைக்கும் நிலை நிறுத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் அர்ஷத் கான். … Read more

சந்தையில் அறிமுகமானது ஒப்போ A57 ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள்

டுங்க்வான்: சீன எலக்ட்ரானிக் சாதன உற்பத்தி நிறுவனமான ஒப்போ, A57 என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். ஒப்போ A56 ஸ்மார்ட்போனுக்கு சந்தையில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மலிவான விலையில் வெளியாகியுள்ள இந்த போன் சந்தையில் போட்டி நிறுவனங்களுக்கு விற்பனையில் கடுமையான சவாலை கொடுக்கும் என தெரிகிறது. முதற்கட்டமாக இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் மற்ற நாடுகளின் … Read more

எதிர்க்கட்சியினர் கோரிக்கை; உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அறிவுரை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்: விஜயகாந்த் வரவேற்பு

சென்னை: உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமில் எதிர்க்கட்சியினர் வைக்கும் கோரிக்கைகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை எடுத்துரைத்து, அறிவுரை வழங்கிய முதல்வரை தேமுதிக வரவேற்கிறது என அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர்களின் கணவன்மார்கள் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டு, பெண் கவுன்சிலர்களுக்கான அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமென சமீபத்தில் தேமுதிக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் … Read more

உக்ரைன் போர்|  கீவ் பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் அதிகரிக்கும்:  ரஷ்யா எச்சரிக்கை

மாஸ்கோவ்: உக்ரைனின் தேசியவாத அமைப்புகள் ரஷ்ய எல்லைப் பகுதிகளில் நடத்தும் தாக்குதல்களுக்கு பதிலடியாக கீவ் நகரத்தின் மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகரிக்கப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் ராணுவ அமைச்சகம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: கீவ் நகருக்கு வெளியே இருக்கும் ராணுவத் தொழிற்சாலை ஒன்றின் மீது வியாழக்கிழமை பிற்பகுதியில், கடலில் இருந்து நீண்ட தூர இலக்குகளைத் தாக்கியழிக்கும் காலிபர் ரக ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஜூலியான்ஸ்கி எந்திர கட்டுமான ஆலையான “விசார்” மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் காரணமாக, … Read more

மதுரை சித்திரை திருவிழா  தேரோட்டம்:  பக்திகோஷத்துடன் வடம்பிடித்த பக்தர்கள்

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் விழாவான தேரோட்டம் இன்று நடந்தது. மாசி வீதிகளில் அசைந்தாடி சென்ற தேர்களை பக்தி கோஷங்கள் எழுப்பி வடம்பிடித்து பக்தர்கள் இழுத்தனர். மதுரை சித்திரைத்திருவிழா கடந்த 2 ஆண்டுகளுக்குப்பின், பக்தர்கள் பங்கேற்புடன் ஏப்ரல் 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நான்கு மாசி வீதிகளிலும் மீனாட்சி-சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளி தினமும் காலை, இரவு இரு வேளையிலும் வீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பட்டாபிசேகம், திக் விஜயத்தை தொடர்ந்து நேற்று மீனாட்சி … Read more