ஆவணப்படம், குறும்படம் தயாரிப்பு உட்பட நான்கு திரைப்பட அமைப்புகள் என்எப்டிசி உடன் இணைப்பு

புதுடெல்லி: நான்கு திரைப்பட அமைப்புகள் தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்துடன் (என்எப்டிசி) இணைக்கப்பட்டுள்ளன. ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்களைத் தயாரிப்பது, திரைப்பட விழாக்கள் நடத்துவது,படங்களைப் பாதுகாப்பது போன்றவற்றை தனித்தனி அமைப்புகள் செயல்படுத்துகின்றன. இதுதொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள 4 திரைப்பட அமைப்புகளை மத்திய அரசு நிறுவனமான தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்திற்கு மாற்றி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டது. இது தொடர்பாக 3 உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன்மூலம் திரைப்படம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் … Read more

வன்னியருக்கான 10.5% உள் இடஒதுக்கீடு செல்லாது: சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்; தமிழக அரசு, பாமக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி

சென்னை: வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் பாமக தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (எம்பிசி) 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பிப்ரவரியில் எம்பிசி பிரிவில் உள்ள வன்னியர் … Read more

மார்ச் 31-ம் தேதியுடன் கெடு முடிந்தது; ஆதார்-பான் இணைக்காதவருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்: வருமான வரித்துறை அறிவிப்பு

புதுடெல்லி: வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும். இதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மார்ச் 31-ம் தேதி ஆகும். இவ்விதம் இணைக்காதவர்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இவ்விதம் இணைக்காத நிரந்தர கணக்கு எண் (பான்) ஓராண்டுக்கு செல்லுபடியாகும். இதன் மூலம் மார்ச் 2023 வரை வருமான வரி ரிட்டர்னை தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார்-பான் … Read more

திமுக அலுவலக திறப்பு விழா | டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் இன்று பிரதமர் மோடி, அமித் ஷாவுடன் சந்திப்பு

சென்னை: புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை முதல்வர் இன்று சந்திக்கிறார். நாடாளுமன்ற இரு அவை களிலும் 7 எம்.பி.க்களை கொண்ட கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்க கடந்த 2006-ம் ஆண்டு மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி, திமுகவுக்கு 2013-ம் ஆண்டு, டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா … Read more

விருதுநகர் பாலியல் வழக்கு | குற்றம் நடந்த குடோனில் கைதானவர்களிடம் விசாரணை 

விருதுநகர்: விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள திமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேரில் இருவரை குற்றம் நடந்த குடோனுக்கு அழைத்துவந்து சிபிசிஐடி போலீஸார் இன்று (மார்ச் 31) காலை விசாரணை மேற்கொண்டனர். விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், அவரது நண்பர்களான திமுக நிர்வாகி ஜூனத்அகமது, பிரவீன் மற்றும் மாடசாமி ஆகியோரும் பள்ளி மாணவர்கள் 4 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஹரிஹரன் உள்ளிட்ட … Read more

'சுங்கக் கட்டணங்களையும் உயர்த்தி மக்களை வதைப்பதா?' – மத்திய அரசுக்கு தினகரன் கண்டனம்

சென்னை: பெட்ரோல் விலை உயரும் நிலையில், சுங்கக் கட்டணங்களையும் உயர்த்தி மக்களை வதைப்பது நியாயமா? என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், சுங்கக் கட்டணங்களையும் நாளைமுதல் (ஏப்.1) உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சுமார் 24 இடங்களில் சுங்கக் கட்டணம் அதிகரிக்கிறது. மத்திய அரசின் இந்த முடிவை பல்வேறு அரசியல் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து தினகரன் … Read more

விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் பாஜக அரசு படுதோல்வி அடைந்துள்ளது: முத்தரசன் விமர்சனம்

சென்னை: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவதில் மத்திய பாஜக அரசு படுதோல்வி அடைந்துள்ளது என்று தமிழக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக மத்திய அரசு பன்னாட்டு நிதி மூலதன சக்திகளுக்கும், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஆதரவானக் கொள்கைகளை தீவிரமாகி செயல்படுத்தி வருகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு வரிச் சலுகை வழங்கி வரும் பாஜக மத்திய அரசு மறைமுக வரி செலுத்தி வரும் … Read more

10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து | உச்ச நீதிமன்ற தீர்ப்பு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது: அன்புமணி ராமதாஸ்

புது டெல்லி: கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்து செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் … Read more

10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து; சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்து செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இதுதொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர் உள்ளிட்ட சில சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தனது … Read more

திருப்பத்தூர் பயங்கரம் | லாரி மீது வேன் மோதியதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு;  27 பேர் படுகாயம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே தேசிய நெடுசாலையில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன், ஒட்டுநரின் கட்டுப்பட்டை இழந்து மறுபுறம் எதிரே வந்த லாரி மீது மோதியதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், வேனில் பயணம் செய்த 27 பெண்கள் படுகாயமடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம் கன்னிகாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தோல் தொழிற்சாலையில் 1,500-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வரும் பெண்களை அழைத்து … Read more