இந்தியா மீது நேசம், என் மீது கோபம் ஏன்? – அமெரிக்காவிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேள்வி

இஸ்லாமாபாத்: கடந்த பிப்ரவரி 23, 24-ம் தேதி களில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ரஷ்யாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அந்த நேரத்தில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியது. இதன்காரணமாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் இம்ரான் மீது கடும் அதிருப்தியில் உள்ளன. தற்போது பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதாரநெருக்கடி எழுந்துள்ளது. இதையடுத்து இம்ரான்கானை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 342 எம்பிக்களில் இம்ரான் கானுக்கு 140 … Read more

இன்று யுகாதி: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: யுகாதி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தெலுங்கு, கன்னட மொழி பேசும்மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி,முதல்வர் ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: ஆளுநர் ஆர்.என்.ரவி: யுகாதி,குடி பத்வா, செட்டி சந்த் போன்றபண்டிகைகள் வரக்கூடிய இந்தமங்களகரமான தருணத்தில், தெலுங்கு, கன்னடம், மராத்தி, சிந்தி மொழி பேசும் என் சகோதர, சகோதரிகளுக்கு நல்வாழ்த்துகள். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், அன்பையும், நல்லிணக்கத்தையும் பரப்பி, இந்தியாவை வளமான நாடாக மாற்ற உறுதியுடன் ஒன்றுபடுவோம். முதல்வர் … Read more

பெண் குழந்தைகளை வரம்புமீறி காட்சிப்படுத்தினால் போக்சோ பாயும் – கனிமொழி எம்.பி. கேள்விக்கு அமைச்சர் ஸ்மிருதி பதில்

புதுடெல்லி: வரம்பு மீறி குழந்தைகளை காட்சிப்படுத்துவது போக்சோ சட்டத்தின் தண்டனைக்கு உரியது என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி விளக்கம் அளித்துள்ளார். மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி எழுப்பிய கேள்விக்கானப் பதிலாக இதனை அவர் தெரிவித்தார். திமுக மகளிர் அணிச் செயலாளரும் மக்களவை திமுக குழுத் துணைத் தலைவருமான கனிமொழி எழுப்பியக் கேள்வியில், “இணைய தொடர்கள், திரைப்படங்கள் போன்ற பொழுதுபோக்குத் துறைகளில் பல பெண் குழந்தைகளும் நடிக்கின்றனர். அவர்களில் பலர் எடுக்கப்படுகிற … Read more

அவசரநிலை பிரகடனம்: அடுத்தது என்ன? – இலங்கை நிலவரத்தின் 10 அண்மைத் தகவல்கள்

கொழும்பு: இலங்கையில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டவைகளை எதிர்த்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்ட வந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்.2) அதிபர் கோத்தபய ராஜபக்சே,அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார். அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த 11 கூட்டணிக் கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும், அங்கு ஆட்சியைக் கலைத்துவிட்டு ஒரு காபந்து அரசை அமைக்க வேண்டும் என்று ஒரு அறிக்கையை கொடுத்திருந்தார்கள். இந்த கோரிக்கையைத் தொடர்ந்து, அவசர நிலை பிரகடன அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், … Read more

'சொத்து வரி உயர்வு ட்ரெய்லர்தான்; மக்களுக்கு பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன' – எடப்பாடி பழனிசாமி சாடல்

சென்னை: சொத்து வரி உயர்வு வெறும் ட்ரெய்லர்தான் இனிவரும் காலங்களில் மக்களுக்குப் பல பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றன என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக 600 சதுர அடிக்கும்‌ குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு, 25 சதவீதம்‌ சொத்து வரியும் உயர்த்தப்படுகிறது. 600-க்கு மேல்‌ 1200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம்‌ சொத்து … Read more

தனியார் சொகுசு பேருந்தில் ரூ.4.76 கோடி பணம் பறிமுதல்

கோபாலபுரம்: ஆந்திராவில் தனியார் சொகுசு பேருந்தில் கடத்தப்பட்ட ரூ. 4.76 கோடி பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். தனியார் சொகுசு பேருந்தில் ரூ.4 கோடியே 76 லட்சம் மற்றும் நகைகள் கடத்தப்படுகிறது எனும்ரகசிய தகவல் கிடைத்ததும், ஆந்திர மாநிலம், மேற்கு கோதா வரி மாவட்டம் போலீஸார் நேற்று காலை தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப் போது, நல்லஜர்லு மண்டலம், வீரபள்ளி சோதனை சாவடியில் விஜயநகரத்தில் இருந்து குண்டூர் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தை நிறுத்தி … Read more

ரஷ்யாவின் எண்ணெய் கிடங்கு மீது உக்ரைன் ஹெலிகாப்டர்கள் தாக்குதல்

மாஸ்கோ: ரஷ்யாவின் எண்ணெய் கிடங்குமீது உக்ரைன் முதல்முறையானவான்வழித் தாக்குதல் நடத்திய தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேட்டோ அமைப்பில் சேரும் முடிவை எதிர்த்து உக் ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்த தாக்குதல் 37-வது நாளாக நேற்றும் நீடித்தது. உக்ரைனின் பல்வேறுபகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள ரஷ்யா, இப்போது உக்ரைன் தலைநகர் கீவை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் வான் தாக்குதல் காரணமாக உக்ரைன் நகரங்களில் உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதே … Read more

டெல்லியில் திமுக அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்: சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்

சென்னை: டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார். இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்திஉள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. கடந்த 2006-ம் ஆண்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் 7 எம்.பி.க்களை கொண்ட கட்சிக்குடெல்லியில் அலுவலகம் அமைக்கஇடம் ஒதுக்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதன் அடிப்படையில் எம்.பி.க்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 500 சதுரமீட்டர் முதல் 4 ஏக்கர் வரை நிலம் ஒதுக்க உத்தரவிடப்பட்டது. … Read more

விமான நிறுவன இணையத்தை ஹேக் செய்த பொறியாளர்

பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூரை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் நந்தன் குமார். இவர் அண்மையில் பிஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து பெங்களூருக்கு இன்டிகோ விமானத்தில் பயணம் செய்தார். வீட்டுக்கு வந்தபோது அவருடைய பெட்டி மாறி இருந்தது தெரியவந்்தது. இதுகுறித்து தகவல் தெரிவித்தும் விமான நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை. அதிருப்தி அடைந்த நந்தன் குமார் விமான நிறுவன இணை யத்தை ஹேக் செய்தார். அதில் இருந்து சக பயணியின் தொடர்பு எண்ணை கண்டுபிடித்தார். அவரை நேரடியாக தொடர்பு கொண்டு … Read more

சென்னையில் ரோந்துப் போலீஸாரை மிரட்டிய விவகாரம்: திமுக கவுன்சிலரின் கணவர் மீது வழக்கு

சென்னை: சென்னையில் ரோந்துப் போலீஸாரை மிரட்டிய விவகாரத்தில், திமுக கவுன்சிலரின் கணவர் மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேர் மீது வண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை ராயபுரம் கிழக்குப் பகுதி, 51-வது வார்டு திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன். இவர், கடந்த 29-ம் தேதி நள்ளிரவு ராயபுரம் எம்.சி சாலை ஜே.பி. கோயில் சந்திப்பில், தனது ஆதரவாளர்கள் 5 பேருடன் சேர்ந்து, கும்பலாக நின்று பேசிக் கொண்டு இருந்துள்ளார். அவர்கள் மது அருந்தியிருந்ததாகவும், … Read more