26 நீரூற்றுகள், 2.5 லட்சம் மரக்கன்றுகள் | சிங்காரச் சென்னை 2.0-க்கு முக்கியத்துவம் தரும் மாநகராட்சி பட்ஜெட்டின் 20 அம்சங்கள்

சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ’சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மக்களால் தேந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கைக்கான மாமன்ற கூட்டம், ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த பட்ஜெட்டில் மேயர் பிரியா ராஜன் 64 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகளில் ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 20 முக்கியத் திட்டங்கள் பின்வருமாறு: > பாலின … Read more

‘டாடா நியு’ செயலி இயக்கத்தில் சிக்கலை எதிர்கொள்ளும் பயனர்கள்

டாடா நிறுவனத்தின் ‘டாடா நியு’ செயலியை பயன்படுத்தும் போது அதன் இயக்கத்தில் சில சிக்கல்களை எதிர்கொள்வதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர். மளிகை முதல் விமான டிக்கெட் முன்பதிவு செய்ய, யுபிஐ மூலம் பணம் அனுப்ப என பல்வேறு தேவைகளுக்கு ஒரே அப்ளிகேஷனை பயன்படுத்தும் நோக்கில் டாடா நிறுவனம் டாடா நியு மொபைல் போன் அப்ளிகேஷனை அறிமுகம் செய்தது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஐஓஎஸ் பயனர்கள் இந்த செயலியை இலவசமாக டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். இந்த செயலி குறித்து அறிந்த … Read more

20 வயது இளம்பெண்ணுக்கு 45 வயது முகத் தோற்றம்: சிகிச்சையளித்த சரிசெய்த கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள்

கோவை: 45 வயது பெண்ணுக்கான முகத்தோற்றம் கொண்ட 20 வயது இளம்பெண்ணுக்கு உறுப்பு அறுவை சிகிச்சை மூலம் கோவை அரசு மருத்துவர்கள் சிகிச்சையளித்து முகத்தை சரி செய்துள்ளனர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன் 20 வயது பெண் ஒருவர், தனது முகம் 45 வயதுபோல் தோற்றம் அளிப்பதாகவும், இடது புருவத்தில் முடி உதிர்ந்துவிட்டதாகவும் கோவை அரசு மருத்துவமனையின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பிரிவுக்கு வந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ‘பேரி ரோம்பெர்க் சின்ட்ரோம்’ என்ற அரிய … Read more

‘‘எங்களுக்கு வேறு வழியில்லை; கூடுதலாக 500 மில்லியன் டாலர் தாருங்கள்’’- இந்தியாவுக்கு இலங்கை ‘அன்பு’ நெருக்கடி

கொழும்பு: பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றுக்காக உறுதியளித்தபடி கடன் வரம்புக்குள் செயல்பட முடியாமல் தவிக்கும் இலங்கை, கூடுதலாக 500 மில்லியன் டாலர்கள் கடன் வரம்பை உயர்த்தி வழங்க வேண்டும் என இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கையிருப்பு டீசல் தீர்ந்து பெரும் நெருக்கடிக்கு இலங்கை ஆளானது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா 40,000 டன்கள் டீசலை உடனடியாக வழங்கியது. நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பெரும் ஆறுதலாக அமைந்தது. நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு 1 … Read more

2011-க்கு முன்பு பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பணியில் தொடர அரசாணை வெளியிடுக: முத்தரசன்

சென்னை: “ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பெரும் நெருக்கடியை சந்திக்கிறது. ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு உரிய சட்ட ஏற்பாடுகளை செய்து, 2011-ம் ஆண்டுக்கு முன்னர் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பணியில் தொடர அரசாணை வெளியிட வேண்டும்“ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்னர் ஆசிரியர் பணி நியமனம் பெற்றவர்கள் அனைவரும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற … Read more

உ.பி.,யில் நூதனத் திருட்டு:ரூ.25 லட்சத்தை மீட்ட ஐபிஎஸ் அதிகாரி இளமாறன்; தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு குவியும் பாராட்டு

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் கிரேட்டர் நொய்டாவில் 2000, 5000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை மாற்றும் பெயரில் நூதனத் திருட்டு நடைபெற்றுள்ளது. இந்த வழக்கில் கூடுதல் துணை ஆணையர் தமிழரான ஐபிஎஸ் அதிகாரி இளமாறன் தலைமையிலான படை ரூ.25 லட்சம் மீட்டுள்ளது. கிரேட்டர் நொய்டாவின் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அர்விந்த் குமார், ஹர்ஷத் எனும் மஹேஷ் மற்றும் பவண் குமார். இவர்களில் பவண் குமார் மட்டும் குஜராத்தைச் சேர்ந்தவர், இதர இருவரும் உபி.,வாசிகள்.இந்த மூவரும் குறுக்கு வழியில் பணம் … Read more

'எனக்கும் இந்தி தெரியாது' – பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தனின் பேச்சால் சென்னை மாமன்றத்தில் சிரிப்பலை  

சென்னை : “எனக்கும் இந்தி தெரியாது” என்று பாஜக உறுப்பினர் உமா ஆனந்தன் பேச்சால் சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது. சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய பாஜக உறுப்பினர் உமா ஆனந்த், “நமஸ்காரம். ஆங்கிலம், தமிழ் இரு மொழிகள் கலந்து நான் பேசுவேன் மன்னித்து விடுங்கள்” என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட திமுக உறுப்பினர்கள் இந்தியில் மட்டும் பேசிவிட வேண்டாம் என்று தெரிவித்தனர். இதற்கு பதில் … Read more

தனியார் மருத்துவமனைகளுக்கான கோவிஷீல்டு, கோவாக்சின் விலை ரூ.225 ஆக குறைப்பு

புதுடெல்லி: தனியார் மருத்துவமனைகளுக்கான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி விலை ரூ.225 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மையங்களில் பணம் செலுத்தி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதன்படி 2-வது டோஸ் செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மையங்களில் கட்டணம் செலுத்தி பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம். இந்தப் பணியானது நாளை முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தனியார் … Read more

பட்ஜெட் விலையில் அறிமுகச் சலுகையுடன் விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகியுள்ளது மோட்டோரோலாவின் மோட்டோ ஜி22. இந்த போன்.பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாகும் விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. மோட்டோ ஜி22 போன் ஜியோமி, ரியல்மி, இன்பினிக்ஸ் நிறுவனங்களின் பட்ஜெட் ரக போன்களுக்கு கடுமையான போட்டியாளராக இருக்கும் எனஹ் தெரிகிறது. வரும் 13-ஆம் தேதி ஆன்லைன் மூலம் இதன் விற்பனை ஆரம்பமாகிறது. இந்த போனுக்கு ஆயிரம் ரூபாய் அறிமுகச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை முதல் இரண்டு நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பம்சம் மற்றும் விலை: … Read more

புதுக்கோட்டை | டாஸ்மாக் கடையை மூடக் கோரி பாஜக, இடதுசாரி ஒன்றிணைந்து போராட்டம்

புதுக்கோட்டை: எதிரும் புதிருமான கொள்கைகளை உடைய இடதுசாரிகளும், பாஜகவினரும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரிய போராட்டத்தை இன்று ஒன்றிணைந்து நடத்தியுள்ளனர். ஆலங்குடி பழைய நீதிமன்றம் அருகே ஒரு டாஸ்மாக் மதுபானக் கடையும், அங்கிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் ஒரு டாஸ்மாக் மதுபானக் கடையும் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில், மேலும் ஒரு கடை திறப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், புதிதாக தொடங்க உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக்கோரி இந்திய … Read more