மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்வு: புதுச்சேரியில் அமல்

புதுச்சேரி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இதற்கான உத்தரவு அனைத்து அரசு துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. நாடு முழுவதும் கரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2020ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்த அகவிலைப்படி உயர்வை மத்திய … Read more

ரூ.1,034 கோடி நில மோசடி: சஞ்சய் ராவத் மும்பை சொத்துகள் பறிமுதல்: அமலாக்கத்துறை நடவடிக்கை

மும்பை: மும்பையில் ரூ.1,034 கோடி மதிப்புள்ள நில மோசடி தொடர்பான புகாரில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான நிலம், வீடு உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை இன்று பறிமுதல் செய்துள்ளது. மும்பை பிஎம்சி வங்கி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வங்கியில் இருந்து ரூ.95 கோடி கடன் பெற்றதாக கட்டுமான நிறுவன இயக்குனர்களில் ஒருவராக பிரவின் ராவத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். … Read more

இலங்கையில் பெரும்பான்மை இழந்த ஆளும் கூட்டணி அரசு: அதிபருக்கு எதிராக திரண்ட மாணவர்கள், வழக்கறிஞர்கள்

கொழும்பு: இலங்கையில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையை முற்றுகையிட்டு இன்று பெரும் போராட்டம் நடைபெற்றது. மாணவர்கள், வழக்கறிஞர்களுடன் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்களும் இதில் பங்கேற்றனர். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க … Read more

யூடியூப் வீடியோக்களை எளிதில் விரைந்து பகிர புதிய அம்சம்: ஸ்னாப்சாட்டில் அறிமுகம்

வாஷிங்டன்: மல்டிமீடியா மெசேஜிங் செயலியான ஸ்னாப்சாட் தளத்தில் பயனர்கள் யூடியூப் வீடியோக்களை சுலபமாக பகிரும் புதிய அம்சம் அறிமுகமாகியுள்ளது. இதன் மூலம் யூடியூப் வீடியோக்களை பயனர்கள் தங்களது நண்பர்களுடன் நேரடியாக பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட போன்களை பயன்படுத்தி வரும் ஸ்னாப்சாட் பயனர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம். தானியங்கு முறை ஸ்டிக்கர்கள் மூலம் இதனை சுலபமாக்கி உள்ளது அந்நிறுவனம். ஒவ்வொரு மாதமும் சுமார் 2 பில்லியன் லாக்-இன் பயனர்கள் … Read more

டாஸ்மாக் பார்களை 6 மாதங்களில் மூடும் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை 6 மாதங்களில் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில் , தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி மதுபாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. கரோனா ஊரடங்கால் பார்கள் மூடப்பட்டுள்ளதால், புதிய டெண்டருக்கு பதிலாக பழைய டெண்டர் நீட்டிக்க வேண்டும், நில உரிமையாளர்களின் … Read more

கேரளாவில் Post-wedding ஷூட்டின்போது ஆற்றில் மூழ்கி மணமகன் உயிரிழப்பு

கேரளா: கேரளாவில் திருமணத்திற்குப் பிந்தைய போட்டோஷுட் படப்பிடிப்பில் (Post-wedding shoot) நடந்த விபரீதத்தில் மாப்பிள்ளை உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Pre wedding – Post-wedding தற்போதுள்ள இளம் தலைமுறைகளிடத்தில் டிரெண்டிங்கில் உள்ள வார்த்தை. எவ்வளவு செலவழித்தாலும் இம்மாதிரியான புகைப்படங்களை எடுத்து விடுவதை தங்களது கவுரவமாகவே பலரும் கருதுகின்றனர். இப்புகைப்படங்களுக்காக ஆழ்கடல், ஆறு, மலை, விமானங்கள், நெருப்பு என எதையும் அவர்கள் விடுவதில்லை. இந்த நிலையில், கேரளாவில் Post-wedding நிகழ்வில் மாப்பிள்ளை உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. … Read more

மாணவர் சேர்க்கையில் புதுச்சேரி சென்டாக் முறைகேடு செய்ததாக திமுக புகார்

காரைக்கால்: புதுச்சேரியில் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் அமைப்பில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என திமுக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து காரைக்கால் திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான நாஜிம் இன்று(ஏப்.4) செய்தியாளர்களிடம் கூறுகையில், “புதுச்சேரி மாநிலத்தில் “சென்டாக்” அமைப்பில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. இதன் காரணமாக உரிய தகுதிகள் இருந்தும் மருத்துவம் படிக்க விரும்பிய புதுச்சேரி மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. சிறந்த அதிகாரி ருத்ர கவுடா சென்டாக் அமைப்பின் அமைப்பாளராக உள்ளார். தவறுகளுக்கு அவர் … Read more

தவறான தகவல்களை பரப்பியதற்காக 22 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை

புதுடெல்லி: இந்தியாவின் தேசப் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு உறவுகள் தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதற்காக 22 யூடியூப் சேனல்களை தடை செய்துள்ளது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம். இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின் 2021-இன் கீழ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது மத்திய அமைச்சகம். அதன்படி தவறான தகவல்களை பரப்பிய 22 யூடியூப் சார்ந்த செய்தி சேனல்கள், மூன்று ட்விட்டர் கணக்குகள், ஒரு ஃபேஸ்புக் கணக்கு மற்றும் ஒரு செய்தி நிறுவனத்தின் வலைதளத்திற்கும் தடை … Read more

உள்ளாட்சித் துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் நியமனத்தின் பின்னணி: முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்த தகவல்

விழுப்புரம்: பிரதமர் அலுவலகத்திலே பணியாற்றிக் கொண்டிருந்த அமுதா ஐஏஎஸ், தமிழக உள்ளாட்சித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டதன் பின்னணியை முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டம், ஒழுந்தியாம்பட்டில் நடைபெற்ற அரசு விழாவில் பேசும்போது, “என்னதான் இன்றைக்கு நான் முதல்வராக இருந்தாலும், ஏற்கெனவே நான் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற ஆட்சியிலேயே உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவன்தான் நான். அப்போது எல்லோரும் சொல்வார்கள், உள்ளாட்சித் துறையில் நல்லாட்சி நடத்துகின்ற நாயகன் என்று சொல்வார்கள். … Read more

இந்தியாவில் முஸ்லிம் பிரதமரானால்… – சாமியார் நர்சிங்கானந்த் சர்ச்சை கருத்து

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள தஸ்னா தேவி கோயில் தலைமை சாமியாராக இருப்பவர் யதி நர்சிங்கானந்த். ஹரித்துவாரில் நடந்த இந்து மகாபஞ்சாயத்து நிகழ்ச்சியில் மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சாமியார் நர்சிங்கானந்த் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடைபெற்ற இந்து மகா பஞ்சாயத்து நிகழ்ச்சியில் நர்சிங்கானந்த் பேசும்போது, ‘‘வரும் 2029 அல்லது 2034 அல்லது 2039-ம் ஆண்டு இந்தியாவில் முஸ்லிம் ஒருவர் பிரதமராக வருவார். … Read more