இந்திய – இலங்கை மீனவர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை: தமிழக அரசு கோரிக்கை 

சென்னை: இந்திய – இலங்கை மீனவர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தில் தமிழக அரசு கோரிக்கையை முன்வைத்துள்ளது. மீனவர்கள் தொடர்பான பிரச்சனையில் இந்திய – இலங்கை மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை விடுவிப்பது, ரோந்து நடவடிக்கையின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், மீனவர்களை மனிதாபிமான முறையில் கையாள்வது குறித்து மீன்வளத்திற்கான கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது. இதுவரை, ஐந்து சுற்றுகள் இந்தியா-இலங்கை கூட்டுப் பணிக்குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. 5 -வது கூட்டுப் … Read more

உ.பி: முஸ்லிம் பெண்களை பலாத்காரம் செய்வதாக மிரட்டிய துறவி – 11 நாட்களுக்குப் பிறகு கைது

சீதாபூர்: உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் பெண்களை மிரட்டும் வகையில் பேசிய துறவி 11 நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். உ.பி.யின் சீதாபூரில் மஹரிஷி ஸ்ரீ லஷ்மண் தாஸ் உதாஸி ஆசிரமம் உள்ளது. இதன் தலைமை பதவியில் மடாதிபதி மஹந்த் பஜ்ரங் முனி தாஸ் உள்ளார். இவர் கடந்த ஏப்ரல் 2-ல் சீதாபூரில் நடைபெற்ற ஒரு இந்துக்களின் ஆன்மீக ஊர்வலத்தில் கலந்து கொண்டார். வாகனத்தில் ஏகே 47 துப்பாக்கிகள் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு மஹந்த் பஜ்ரங் முனிக்கு அளிக்கப்பட்டுள்ளது. … Read more

தங்கம் வென்ற தமிழக கூடைப்பந்து வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: ரூ.42 லட்சம் ஊக்கத் தொகை

சென்னை: தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற கூடைப்பந்து வீரர் வீராங்கனைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.42 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (13.04.2022) தலைமைச் செயலகத்தில், 71-வது தேசிய அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளில், தங்கப்பதக்கம் வென்ற தமிழக ஆண்கள் அணிக்கு 30 இலட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாடு பெண்கள் அணிக்கு 12 இலட்சம் ரூபாயும், என மொத்தம் 42 லட்சம் … Read more

நாட்டிலேயே முதன்முறை: மத்திய அரசு உதவியுடன் தமிழகத்தில் அமைகிறது கடல்பாசி பூங்கா

சென்னை: மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்தில் கடல்பாசி பூங்காவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்திய கடல் பகுதியில் 844 வகையான கடல் பாசிகள் உள்ளன. இவற்றில் 60 இனங்கள் வணிகரீதியாக முக்கியமானவை. இதில்10 கடல் பாசி இனங்கள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. தமிழகத்தில் கடல்பாசி வளர்ப்பை மீனவர்களுக்கான மாற்று வாழ்வாதார நடவடிக்கையாக ஊக்குவிக்க மீன்வளத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து 1,926 மீனவப் பெண்கள் கடல் பாசி வளர்ப்பை … Read more

நியூயார்க் சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது

நியூயார்க்: புரூக்ளின் நகரத்தில் உள்ள சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை அமெரிக்க போலீஸ் கைது செய்துள்ளது. புரூக்ளின் நகரத்தில் உள்ள சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை நியூயார்க் போலீஸார் கைது செய்துள்ளனர். நேற்று புரூக்ளின் நகரத்தில் உள்ள சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என்ற போதிலும் 13 பேர் வரை படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அமெரிக்காவைத் தாண்டி உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில்தான் ஒரு நாள் … Read more

நடப்பாண்டில் மீனவ மக்கள் தொகை கணக்கெடுப்பு; பொருளாதார நிலை ஆய்வு மேற்கொள்ளப்படும்: தமிழக அரசு

சென்னை : தமிழக மீனவ மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்தாண்டு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக மீன்வளத்துறை மூலம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மீனவ மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதன்படி கடந்த 1978, 1986, 2000, 2010 ஆகிய ஆண்டுகளில் மீனவ மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தாண்டு மீனவ மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதைப்போன்று மீனவர்களின் பொருளாதார நிலை குறித்து ஆய்வினை … Read more

அபூர்வ நிகழ்வு | ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று தென்பட்ட ’நிழல் இல்லாத நாள்’

ராமேஸ்வரம்: ஒரு பொருளின் நேர் உச்சிக்கு சூரியன் வருவதால் உருவாகும் ‘நிழல் இல்லாத நாள்’ என்ற வானியல் அபூர்வ நிகழ்வு ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை தென்பட்டது. வருடத்தில் குறிப்பிட்ட இரண்டு நாட்களில் சூரியன் நம் தலைக்கு மேலே இருக்கும்போது நமது நிழல் எந்தப் பக்கமும் சாயாமல் காலடியில் இருக்கும். அதாவது, சூரியன் ஒரு பொருளின் மேல் செங்குத்தாக வரும் போது, அப்பொருளின் நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிறது. இதனை வானியல் ஆய்வாளர்கள் நிழல் பூஜ்ஜியம் (zero shadow) என … Read more

ஆய்வக அறிக்கை இல்லை என குற்றப்பத்திரிகைகளை திரும்ப அனுப்பக் கூடாது: கீழமை நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு 

மதுரை: குற்ற வழக்குகளில் ஆய்வக அறிக்கை இல்லை எனக் கூறி குற்றப்பத்திரிகைகளை திரும்ப அனுப்பக் கூடாது என்று கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாளையங்கோட்டையைச் சேர்ந்த ராஜபாண்டியன் பாளை. மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, ராஜபாண்டியனின் மகள் நிஷா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: … Read more

'விருந்துக்கு அழைப்பது கேலி செய்வதாக உள்ளது' – தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள்

சென்னை: தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக ஆளுநர் அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், இந்த விருந்தில் பங்கேற்க போவதில்லை என கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்): “தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் குரலையும், தமிழக மக்களின் கோரிக்கைகளையும் முற்றாக நிராகரிப்பதோடு, அரசுக்கு மேலானதொரு அதிகார மையமாக செயல்பட தொடர்ச்சியாக ஆளுநர் தரப்பில் நடவடிக்கை … Read more

'சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன்…' – சமத்துவ நாள் உறுதிமொழி | அரசாணை வெளியீடு

சென்னை: ‘அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி ‘சமத்துவ நாள்’ என்று கொண்டாடப்படும்’ என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து தமிழக அரசு உறுதிமொழி குறித்த அரசாணையை வெளியிட்டுள்ளது. முன்னதாக, சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “அண்ணல் அம்பேத்கர் வடக்கில் உதித்த சமத்துவ சூரியன்; பலர் வாழ்வில் கிழக்காய் இருந்த பகலவன்; சமூகம் ஏற்படுத்திய ஏற்றத் தாழ்வை, கல்வி, சட்டம், அரசியல் எழுச்சி மூலமாக சமப்படுத்திய போராளி; ‘இருட்டறையில் இருக்குதடா உலகம்; சாதி இருக்கிறதென்போனும் இருக்கின்றானே’ … Read more