காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும்: அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தல்

அதிமுக கொறடாவும், சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘கவுன்சிலர், தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் அதிமுகவினர் வென்றதை திமுகவினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. காவல்துறையை பயன்படுத்தி, அதிமுகவினர் மீது பொய் வழக்குகளை பதிவு செய்து, துன்புறுத்தும் நடவடிக்கைகளில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இச்சம்பவத்தில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்ட ஒவ்வொரு காவல்துறையினர் மீதும் தனிப்பட்ட முறையில் நீதி கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என … Read more

கரோனா புதிய திரிபான எக்ஸ்இ வேகமாக பரவும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கரோனா வைரஸின் புதிய திரிபான எக்ஸ்இ மற்ற வகைகளைக் காட்டிலும் அதிவேகமாகப் பரவக்கூடியது என்று உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் உருவான கரோனா வைரஸ் உலகம்முழுவதும் பரவி வருகிறது. இது அவ்வப்போது உருமாறிக் கொண்டே இருக்கிறது. இந்த கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பல லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கரோனா வைரஸின் புதிய திரிபான எக்ஸ்இ பரவி வரகிறது. இது அதிவேமாக பரவக்கூடியது என … Read more

கட்டிட வகை, பரப்பளவுக்கு ஏற்ப 25 முதல் 150 சதவீதம் வரை – சொத்து வரியை உயர்த்தியது தமிழக அரசு: மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வரி அதிகரிப்பு

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் கட்டிடத்தின் வகை, பரப்பளவுக்கு ஏற்ப 25 முதல், 150 சதவீதம் வரை சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையம், தனது அறிக்கையில், 2022-23-ம் ஆண்டு முதல் உள்ளாட்சி அமைப்புகள், ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில், மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் வகையில் 2021-22-ம் ஆண்டில் சொத்து வரி தள விகிதங்களை அறிவிக்கை செய்ய வேண்டும். மாநில … Read more

காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமர் பாஜ்வா கருத்து

காஷ்மீர் உட்பட இந்தியாவுடனான அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி குவாமர் பாஜ்வா தெரிவித்துள்ளார். தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உலகின் மூன்றில் ஒரு பங்கு பகுதிகளில் ஏதாவது ஒரு வகையில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உக்ரைன் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். உக்ரைன், ரஷ்யா இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும். போரினால் உக்ரைனின் பாதி பகுதிஅழிந்துள்ளது. சிறிய நாடான உக்ரைனை … Read more

‘இந்து தமிழ் திசை’ நாளிதழை பாடங்கள் வாரியாக தொகுத்து மாணவர்களின் கற்றல் திறனை செம்மைப்படுத்தும் ஆசிரியர்: 4 ஆண்டுகளின் முயற்சிக்கு உந்து சக்தியாக திகழ்ந்தது என பெருமிதம்

‘இந்து தமிழ் திசை’ நாளிதழை கடந்த 4 ஆண்டுகளாக பாடங்கள் வாரியாக தொகுத்து மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை, பட்டதாரி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் செம்மைப்படுத்தி வருகிறார். நாளிதழ்களை வாசிப்பதுடன் கடந்து செல்பவர்களுக்கு மத்தியில், அதனை ‘கல்வி பெட்டகமாக’ பாதுகாத்து வருகிறார், திருவண்ணா மலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியம் ஆணைபோகி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ராதாகிருஷ்ணன். அவரது 4 ஆண்டு கால முயற்சிக்கு உந்து சக்தியாக திகழ்ந்துள்ளது, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ். … Read more

