உ.பி.யில் ’பள்ளிக்கு செல்லுங்கள்’ திட்டம்: 5 ஆண்டுகளில் ஒரு கோடி மாணவர்களை சேர்க்க யோகி இலக்கு

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிக்க ஏப்ரல் 4 முதல், ‘பள்ளிக்கு செல்லுங்கள்’ திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க அம்மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் இலக்கு நிர்ணயித்துள்ளார். மீண்டும் பாஜக ஆட்சி தொடரும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்னும் கல்வியறிவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்காக அங்கு ஆளும் அரசுகள் எடுத்த பல முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. குறிப்பாக உத்தரப் … Read more

சென்னையில் 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் – முதல்வர் ஸ்டாலின் உடன் FIDE தலைவர் சந்திப்பு

புதுடெல்லி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் (FIDE) தலைவர் டிவோர்கோச் ஆர்கடி சந்தித்தார். இருவரும், சென்னையில் நடைபெற உள்ள 44-வது சர்வதேச சதுரங்கப் போட்டி குறித்து கலந்துரையாடினர். இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதற்கான பெருமை வாய்ந்த இடமாக சென்னை தேர்வு செய்யப்பட்டிருக்கும் சூழ்நிலையில், உலகமே கொண்டாடும் வகையிலான இந்நிகழ்வினை சிறப்பானதாகவும், வெற்றிகரமாகவும் நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்திடவும், அதற்கான … Read more

அதிகாரமிக்க இந்திய தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம்

புதுடெல்லி: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் இந்தியாவின் அதிகாரமிக்க 100 பிரமுகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். கரோனா பரவல், 3 புதிய வேளாண் சட்டங்கள் போன்ற சில காரணங்களால் பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்துவிட்டதாக விமர்சகர்கள் கூறிவந்தனர். ஆனால், 5 மாநில தேர்தலில் பாஜக 4 மாநிலங்களில் வென்றது, உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்டது, கரோனா தடுப்பூசியை பரவலாக கொண்டு சேர்த்தது போன்ற நடவடிக்கைகள் மோடியின் செல்வாக்கை மேலும் … Read more

பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 15 வயது சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கலைக்குமார். இவரது மனைவியும் ஆசிரியர். கடந்த 2011- ல் கணவன், மனைவி இருவரும் பள்ளிக்கு சென்று விட, இவர்களின் 15 வயது மகளும், 5 வயது மகனும் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிறுமியை பாலியல் … Read more

ஆயுதப் படை சிறப்பு அதிகார பகுதிகள் குறைப்பு: அமித் ஷா தகவல்

புதுடெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் அங்கு ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டம் (ஏஎப்எஸ்பிஏ) அமலில் உள்ளது. இந்த சட்டம் நடைமுறையில் உள்ள பகுதிகளில் ராணுவத்தினர் யாரை வேண்டுமானாலும் கைது செய்ய முடியும். எங்கும் சோதனை நடத்த முடியும். ராணுவ நடவடிக்கையில் யாரேனும் உயிரிழந்தால் மத்திய அரசின் ஒப்புதலின்றி விசாரணை நடத்த முடியாது. இந்த சட்டம் அமலில் இருக்கும் பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும் எனவே இந்த சட்டத்தை நீக்க வேண்டும் … Read more

’இந்தியாவுடன் நட்பு பாராட்டும் அந்த வல்லரசு பாக். மீது மட்டும் கோபமாக உள்ளது’ – இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: தனது ரஷ்ய பயணத்தால், வல்லரசு நாடு ஒன்று பாகிஸ்தான் மீது கோபமாக உள்ளது. அதே நேரத்தில் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவுடன் நட்பு பாராட்டுகிறது என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத் பாதுகாப்பு உரையாடலில் இம்ரான்கான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ஒரு நாட்டிற்கு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை மிகவும் முக்கியமானது. பாக்கிஸ்தானால் அதன் உச்சக்கட்ட திறனை அடைய முடியாததற்கு காரணம், அது மற்ற சக்தி வாய்ந்த நாடுகளை சார்ந்திருப்பது தான். … Read more

ஏப்ரல் 1: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 1) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,52,857 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.31 வரை ஏப்ரல். 1 … Read more

ரஷ்ய வெளியுறவு அமைச்சருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு 

புதுடெல்லி: இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நடந்தது. முன்னதாக செர்கெய் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், “ரஷ்யாவிடமிருந்து இருந்து இந்தியா ஆயுதங்கள் உள்ளிட்ட வேறேதும் வாங்க விரும்பினால் நாங்கள் அது குறித்து ஆலோசிக்கத் தயாராக இருக்கிறோம். இந்தியா ஒரு முக்கியமான தேசம். இந்தியா … Read more

திமுக உறுப்பினரை தாக்கிய விவகாரம்: அதிமுகவை சேர்ந்த 20 பேருக்கு முன்ஜாமீன்

சென்னை: கள்ள ஓட்டு போட வந்த திமுகவை சேர்ந்தவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கிய வழக்கில் அதிமுகவை சேர்ந்த 20 நபர்களுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் கள்ளஓட்டு போட சென்றதாக திமுகவை சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பிப்ரவரி 20-ம் தேதி கைதான ஜெயக்குமாருக்கு … Read more

விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ரஷ்யாவில் படிக்கும் இந்திய மாணவர்களும் தவிப்பு

விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு, பணப் பரிமாற்ற சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளால் ரஷ்யாவில் படிக்கும் இந்திய மாணவர்களும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்துவரும் போர் 38 நாட்களைக் கடந்து விடைதெரியாமல் நீடித்து வருகிறது. உக்ரைனில் போரில் பாதிக்கப்பட்ட 18 ஆயிரம் மாணவர்கள் பல்வேறு இன்னல்களைக் கடந்து பத்திரமாக இந்தியா மீட்டு வரப்பட்டுள்ளனர். இதேபோன்று இந்தியாவில் இருந்து மருத்துவ படிப்புக்காக ரஷ்யாவுக்கு சென்ற மாணவர்கள் 16 ஆயிரத்து 500 பேர் உள்ளனர். அமெரிக்கா … Read more