அமைதியும்; மகிழ்ச்சியும் பெற்றுத் திகழட்டும்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாளில் முதல்வர் வாழ்த்து

சென்னை: அமைதியும்; உடல்நலனும்; மகிழ்ச்சியும் பெற்றுத் திகழட்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் தமிழக ஆளுராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இன்று ஏப்ரல் 4ல் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பிறந்தநாளுக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது: ”தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். அமைதியும்; … Read more

முன்னெச்சரிக்கும் கருவியுடன் பார்வையற்றோருக்கு உதவும் ஸ்மார்ட் காலணிகள்; அசாம் சிறுவன் கண்டுபிடிப்பு

கவுகாத்தி: தடைகளை முன்னெச்சரிக்கும் கருவியுடன் கூடிய பார்வையற்றோருக்கு உதவும் ஸ்மார்ட் காலணிகளை அசாம் மாநிலத்தின் கரீம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு பயிலும் சிறுவன் உருவாக்கியுள்ளார். நம்மில் பலர் எதையாவது வித்தியாசமாக செய்யவேண்டும், சாதிக்கவேண்டும் என நினைத்து சாகசங்கள் என்ற பெயரில் எதைஎதையோ வினோதமாக செய்வதை பார்த்துவருகிறோம். ஆனால் மனிதநேயத்துடன் ஒரு கண்டுபிடிப்பில் ஈடுபடுவது என்பது சிலருக்கு மட்டுமே தோன்றுகிறது. அவ்வகையில் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரோலண்ட்ஸ் மெமோரியல் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவர் … Read more

ரசிகர்களின் வன்முறைகளை தடுத்திடுக; பிஸ்ட் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளை ரத்து செய்ய வேண்டும்: பால் முகவர் சங்கம் கோரிக்கை

ரசிகர்களின் வன்முறைகளை தடுக்கும் பொருட்டு பிஸ்ட் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழக பால் முகவர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து பொன்னுசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், “ நடிகர் விஜய் நடித்த #பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் சனிக்கிழமை வெளியான நிலையில் திருநெல்வேலி ராம் திரையரங்கில் டிரெய்லர் பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்க இருக்கைகளை அடித்து உடைத்து துவம்சம் செய்துள்ள நிகழ்வு கடும் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. பொறுப்பற்ற தன்மையோடு … Read more

கோவக்சின் சப்ளையை நிறுத்தும் உலக சுகாதார நிறுவனம்; செயல்திறன் காரணமல்ல என பாரத் பயோடெக் விளக்கம்

புதுடெல்லி: உலக சுகாதார நிறுவனம் கோவாக்சின் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ள விவகாரத்தில் தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு தொடர்பான எந்த அம்சமும் காரணம் இல்லை என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர், இந்தியன் வைராலஜி நிறுவனம் ஆகியவை இணைந்து கரோனா வைரஸுக்கு … Read more

சொத்து வரி உயர்வு; ஏழை, எளிய மக்களை வஞ்சித்துள்ளது திமுக அரசு : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

சொத்து வரியை உயர்த்தி, ஏழை எளிய மக்களை திமுக அரசு வஞ்சித்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில்‌ உள்ள கூடியிருப்புகள்‌, தொழிற்சாலைகள்‌ மற்றும்‌ வணிகப்‌ பயன்பாட்டுக்‌ கட்டடங்களுக்கான சொத்து வரியை உயர்த்தி, ஏழையெனியா மக்களை வஞ்சித்துள்ள தி.மு.க. அரசிற்கு கடும்‌ கண்டனம்‌ மதுபான விற்பனையாக இருந்தாலும்‌ சரி, நீட்‌ தேர்வாக இருந்தாலும்‌ சரி, பெட்ரோல்‌ – டீசல்‌ விலையாக … Read more

காஷ்மீர் பண்டிட்கள் மறுவாழ்வு மசோதா: மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. தாக்கல்

கடந்த 1990-களில் தீவிரவாதத் தால் காஷ்மீரை விட்டு லட்சக்கணக்கான பண்டிட் சமூகத்தினர் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் ‘காஷ்மீர் பண்டிட்கள் (உதவி, மறுசீரமைப்பு, மறுவாழ்வு மற்றும் மீள்குடி யேற்றம்) சட்டம் 2022′ என்ற தலைப்பில் மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் விவேக் தன்கா நேற்று முன்தினம் தனிநபர் மசோதா கொண்டு வந்தார். பண்டிட் சமூகத்தினருக்கு சமூக, அரசியல் மற்றும் பொருளாதார மறுவாழ்வு அளிப்பது, அவர்களின் சொத்துகளை பாதுகாப்பது, அவர் களின் கலாச்சார பாரம்பரியத்தை மீட்டெடுப்பது, பாதுகாப்பை உறுதிசெய்வது, அவர்களுக்கு மறுவாழ்வு மற்றும் … Read more

ரமலான் நோன்பு இன்று தொடக்கம்: தலைமை காஜி அறிவிப்பு

பிறை தென்பட்டதால் ரமலான் நோன்பு இன்று தொடங்குகிறது என்று அரசு தலைமை காஜி சலாஹுத்தீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ஏப்.3-ம் தேதி (இன்று) ரமலான் நோன்பு தொடங்கும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் நேற்றுவெளியிட்ட அறிவிப்பில், ‘‘ரமலான்மாத பிறை ஏப்.2-ம் தேதி (நேற்று)தென்பட்டதால், 3-ம் தேதி (இன்று)முதல் ரமலான் நோன்பு தொடங்குகிறது’’ என்று … Read more

ரூபே சேவை உட்பட பல்வேறு ஒப்பந்தங்கள்: இந்தியா – நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து – பிரதமர் மோடி, பிரதமர் தேவ்பா தொடங்கி வைப்பு

இந்தியா – நேபாளம் இடையே ரயில் போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடியும் பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பாவும் தொடங்கி வைத்தனர். அத்துடன் இரு நாடுகளுக்கு இடையிலான பல்வேறுஒப்பந்தங்களில் கையெழுத் திட்டனர். இந்தியாவுக்கு வருகை தர வேண்டும் என்று நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பாவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பா 3 நாள் பயணமாக கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவந்தார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தேவ்பா … Read more

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்புசென்னையில் உள்ள பாஜக மாநிலதலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன், அண்ணாமலைக்கு கொலைமிரட்டல் விடுத்த நெல்லையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப் பட்டார். தமிழகத்தில் திமுகவை அண்ணாமலை கடுமையாக விமர்சித்துவருகிறார். இதனால், அண்ணாமலைக்கு இருக்கக் கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தலை மத்திய நுண்ணறிவு பிரிவினர் ஏற்கெனவே மத்திய … Read more

போராட்டங்களை கட்டுப்படுத்த இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல் – 40,000 டன் அரிசியை அனுப்புகிறது இந்தியா: தலைநகர் கொழும்பு உட்பட முக்கிய நகரங்களில் ராணுவ வீரர்கள் குவிப்பு

போராட்டங்களை கட்டுப்படுத்த இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் உணவு தட்டுப்பாட்டை போக்க 40,000 டன் அரிசியை இந்தியா அனுப்புகிறது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. உணவு தானியங்கள், பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. நாள்தோறும் 13 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது. இலங்கை அரசை கண்டித்து மாகாண சபைகள், உள்ளாட்சி அமைப்பு அமைச்சர் ரோஷன் ரணசிங்க நேற்று பதவியை ராஜினாமா செய்தார். கடந்த .வியாழக்கிழமை … Read more