ஆயுள் தண்டனை கைதி யாசுதீனை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய வழக்கு: அரசு உத்தரவில் தலையிட உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், சமூகத்தில் மதரீதியிலான பிரச்சினைகள் ஏற்படும் எனக் கூறி ஆயுள் கைதியை முன்கூட்டியே விடுவிக்க மறுத்த தமிழக அரசின் உத்தரவில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. கோவையில் ஆர்எஸ்எஸ் பிரமுகரை கொலை செய்த வழக்கில், யாசுதீன் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, 2001-ம் ஆண்டு முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் ஆய்வு செய்ய வந்த சிறைத்துறை டிஐஜியை மிரட்டிய வழக்கிலும் யாசுதீன் தண்டிக்கப்பட்டார். இந்நிலையில், அண்ணா மற்றும் எம்ஜிஆர் … Read more

போக்சோ வழக்குகளில் திறமையுடன் புலனாய்வு மேற்கொள்ள பெண் காவல் அதிகாரிகளுக்கு பயிற்சி

சென்னை: போக்சோ வழக்குகளில் திறமையுடன் புலனாய்வு மேற்கொள்வதற்காக, பெண் காவல்துறை உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவலர்களுக்கான நடந்த ஒரு நாள் பயிற்சி முகாமினை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மகளிர் காவல் நிலையங்களில் போக்சோ சட்டப்பிரிவுகளில் பதிவு செய்யப்படும் வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு மேற்கொள்ளவும், வழக்குகளில் … Read more

குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் யாரும் டெண்டர் கோராத நிலையில் மதுரை ராஜாஜி பூங்கா

மதுரை: மதுரை ராஜாஜி பூங்காவில் குழந்தைகளுக்கான பொழுதுப்போக்கு அசம்சங்கள் எதுவும் இல்லாததால் 5 முறை டெண்டர் விட்டும் யாரும் எடுக்க முன்வரவில்லை. மீண்டும் 6 முறை டெண்டர்விட்டும் யாரும் எடுக்க முன்வராவிட்டால் மாநகராட்சியே பூங்காவை மேம்படுத்தி நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சுற்றுலா நகரான மதுரைக்கு ஆண்டுக்கு 2 கோடி வெளிநாட்டு சுற்றுலாப்பணிகள் வருகின்றனர். அவர்களை தவிர வெளிமாநில சுற்றுலாப் பயணிகள், தமிழகத்தின் பிற மாவட்ட சுற்றுலாப்பயணிகள் அதிகளவு மதுரையை சுற்றிப்பார்க்க வருகின்றனர். அதனால், மதுரையில் கடந்த … Read more

கோவை | பயிற்சி மைய விடுதியில் கல்லூரி மாணவி தற்கொலை: போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை

கோவை: கோவை நீட் பயிற்சி மைய விடுதி அறையில் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம், கோவில்பாளையம் அருகேயுள்ள கொண்டையம்பாளையத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையம் உள்ளது. இம்மையத்தில் தற்போது 65 மாணவிகள் உட்பட 130 பேர் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர். இப்பயிற்சி மையத்தில், சீரநாயக்கன்பாளையம் அருகேயுள்ள, கருமலை செட்டிபாளையம், பாரதி வீதியைச் சேர்ந்த … Read more

மதுரை | சித்திரைப் பொருட்காட்சி திட்டமிட்டப்படி தொடங்கப்படுமா? – ஏற்பாடுகளுக்கு இன்னும் டெண்டர் விடாததால் சந்தேகம்

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழா பொருட்காட்சி ஏற்பாடுகளுக்கு இன்னும் டெண்டர் விடப்படாததால், திட்டமிடப்படி இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா நாட்களில் பொருட்காட்சி நடப்பது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மதுரை சித்திரைத் திருவிழா நாட்களில் தமுக்கம் மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரங்குகள் அமைத்து சித்திரைப் பொருட்காட்சி நடத்தப்படும். இந்த ஆண்டு தமுக்கம் மைதானத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.45.5 கோடியில் வர்த்தக மையம் அமைக்கப்படுகிறது. அதனால், தமுக்கம் மைதானத்தில் போதுமான இடவசதியில்லாததால் மாநகராட்சிக்கு சொந்தமான மாட்டுத்தாவணி அருகே … Read more