மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: அரபிக் கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, மேற்கு தொடர்ச்சியையொட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “லட்சதீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிளில் நிலவும் மேலடுக்கு சுழற்ச்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 15ம் தேதி இன்று தமிழகம், … Read more

ஆவடி நரிக்குறவர் குடியிருப்பில் தேநீர், இட்லி நாட்டுக்கோழி குழம்பு சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள நரிக்குறவர்கள் குடியிருப்புக்குச் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு வழங்கப்பட்ட தேநீர், இட்லி உள்ளிட்டவைகளை சாப்பிட்டார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பேருந்து நிலையம் பின்புறம் நரிக்குறவர்இன மக்கள் வசிக்கும் குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு நரிக்குறவர் இன மக்கள் 180-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் திவ்யா,பிரியா, தர்ஷினி ஆகியோர், தாங்கள் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், அரசுப் பள்ளி … Read more

ஓட்டல் போன்ற வீடு : செய்தி வாசிப்பாளருக்கு இன்ப அதிர்ச்சி தந்த கிம்

வடகொரிய அதிபர் கிம் தனது அதிரடி நடவடிக்கைகளால் தன் மீதான வெளிச்சத்தை என்றும் அகலவிடாமல் வைத்திருப்பவர். அந்த வகையில் சமீபத்தில் கிம் செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. வடகொரியாவின் சர்வாதிகாரியாகவே கிம்மை பற்றி மேலை நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிடும். எனினும் இவை எல்லாம் பொய் என்று கூறும்வகையில் அவ்வப்போது தனது இன்னொரு முகத்தையும் கிம் வெளிகாட்டி விடுவார். அந்த வகையில் தற்போது ஒரு செய்தி வெளியாகி உள்ளது. வடகொரியாவின் புகழ்பெற்ற செய்தி வாசிப்பாளர் … Read more

வாட்ஸ்அப் குழுக்களுக்காக அறிமுகமாகவுள்ள ஐந்து புதிய அம்சங்கள்

கலிபோர்னியா: இன்ஸ்டன்ட் மெசேஜிங் செய்ய உதவும் தளமான வாட்ஸ்அப் செயலியில் வாட்ஸ்அப் குழுக்களுக்காக ‘கம்யூனிட்டிஸ்’ உட்பட ஐந்து அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. உலகம் முழுவதும் பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மல்டி மீடியா தள செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். இந்த செயலியில் பயனர்களை ஈர்க்கும் விதமாக அவ்வப்போது புது புது அம்சங்களை வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் குழுக்களுக்காக (குரூப்ஸ்) புதிய அம்சங்கள் அறிமுகமாகி உள்ளது. வாட்ஸ்அப் பிளாகில் இது … Read more

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்ட திருத்த விதிப்படி இழப்பீடு வழங்க உத்தரவு

மதுரை: திண்டுக்கல்லில் 2014-ல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு, 2016-ம் ஆண்டின் எஸ்சி, எஸ்டி சட்ட திருத்த விதிப்படி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் டி.புதுக்கோட்டையைச் சேர்ந்த பட்டியலின இளம்பெண் 2014-ல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக சத்திரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தனர். இந்நிலையில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இழப்பீடு கேட்டு 2014-ல் உயர் நீதிமன்ற கிளையில் மனு … Read more

ம.பி. மசூதிகளில் சிசிடிவி கேமராக்கள் – அமைச்சர் வரவேற்பு

போபால்: மத்தியப் பிரதேசத்தின் கர்கான் மாவட்டத்தில் ராம நவமி ஊர்வலம் நடைபெற்ற போது வன்முறை ஏற்பட்டது. இந்நிலையில் முஸ்லிம் தலைவர்கள் குழுவினர் போபால் ஷேர் குவாசி, சையத் முஸ்தக் அலி தலைமையில் மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவை நேற்று முன்தினம் சந்தித்து பேசினர். அப்போது, மசூதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறும்போது, ‘‘மசூதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த, மேற்கொண்டுள்ள முயற்சி நல்லது. இந்த … Read more

மெரினா கடற்கரை கழிவறைகளில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு: 15 நாட்களில் சீரமைக்க அறிவுறுத்தல் 

சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள கழிவறைகளை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை மெரினா கடற்கரையில் ராணி மேரி கல்லூரி எதிரில் ரூ.22 லட்சம் நம்ம சென்னை செல்பி இடம் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு வருபவர்கள் இதன் முன் நின்றபடி செல்பி எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கடற்கரைக்கு வரும் இளைஞர்கள் இதன் மேல் நின்று புகைப்படம் எடுப்பது, அதில் பல வாசகங்களை எழுதி வைப்பது உள்ளிட்ட செயல்களில் … Read more

கர்நாடகாவில் ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா – முதல்வர் பசவராஜ் பொம்மையை இன்று சந்திக்கிறார்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் (40). இவர் தன்னிடம் மாநில‌ ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா 40 சதவீத கமிஷன் கேட்பதாக குற்றம் சாட்டினார். இதனால் அவர் மீது ஈஸ்வரப்பா வழக்கு தொடுத்ததால் இருவ‌ருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்நிலையில் கடந்த 12-ம் தேதி சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து சந்தோஷ் பாட்டீலின் குடும்பத்தார், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஈஸ்வரப்பாவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதனால் சந்தோஷ் பாட்டீலை … Read more

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது: 61 நாட்களுக்கு கடலுக்கு செல்ல தடை

ராமேசுவரம்: தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. இதனால் 15 ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாத்திடும் வகையிலும் ஏப். 15 முதல் ஜுன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்நாட்களில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை உபயோகப்படுத்தி மீன்பிடிக்கக் கூடாது என்று தமிழக மீன்வளத் துறை அறிவித்துள்ளது. 15 … Read more

டெல்லியில் கரோனா தொற்று அதிகரிப்பு; பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்?- வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியீடு

புதுடெல்லி: டெல்லியில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்படுகின்றன நாடு முழுவதும் கரோனா 3-வது அலையின் தாக்கம் கணிசமாக குறைந்து வருகிறது. இதனால் வழக்கமான முறைக்கு இயல்பு வாழ்க்கை மாறி வருகிறது. முககவசம் அணிவது சட்டரீதியாக கட்டாயம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு விட்டது. இந்தநிலையில் உருமாறிய கரோனா எக்ஸ்இ வைரஸ் சீனா உட்பட பல நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் அந்த வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தும் என்றஅச்சம் … Read more