நிர்மலா சீதாராமனுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: ரூ.20,860 கோடியை விடுவிக்க கோரிக்கை

புதுடெல்லி: 4 நாள் சுற்றுப் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்துக்கான ரூ.20,860.40 கோடியை விடுவிக்க முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் உள்ள நிதித்துறை அமைச்சகத்துக்கு காலை 10.30 மணிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து, தமிழகத்தின் நிதி தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதன் விவரங்கள்: > 14வது நிதிக்குழு உள்ளாட்சி … Read more

35 டாலர்கள் தள்ளுபடி; ரூபாய்- ரூபிளில் பரிவர்த்தனை: இந்தியா வருகிறது ரஷ்யாவின் முதல்தர கச்சா எண்ணெய் 

புதுடெல்லி: இந்தியாவுக்கு முதல் தரமான கச்சா எண்ணெயில் பீப்பாய் ஒன்றுக்கு 35 டாலர்கள் தள்ளுபடி விலையில் வழங்க ரஷ்யா முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி டாலர்கள் இல்லாமல் ரூபிள்- ரூபாயில் பரிவர்த்தனை செய்யவும் ரஷ்யா தயாராக உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் … Read more

வில் ஸ்மித்தை கைது செய்ய போலீஸ் தயாராகவே இருந்தது: ஆஸ்கர் நிகழ்ச்சிக் குழு

லாஸ் ஏஞ்சல்ஸ்: மேடையில் கிறிஸ் ராக்கை அறைந்த வில் ஸ்மித்தை கைது செய்ய போலீஸார் தயாராகவே இருந்ததாக ஆஸ்கர் நிகழ்ச்சித் தயாரிப்புக் குழு தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை நடந்த ஆஸ்கர் விருது விழாவை பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் தொகுத்து வழங்கினார். அப்போது, வில் ஸ்மித்தின் மனைவி ஜாடா ஸ்மித்தைப் பார்த்து, “ஜிஐஜேன் (அப்படத்தின் மைய கதாப்பாத்திரமான கதாநாயகி மொட்டை அடித்திருப்பார்) படத்துக்கு தயாராகி கொண்டிருக்கிறீர்களா?” என்று நகைச்சுவை தொனியில் கேட்டார். இதனால் கோபம் அடைந்த வில் … Read more

வன்னியர் இடஒதுக்கீடு | '5 மாதங்களில் 6 தடைகள் தகர்ப்பு… எஞ்சிய ஒன்றை கடக்கத் தெரியாதா?' – பாமகவினருக்கு ராமதாஸ் கடிதம்

சென்னை: “வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு எதிராக இருப்பது ஒரே ஒரு முட்டுக்கட்டை தான். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் குறித்த தெளிவான புள்ளிவிவரங்கள் இல்லை என்பதுதான் அதுவாகும். ஐந்து மாதங்களில் 6 தடைகள் தகர்த்தெறிந்த நமக்கு, மீதமுள்ள ஒற்றை முட்டுக்கட்டையை அரசியல் போராட்டத்தின் மூலம் கடக்கத் தெரியாதா?” என்று பாமகவினருக்கு எழுதிய கடிதத்தில் அக்கட்சின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து இன்று ‘நாமின்றி சமூக நீதியில்லை… நிச்சயம் வெல்வோம் கலங்காதே!’ என்ற தலைப்பில் அவர் தனது கட்சியினருக்கு … Read more

72 மாநிலங்களவை எம்.பி.க்கு பிரிவு உபச்சார விழா

புதுடெல்லி: மார்ச் முதல் ஜூலை மாதம் வரை மாநிலங்களவையில் 72 எம்.பி.க்களின் பதவிக் காலம் நிறைவடைகிறது. அதன்படி ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, அம்பிகா சோனி, ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், சுரேஷ் பிரபு, பிரபுல் படேல், சுப்பிரமணியன் சுவாமி, சஞ்சய் ராவத், மேரி கோம், ரூபா கங்குலி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்டோரின் பதவிக் காலம் முடிகிறது. பதவிக் காலம் நிறைவடையும் எம்.பி.க்களுக்கு குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடு தலைமையில் … Read more

ஜவுளித் தொழிலை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல பஞ்சு விலையை குறைக்கவும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தின் பிரதானத் தொழில்களில் ஒன்றான ஜவுளித் தொழிலை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வழிவகுக்கும் வகையில், பஞ்சு விலையை குறைக்க மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தேசிய மற்றும் மாநிலப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் துறையாகவும், தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநில மக்களுக்கும் வேலைவாய்ப்பினை உருவாக்கித் தருகின்ற துறையாகவும், அந்நியச் செலாவணியை … Read more

உ.பி. தேர்தலுக்காக அமைந்த சமாஜ்வாதி கூட்டணியில் பிளவு? – சித்தப்பா ஷிவ்பால் மீண்டும் விலகுவதால் 2024 தேர்தலில் அகிலேஷுக்கு சிக்கல்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் உடன்பிறந்த சகோதரர் ஷிவ்பால் சிங் யாதவ். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தார். கடந்த 2016-ல் உ.பி. முதல்வராக இருந்த முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவுக்கும் ஷிவ்பால் சிங்குக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சமாஜ்வாதி கட்சியை விட்டு விலகி பிரகதீஷில் சமாஜ்வாதி கட்சி – லோகியா (பிஎஸ்பிஎல்) என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் 2017 சட்டப்பேரவைத் தேர்தல், 2019 மக்களவைத் தேர்தலில் … Read more

பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு உதவ அனுமதி கோரினார்

சென்னை: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசு உதவி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். மேலும், நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவையும் அளித்துள்ளார். டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலய கட்டிட திறப்பு விழா ஏப்.2-ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் … Read more

மாநிலங்களவையில் காலியாகும் 13 இடங்களுக்கான தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி தலா 5 இடங்களில் வெற்றி

புதுடெல்லி: மாநிலங்களவையில் விரைவில் காலியாக உள்ள 13 இடங்களுக்கான தேர்தலில், பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளைச் சேர்ந்த தலா 5 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கேரளாவில் இடது முன்னணிக்கு 2 இடமும் காங்கிரஸ் கட்சிக்கு ஓரிடமும் கிடைத்துள்ளது. பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, கேரளா, அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் விரைவில் காலியாக உள்ள 13 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பஞ்சாபிலிருந்து ஆம் ஆத்மி கட்சியின் 5 பேர், நாகாலாந்து, இமாச்சலப் பிரதேசத்திலிருந்து பாஜகவைச் சேர்ந்த … Read more

இலங்கையில் பதற்றம்: அதிபர் மாளிகை முற்றுகை: கடும் வன்முறை; கொழும்பு நகரில் ஊரடங்கு 

கொழும்பு: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதிபர் மாளிகை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் நேற்று நடத்திய போராட்டத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதனையடுத்து கொழும்பு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு … Read more