'ஆளுநர் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிக்கிறது' – அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: நீட் விலக்கு மசோதாவிற்கு அனுமதி அளிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்வதால் ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிப்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நீட் தேர்வு விலக்கு மாசோதா கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதவை மீண்டும் தமிழக அரசிற்கு திருப்பி அனுப்பி வைத்தார் ஆளுநர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தியது. இந்தக் கூட்டத்தின் முடிவில் … Read more

ஜாலியன் வாலாபாக் படுகொலை: தியாகிகளுக்கு பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ஆங்கிலேயேர் ஆட்சியில் 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி அடக்குமுறை சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக்கில் நடந்த கூட்டத்தில் ஏராளமானோர் திரண்டனர். அப்போது,போலீஸார் கண்மூடித்தனமாக கூட்டத்தினரை நோக்கி சுட்டதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த ஜாலியன் வாலாபாக்கில் உள்ள தியாகிகள் நினைவிடம் கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தின் … Read more

குருப்பெயர்ச்சி: திட்டை வசிஷ்டேஸ்வர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

தஞ்சாவூர்: குருப்பெயர்ச்சியை முன்னிட்டு இன்று அதிகாலை, திட்டை வசிஷ்டேஸ்வர் கோயிலில் உள்ள குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரினசம் செய்தனர் தஞ்சாவூரை அடுத்த திட்டை பகுதியில் அமைந்துள்ள வசிஷ்டேஸ்வரர் கோயில் தமிழகத்தின் தொன்மையான கோயில்களில் ஒன்றாகும். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற கோயில் இதுவாகும். வசிஷ்ட முனிவரால் பூஜிக்கப்பட்டதால் வசிஷ்டேஸ்வரர் சுயம்புவாக தோன்றியதால் தான் தோன்றீஸ்வரர் என்ற பெயர் கொண்டவர். மூலஸ்தான விமானத்தில் சந்திரகாந்தக்கால் வைத்து கட்டப்பட்டுள்ளது. அக்கல் சந்திரனில் இருந்து … Read more

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பாக இருக்கும் : இந்திய வானிலை ஆய்வு மையம் 

சென்னை: இந்த ஆண்டு இந்தியாவில் தென்மேற்கு பருவமழை இயல்பாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் தென்மேற்கு பருவமழையானது ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் நிறைவடைகிறது. இந்தாண்டுக்கான தென்மேற்கு பருவமழை தொடர்பாக முன்அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி தெற்குமேற்கு பருவமழையின் நீண்ட கால சராசரி மழை அளவு 96 முதல் 104 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி 99 சதவீதம் மழை பெய்யும் … Read more

திருப்பூரில் பழமைவாய்ந்த 2 கோயில்களை இடிக்க இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள நூறாண்டுகள் பழமையான இரண்டு கோயில்களை இடிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், பள்ள பாளையத்தில் உள்ள கருப்பராயசுவாமி கோயிலும், வடுகபாளையத்தில் உள்ள கருவந்தராய சுவாமி கோயிலும், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி, இரு கோயில்களையும் இடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ள பாளையத்தைச் சேர்ந்த கோபிநாதனும், வடுகபாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு … Read more

உ.பி.யில் 800 இடங்களுக்கு மேல் ராம நவமி ஊர்வலத்தில் வன்முறைக்கு இடமில்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்

புதுடெல்லி: ராம நவமி கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாட்டின் பல மாநிலங்களில் வன்முறை நடந்தன. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள லோகர்தகா பகுதியில் கடந்த 10ம் தேதி நடந்த ராம நவமி ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் இறந்தார், 12 பேர் காயம் அடைந்தனர். இதேபோல் மத்தியப் பிரதேசம் கர்கான் பகுதியில் ராம நவமி ஊர்வலத்தின் போது நடந்த கல்வீச்சு சம்பவம் தொடர்பாக 100 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பை மன்குர்த் பகுதியில், ராம நவமி ஊர்வலத்தில் நடந்த வன்முறையில் … Read more

50-வது நாளில் உக்ரைன் –  ரஷ்யா போர் | அகதிகளான 4.6 மில்லியன் பேர்; அமைதியை வலியுறுத்தும் உலக சுகாதார நிறுவனம்

ஜெனீவா: உக்ரைன் – ரஷ்யா போர் 50-வது நாளை எட்டியுள்ள நிலையில் இதுவரை 4.6 மில்லியன் பேர் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான் ரஷ்யாவின் போர் இன்று 50-வது நாளை எட்டியுள்ளது. தற்போது வரை போர் காரணமாக 4.6 மில்லியன் போர் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் … Read more

ஆளுநரின் தேநீர் விருந்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது: எம்எல்ஏ செல்வபெருந்தகை

சென்னை: தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்எல்ஏவுமான செல்வபெருந்தகை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் அளிக்கும் இந்த தேநீர் விருந்தில் இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கம் பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளது. தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் உரிமைகளையும், தமிழக மக்களின் கோரிக்கைகளையும் நிராகரிப்பதோடு, … Read more

கர்நாடகாவில் ஒப்பந்ததாரர் தற்கொலை: ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா மீது வழக்குப் பதிவு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த சந்தோஷ் பாட்டீல் (40). இவர், அரசு திட்டங்களின் ஒப்பந்ததாரராகவும் இருந்தார். பாஜக உறுப்பினரான இவர் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தன்னிடம் அரசின் ஒப்பந்த பணி திட்டங்களுக்கு நிதி ஒதுக்க 40 சதவீத கமிஷன் கேட்பதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அவர் மீது ஈஸ்வரப்பா அவதூறு வழக்கு தொடர்ந்த நிலையில், சந்தோஷ் பாட்டீல் நேற்று முன் தினம் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், சந்தோஷ் பாட்டீலின் சகோதரர் … Read more

அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை

சென்னை: நாடு முழுவதும் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அம்பேத்கரின் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று நேற்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்களும் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினா். முதல்வர் … Read more