முன்னாள் பிரதமர்கள் அருங்காட்சியகம் தொடக்கம் – பார்வையிடுவதற்கு முதல் டிக்கெட் வாங்கினார் பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: முன்னாள் பிரதமர்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு ஆற்றிய பணிகளை நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள வசதியாக, பிரதமர்களின் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இது வருங்கால தலைமுறையினருக்கு உத்வேகமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியுடன் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதையொட்டி ஓராண்டுக்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அம்பேத்கர் பிறந்த நாளில் இதன் ஒருபகுதியாக … Read more

அரசியல் காரணத்துக்காகவே தேநீர் விருந்து புறக்கணிப்பு: தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

அரசியல் காரணத்துக்காக ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைப்பது மரபு. முதல்வர் என்ற அடிப்படையில்தான் ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்துள்ளார். ஸ்டாலின் தமிழக மக்களுக்கான முதல்வர்தானே தவிர, திமுக உறுப்பினர்களுக்கான முதல்வர் அல்ல. அப்படியிருக்க, அந்த நிகழ்ச்சிக்கு அவர்கள் வந்திருக்க வேண்டும். அனைத்தையும் அரசியலாக்க வேண்டும் என்று திமுக கிளம்பியுள்ளது 11 மசோதாக்களை திருப்பி … Read more

மத்திய நிதியமைச்சருடன், இலங்கை தூதர் ஆலோசனை – இலங்கைக்கு கூடுதலாக 200 கோடி டாலர் நிதியுதவி

புதுடெல்லி: இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிண்டா மொராகோடா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா-இலங்கை இடையேயான பொருளாதார கூட்டுறவு நிலவரம் குறித்தும் இந்தியாவின் உதவியை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இலங்கையில் சீனா இழந்த செல்வாக்கை மீட்க இந்தியா முயற்சிப்பதால், இலங்கைக்கு மேலும் 200 கோடி அமெரிக்க டாலர் கடன் அளிக்க இந்தியா தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு கடன்களை இப்போது திருப்பிச் செலுத்த போவது இல்லை என … Read more

8 காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை: மனித உரிமை ஆணையத்தில் ஜெயக்குமார் புகார்

சென்னை: வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தன்னை கைது செய்த 8 காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் அவர் அளித்த புகார் மனு: சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மாற்றுக்கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கள்ள ஓட்டு போடுவதை அறிந்தேன். பல்வேறு குற்றவழக்குகளில் தண்டனை பெற்றுள்ள நரேஷ் என்பவர் கையில் ஆயுதங்களுடன்மக்களை பயமுறுத்தி வாக்குச்சாவடிகளில் … Read more

கோப்புகள் மீது 3 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் – உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் 2-வது முறையாக முதல்வர் பதவியேற்ற யோகி ஆதித்யநாத் அரசு நிர்வாக நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார். புதன்கிழமையன்று அரசு அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது, மக்கள் குறைகள், அதன் மீதான நடவடிக்கைகள் தொடர்பான குடிமக்கள் சாசனப் பட்டியலை அதிகாரிகள் தயார் செய்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மேலும், பொதுமக்கள் குறைகள் தொடர்பாக 3 நாட்களுக்கு மேல் எந்த ஒரு கோப்பையும் நிலுவையில் வைத்திருக்க கூடாது என்றும் ஆதித்யநாத் … Read more

வன்னியருக்கு 10.5% இடஒதுக்கீடு – அமைச்சர்கள், சட்ட நிபுணர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: வன்னியருக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு விவகாரத்தில் மேல்நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடந்தது. தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் வன்னியர் சமுதாயத்துக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கி கடந்த ஆண்டு பிப்ரவரியில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த உள்ஒதுக்கீட்டை எதிர்த்து 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை … Read more

ஆந்திர ரசாயன தொழிற்சாலை வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழப்பு

விஜயவாடா: ஆந்திர மாநிலத்தின் ஏலூரு மாவட்டம் முசுனூரு மண்டலத்தில் அக்கிரெட்டிகுடம் என்ற கிராமம் உள்ளது. இங்கு போரஸ் லேபரேட்டரீஸ் என்ற பெயரில் மருத்துவ ரசாயனம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையின் 4-வது உற்பத்தி பிரிவில் நேற்று முன்தினம் இரவு சுமார் 150 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது கொதிகலன் ஒன்றிலிருந்து இரவு 11.40 மணியளவில் அபாயகரமான வாயுக் கசிந்து, வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் … Read more

அமெரிக்காவிலும் மனித உரிமை மீறல் பிரச்சினைகள் உள்ளன – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி

புதுடெல்லி: அமெரிக்காவிலும் மனிதஉரிமை மீறல் பிரச்சினைகள் உள்ளன என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். கடந்த 11-ம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை வாஷிங்டனில் சந்தித்து பேசிய பிறகு இருவரும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது, இந்தியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் கவலையளிப்பதாக அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார். உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்துவருவது குறித்தும், ரஷ்யாவிடம் இருந்து எஸ்.400 ரக … Read more

ஆளுநர் மாளிகையில் பாரதியார் சிலை திறப்பு – ஆளுநர், மத்திய அமைச்சர் பங்கேற்பு

சென்னை: மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவையொட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் பாரதியாரின் ஆள் உயர சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திறந்துவைத்தார். பாரதியார் நூற்றாண்டு நினைவுநாளையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாரதியார் சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பாரதியாரின் குடும்பத்தினர் கலந்துகொண்டு ஆளுநர் மற்றும் மத்திய இணை அமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். … Read more

ஸ்வீடன், பின்லாந்தை நேட்டோவில் சேர்த்தால் பால்டிக் பகுதியில் அணு ஆயுதங்களை நிறுத்துவோம் – ரஷ்யா எச்சரிக்கை

மாஸ்கோ: பின்லாந்தும் ஸ்வீடனும் அமெரிக்கா தலைமையிலான ராணுவக் கூட்டணியில் (நேட்டோவில்) சேருவது குறித்து யோசித்து வருகின்றன. இது தொடர்பாக அடுத்த சில வாரங்களில் பின்லாந்து முடிவு எடுக்கும் என்று அந்நாட்டு பிரதமர் சன்னா மரின் நேற்று முன்தினம் தெரிவித்தார். இந்நிலையில், 2008 முதல் 2012 வரை ரஷ்ய அதிபராக இருந்தவரும் ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவருமான திமித்ரி மெத்வெதேவ் நேற்று கூறும்போது, “ஸ்வீடன் மற்றும் பின்லாந்தை நேட்டோவில் இணைத்தால் ரஷ்யா தனது ராணுவ சமநிலையை மீட்டெடுக்க … Read more